ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் சம்பளத்தில்தமிழ்நாடு காவல்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

Published:

web Employment story - 2026

ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் சம்பளத்தில்தமிழ்நாடு காவல்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு????????
????????
தமிழ்நாடு காவல்துறையின்கீழ் செயல்பட்டு வரும் SBCID-இல் நிரப்பப்பட உள்ள 37 ஜூனியர் ரிப்போர்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Jinior Reporter

காலியிடங்கள்: 37

சம்பளம்: மாதம் ரூ.36,200 – 1,14,800

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் தட்டச்சு செய்வதில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழக அரசால் வழங்கப்படும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து சான்றிதழ், ஆபிஸ் ஆட்டோமேசன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

???? தேர்வு செய்யப்படும் முறை:????

சுருக்கெழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

90 மதிப்பெண்களுக்கு சுருக்கெழுத்து தேர்வும், 10 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.

சுருக்கெழுத்து தேர்வில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், தமிழில் 90 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் இடம்: சென்னை

???? விண்ணப்பிக்கும் முறை:????

தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்களையும் ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து சுய சான்று செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2nd Floor, Old Coastal Security Group Building, DGP Office Complex, Mylapore, Chennai-4

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.03.2019
???? தினசரி. காம்????

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Related articles

Recent articles

spot_img