December 6, 2025, 1:17 AM
26 C
Chennai

“குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!”

kanchi periyava - 2025

“குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!”
“கணபதி சுப்ரமண்யன்னு பேர்வைச்சது அதுக்காக மட்டும்
இல்லை.கணபதி முதல்ல வந்தாச்சுன்னா, அடுத்து
சுப்ரமண்யன் வரணும் இல்லையா”(குழந்தை இல்லாத மற்றொரு புள்ளைக்கும் அனுகிரஹம்
பண்ணின பெரியவா)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-20-04-2017 தேதியிட்ட குமுதம் பக்தி
(சுருக்கமான ஒரு பகுதி)

ஒரு சமயம் வழக்கமா மடத்துக்கு வந்து ஆசார்யாளை தரிசிக்கறவா கூட்டம் அதிகமாவே இருந்தது.

அந்த கூட்டத்துல சென்னைல அப்போ பிரபலமா இருந்த ஆடிட்டர் குடும்பமும் இருந்தது.
பட்டம்,பதவின்னு எத்தனை இருந்தாலும் பரமாசார்யா முன்னால எல்லாரும்
சமம்தானே! அதனால, எல்லாரையும்போல அவாளும் பெரிய வரிசையில தங்களோட முறைக்காக காத்துண்டு மெதுவா நகர்ந்து வந்துண்டு இருந்தா.

இப்படி வரிசை நகர்ந்துண்டு இருக்கறச்சே,அந்த ஆடிட்டர் குடும்பத்தோட முறை வந்தது.சாஷ்டாங்கமா நமஸ்காரம் செஞ்சார் ஆடிட்டர்.அவரோட வந்திருந்தவாள்ல ஒரு பெண்மணி தன் கையில் இருந்த பச்சைக் குழந்தையை
பெரியவா முன்னால ஒரு துண்டுல விட்டுட்டு, தான் நமஸ்காரம் பண்ணினா.

எழுந்துண்ட ஆடிட்டர், ” பெரியவா இவன் என்னோட பேரன். குடும்பத்துக்கு மொத வாரிசு. பொறந்து மூணு மாசம் ஆறது. பெரியவா வந்து அனுகிரஹம் பண்ற பேரைத்தான் வைக்கணும்னு காத்துண்டிருந்தோம். யாத்திரை முடிச்சுட்டு
நீங்க மடத்துக்கு வந்துட்டேள்னு தெரிஞ்சுது.இதோ உங்க கடாட்சம் வேண்டி
குழந்தையை எடுத்துண்டு வந்துட்டோம். நீங்கதான் குழந்தைக்கு நாமகரணம் செஞ்சுவைக்கணும், தழுதழுப்பா சொன்னார்.

குழந்தையை கொஞ்சநாழி உத்துப்பார்த்தார்,மகாபெரியவா. அன்னிக்கு சங்கடஹர சதுர்த்திங்கறதால மடத்துல ஒரு இடத்துல சில வேதவித்துக்கள் கூடி கணபதிக்கு உரிய மந்திரங்களைச் சொல்லிண்டு இருந்தா. அந்த கோஷம் எங்கேர்ந்து வருதுன்னு பார்க்கறாப்புல குழந்தை மெதுவா மெதுவா தலையைத் திருப்பித்து.

“குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!” அப்படின்னார்,ஆசார்யா.

“ரொம்ப சந்தோஷம் பெரியவா.குழந்தைக்கு நீங்க நாமகரணம் பண்ணிவைச்ச இந்த நாள் சதுர்த்திங்கறது காலத்துக்கும் ஞாபகத்துல இருக்கறாப்ல கணபதி சுப்ரமண்யன்னு பேர் வைச்சிருக்கேள். அதோட சுப்ரமண்யன்கறது எங்க குல தெய்வமான பழனி ஆண்டவனோட பேராவும் அமைஞ்சுட்டதுல எங்களுக்குப் பரம சந்தோஷம்!” சொன்ன ஆடிட்டர்,குழந்தையைத் தூக்கிண்டார். பிரசாதம் வாங்கிண்டு புறப்படத் தயார் ஆனார்.

