October 26, 2021, 12:40 am
More

  ARTICLE - SECTIONS

  வீடியோ பொறுக்கிகளும் விட்டில் பூச்சிகளும்!

  lady sleep - 1

  முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேலை மேலே முள்ளு விழுந்தாலும் பாதிப்பு பொம்பளைகளுக்குத்தான்னு பெரியவங்க தெரியாமலா சொன்னாங்க.!

  வீடியோ பொறுக்கிகளை உச்சபட்ச தண்டனையாகத் தூக்கிலே போடணும்.
  இல்லேங்கலே.. ஆனால், பெண்கள் கவனமா இருக்க வேண்டாமா?

  டிக்டாக்கிலே வயசு வித்தியாசம் இல்லாமல் பெண்கள் தங்களை எக்ஸ்போஸ் பண்ணிக்கற அளவு வந்துட்டீங்க. கொஞ்சம் கூட கூச்ச நாச்ச மில்லையாம்மா!

  புடவைத் தலைப்பை நீளமாக விட்டு இழுத்துச் செருகிக் கொண்டு போன காலம் போய் அபரிமிதமாக வெளிப்படுத்திக் கொள்ளும் மென்டாலிடி எதனால் வந்தது.?

  படிப்பா ..? பணமா..?

  இரண்டும் இல்லை.  விஷமத்தனமாக பெண்ணீயம் என்ற பெயரில் விதைக்கப்பட்ட கம்யூனிச /ஈவெராயிஸ்ட் கருத்துகளால்..

  ஆந்திராவிலே ஒரு காட்டுக்குள்ளே குகைக்கு பதினாறு பதினேழு வயசுப் பொண்ணு இன்னொரு கூடப் படிக்கிற பையனோடு போகுது. காதலா இது..?அங்கே பொறுக்கிகள் அந்தப் பொண்ணை சிதைச்சு கொன்னும் போட்டு அந்தப் பையனையும் அடிச்சதுல குத்துயிரா கிடக்கிறான்.

  பொண்ணுகளா…. படிங்கம்மா! நல்ல நிலைமைக்கு வாங்க. கஷ்டப்பட்டு படிக்க வெச்ச உங்கப்பன் ஆத்தாளை நல்லவிதமா பாத்துக்கிடுங்க.
  நேர்மையான காதலோ பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ அதன் பின்னும் குடும்பம் சிறப்பதில் உங்க பங்கிருக்கு கண்ணுங்களா..

  உங்க குழந்தைகளை நல்ல புள்ளைகளா வளர்க்கணும்னா அதுங்களுக்கு ஒரு ஐடியல் அம்மாவா நீ இருக்க வேண்டாமா..?

  கம்யூனிச சிந்தனாவாதி என்று அறியப்பட்ட பாரதிதாசனின் குடும்ப விளக்கை ஒரு முறை படிச்சுப் பாருங்க.

  குடும்பம் என்பது கண்ணுக்குத் தெரியாத அன்பெனும் நூலிழையால் குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் கட்டப்பட்டிருப்பது புரியும்.

  பெண்ணுக்குப் படிப்பு அவசியம்னு பாரதியார் முதல் அத்தனை பெரியோர்களும் குரல் கொடுக்கக் காரணம் ஒரு பெண்கள் கல்வியறிவு பெற்றால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமின்றி சமுதாய ஒழுங்கு மேம்படும் என்றுதான்.

  இருகோடுகள் படத்தில் நாகேஷ் பாரதியாக ஒரு பாடலில் வந்து கேட்பார்.

  “அறிவைத்தானே வளர்க்கச் சொன்னேன். ஆடையை நானா குறைக்கச் சொன்னேன்” என்று.

  இன்னிக்கு நீங்க படிச்சதுக்கு அர்த்தமே இல்லாம பண்றீங்களேம்மா.
  படிப்பு என்பது வெறும் பாடப் புத்தகம் மட்டும்தான்னு நினைக்கிறியா பொண்ணே..

  இல்லடா… படிப்பைத் தாண்டி வாசிப்பு. நாம எப்படிப் பட்டவற்றைப் படிக்கணும் கற்கணும் வாசிக்கணும்னு ஏற்படக் கூடிய தெளிவே கல்வி கொடுத்த அறிவு. அது புரியலைன்னா 99% எடுத்துப் பாஸ் பண்ணினாலும் வேஸ்டுடா கண்ணுங்களா..

  இணையதளம் என்பது நம்முடைய கருத்துகளை வெளிப்படுத்த நமக்குக் கிடைத்த வாய்ப்பு. அவ்வளவே. இது காதல் பண்ணும் களமல்ல ! இங்கே ஏமாறுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம்னு தெரியாத கூறு கெட்டவளாம்மா நீனு..

  மறுபடியும் சொல்றேன். நீயாப் போனாலும் அவனுகளா வந்தாலும் நட்டம் உனக்கு. உன் குடும்பத்துக்கு. உன்னை பெத்தவங்க. நீ சின்னக் குழந்தை உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு அளவற்ற நம்பிக்கை வெச்சுருப்பாங்க..
  அவங்களுக்கு துரோகம் பண்ணாதே.

  இனியாச்சும் சூதானமா நடந்துக்க.

  இப்படிக்கு
  உங்கள் அம்மா ஸ்தானத்தில் கீதா சுரேஷ்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,587FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-