
செங்கோட்டை தஞ்சாவூர் தெருவில் யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வடகத்திஅம்மன் கோவிலில் வைத்து ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம்.
இந்த ஆண்டு நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் வடகத்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபஆராதனை நடத்தப்பட்டு விழா துவங்கியது. விழாவிற்கு தஞ்சாவூர் தெரு யாதவர் சமுதாய நாட்டாமை சின்னத்தம்பியாதவ் தலைமைதாங்கினார்.
சமுதாய நிர்வாகிகள் பண்டாரம்யாதவ், பொன்னுச்சீனியாதவ், திருமால்யாதவ், கோபால்யாதவ் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
இளைஞரணி செயலாளர் அருண்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடர்ந்து விழாவில் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு டாக்டர் கிருஷ;ணன், விஜயகோபால்யாதவ் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
பின்னர் இரவு சிறுவர், சிறுமியர்கள் கிருஷ;ணன், இராதை வேடமணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர்.
அதனைதொடர்ந்து இளைஞர்களுக்கான உறியடி நிகழ்ச்சி மற்றும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சமுதாய நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினர்.
விழாவில் இளைஞரணி நிர்வாகிகள்; ரவியாதவ், சூர்யா, விக்கி, கார்த்திக், மற்றும் சமுதாய நிர்வாகிகள் கடற்கரையாண்டி, துரை, சுடலைமுத்து, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி இணைச்செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.