“ஒரு நிமிஷம் நில்லு. கணபதி சுப்ரமண்யன்னு பேர்வைச்சது அதுக்காக மட்டும்
இல்லை.கணபதி முதல்ல வந்தாச்சுன்னா, அடுத்து சுப்ரமண்யன் வரணும் இல்லையா.அண்ணா வந்தாச்சுன்னா, அடுத்து தம்பியும் வரணுமே! அதனாலதான் கண்பதி சுப்ரமண்யன்னு பேர் வைச்சேன். என்ன புரியறதா?” சொன்ன
பெரியவா ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்.

இது நடந்து ரெண்டு மாசம் ஆச்சு. அதே ஆடிட்டர் இப்போ தன்னோட ஆத்துக்காரி, மூணு புள்ளைகள், மூணு மாட்டுப் பொண்கள்,குழந்தை கணபதி சுப்ரமண்யன்னு  எல்லாரோடேயும் பெரியவாளைத் தரிசிக்க வந்தா.

ஆசார்யா முன்னால நின்னதும் ஆடிட்டரோட உடம்பு லேசா நடுங்கித்து. ரொம்பவே உணர்ச்சிவசப்படறார் அவர்ங்கறது பார்த்தாலே புரிஞ்சுது. “பெரியவா..நீங்க நிஜமாவே தெய்வம்தான். போனதரம் நான் இங்கே வந்தப்போ,குழந்தைக்கு நாமகரணம் பண்ணணும்னு மட்டும்தான் உங்ககிட்டே கேட்டுண்டேன்.ஆனா,சொல்லாத பெரிய விஷயம் மனசுக்குள்ளே பாறாங்கல்லாட்டமா அழுத்திண்டு இருந்தது.எனக்கு மூணு புள்ளைகள்மூத்தவனுக்கு கல்யாணமாகி ஆறேழு வருஷமா குழந்தையே இல்லை. ரெண்டாவது புள்ளைக்கு கல்யாணமாகி ஒரே வருஷத்துல இவன் பொறந்துட்டான். மூத்தவனுக்கு இன்னும் குழந்தை பாக்யம் உண்டாகலையேன்னு மனசுக்குள்ளே மறுகிண்டு இருந்தேன்.

பெரியவா தெய்வ வாக்காட்டம் கணபதி வந்துட்டான்.அடுத்து சுப்ரமண்யன் வருவான்னு சொன்னேள்இதோ இப்போ என்னோட மூத்த நாட்டுப்பெண்ணும் உண்டாகி இருக்கா. டாக்டர்லாம் பரிசோதிச்சுட்டு, மூணுமாசம் ஆகறது.கரு நன்னா உருவாகி இருக்குன்னு சொல்றா.

இத்தனைகாலம் போகாத கோயில் இல்லை. வேண்டாத தெய்வம்இல்லை அன்னிக்கு இங்கே வர்றச்சேகூட உங்ககிட்டே விண்ணப்பிச்சுக்கணும்னு நினைச்சுண்டுதான் வந்தேன். ஆனா, ஒருத்தனோட குழந்தைக்கு நாமகரணம் செய்யறச்சே, இன்னொருத்தனோட குறையை பேசவேண்டாமேன்னு
தோணித்து. ஆனா, நீங்க அதையெல்லாம் எப்படியோ தெரிஞ்சுண்டு, அப்படி ஒரு வாக்கைச் சொன்னேள். ஒரு பெண்ணுக்கு எப்ப சூல்உண்டாகும்கறது பரமேஸ்வரனுக்கு மட்டுமே தெரியும்னு சொல்லுவா. அந்த வகையில நீங்களும் அந்த சாட்சாத் பரமேஸ்வரனாகவே எனக்குத் தெரியறேள்!”

தழுதழுக்க சொன்ன ஆடிட்டர். அப்படியே சாஷ்டாங்கமா பெரியவா திருப்பாதத்துல விழுந்து நமஸ்காரம் செஞ்சார்.

“இதுல எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. எல்லாம் அந்த சந்திரமௌளீஸ்வரரோட அனுக்ரஹம்” அப்படீங்கற மாதிரி கொஞ்சமும் பெருமைப்பட்டுக்காம, அமைதியா இருந்தா பெரியவா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories