
இந்து என்று கூறப்படும் சனாதன தர்மத்தை நம்புகிறவர்கள் எல்லோருக்கும் பகவத்கீதை பரம பிரமானமானது ஆச்சாரியாள் சங்கரர் ஆரம்பித்து எல்லாரும் வேதங்களுக்கும் பகவத்கீதைக்கும் வியாக்கியானம் எழுதினார்கள் ஜனங்களுக்கு அந்த தத்துவத்தை அப்பொழுது தான் சொல்ல முடியும் என்று தீர்மானித்தார்கள்.
பகவத் கீதையை தினந்தோறும் சிறிதாவது படித்துக்கொண்டு இருந்தால் மிகச் சிரேஷ்டமானது என்று பகவத்பாத சங்கரர் கூறினார் எவ்வளவு தூரத்திற்கு என்றால்
”பகவத்கீதா கிஞ்சிதகீதா கங்கா ஜலலவ கணிகா பிதா பலக்ரூதபி ஏன முராரி ஸமர்சா க்ரியதே தஸ்யயமனே நஸர்ஜா”
என்று சொன்னார்.

தினந்தோறும் சிறிதளவாவது பகவத் கீதை படித்தால் பகவானை பூஜை செய்து கொண்டிருந்தால் பவித்ரமான தீர்த்தத்தை சேவித்தால் எமனுடைய பயமே உனக்கு இருக்காது என்று சொன்னார். கீதையின் அர்த்தத்தை தெரிந்து கொள்வது என்பது பின்பு. முதலில் கீதையை நம் வாயால் சொன்னாலே போதும் நமக்கு எம பயம் இருக்காது என்று பகவத்பாத சங்கரர் போன்ற மகான் சொல்ல வேண்டி இருந்தால் பகவத் கீதையின் பெருமை எப்பேர்ப்பட்டது என்று நாம் ஊகிக்க முடியும்.
அது பகவான் கிருஷ்ண பரமாத்மா நமக்கு அனுக்கிரகம் செய்த சகல உபநிஷத்துக்களின் சாரம் ஆனது. பகவத் கீதையில் பகவான் சொன்ன ஒரு வசனத்தை ஒரு உபதேசத்தை ”ஸமக்ர ஜனதை” முழு ஜனங்களுக்கு என்று அர்த்தம் ஞாபகம் வைத்துக்கொண்டால் போதும்.

நான் அநேகம் தடவைகள் சொல்லி இருக்கிறேன் எனக்கு அதுதான் வேலை என்ன வசனம் என்று கேட்டால்
ஸ்ரேயான் ஸ்வதர்மோவிபுண: பரதர்மோ பயாவஹ:
வர்ண தர்மம் செய்பவர் தர்மம் என்ற ஒரு வசனத்தை எல்லோரும் என்றைக்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் உன்னுடைய தர்மம் தான் நீ என்றைக்கும் ஆசரணம் பண்ண வேண்டியது இந்த சனாதன தர்ம பரம்பரையில் நீ பிறந்திருக்கிறாய் என்றைக்கும் இந்த தர்மத்தை விடக்கூடாது

ஸ்வதர்மமே நிதனம் ஸ்ரேயா:பரதர்மோ பயாவஹ:இந்த வசனத்தை எல்லோரும் என்றைக்கும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய உன்னுடைய தர்மம் தான் நீ என்றைக்கும் ஆர் சரணம் பண்ண வேண்டியது இந்த சனாதன தர்மம் பரம்பரையில் நீ பிறந்திருக்கிறாய் என்றைக்கும் இந்த தர்மத்தை விடக்கூடாது.
தர்மமே நிதனம் ஸ்ரய: இந்த தர்மத்தை அனுஷ்டித்து அதிலேயே உன் சரீரத்தை விட்டாலும் அது உனக்கு ஸ்ரேஷ்டம் இதை விட்டுவிட்டு தர்மத்தை அனுஷ்டிக்க போனாயோ வேறு தர்மத்தை அனுஷ்டிக்க போனாயோ அது மகா பெரிய அபராதம்
நாம் இன்றைக்கு பல கோடிக்கணக்கில் இருக்கும் சனாதனிகள் இந்த சூத்திரத்தை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டோம் ஆனால் நம்முடைய பிரச்சினைகள் எல்லாம் தீரும் பகவான் அருள் செய்த இந்த உபதேசத்தை மறந்து நாம் புறப்பட்டோமேயானால் நம்முடைய பிரச்சினைகள் என்றைக்கும் தீராது.

ஸ்ரேயான் ஸ்வதர்மோ விபுணர பரதர்மார் ஸவணஷ்டிதா: என்கிற சூத்திரம் இப்பேர்ப்பட்ட மகா சூத்திரத்தை பகவத் கீதையிலே நமக்கு அருள் செய்கிறார் இதை மட்டும் நாம் யாரும் கவனிப்பதில்லை.
இன்று எல்லோருக்கும் பெரிய மன வருத்தம் கோ வதை நடக்கிறதே என்று. நிஜமாக நம்முடைய சனாதன தர்மத்தை நாம் அவசியம் காப்பாற்றுவோம் என்கிற நிச்சயம் நமக்கு இருந்தால் கோ வத நிரோதம் என்பதில் அதில் அடக்கமாகவே இருக்கிறது சனாதன சித்தாந்தத்தில் எந்தப் பிராணியையும் ஹிம்சிக்க கூடாது என்று இருக்கும்போது இனி கோ வை கொல்லலாம் என்று எங்கேயாவது சொல்லி இருக்குமா?
மா ஹிம் ஸ்யாத்ஸர்வா பூதானி என்பதே நம் கொள்கை யாருக்குமே இம்சை பண்ணாதே என்று சொல்லும்போது அதிலேயும் சாது பிராணியான கோ வை ஹிம்சிப்பது என்பது எவ்வளவு தூரத்திற்கு ஞாயம்? இந்த விஷயத்தில் கோ வதை தடுக்க வேண்டும் என்று எல்லோரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் பரிதாபமான மனிதன் எத்தனை முறை தன்னுடைய அபிப்ராயங்களை வெளியில் சொன்னாலும் அது நடப்பது கஷ்டம் ஆனால் அதிகாரம் உள்ளவன் அந்த விஷயத்தை ஓரளவாவது காரியம் நடத்தலாம் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்னிடம் ஒருவர் கேட்டார்.
நான் சொன்னேன் ஒரு ஆச்சரியமான சங்கதி என்னவென்றால் நம்முடைய ராஜாங்கத்தில் நம்முடைய நேஷனல் அனிமல் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம் அப்படி நம்முடைய சட்டம் சொல்லிவிட்டது அதாவது புலியை யாரும் கொல்லக் கூடாது அந்த யோக்யத்தை பாசுவுக்கு வரவில்லை என்பதால் ரொம்ப வருத்தப்படக்கூடிய விஷயம். புலி என்பது குரூரமான பிராணி யாரை கண்டாலும் கொல்லும்.

அதுவே பசு என்பது அதி சாதுவான பிராணி. அது நமக்கு எத்தனை உதவிகளை செய்கிறது. அதனிடமிருந்து நாம் எவ்வளவு நன்மைகளைப் பெறுகிறோம்.
நேஷனல் அனிமல் இந்த வார்த்தைக்கு பசு என்பது ஆகவில்லை என்பது இதுவரை ரொம்பவே வருத்தப்படக்கூடிய விஷயம் ஆனால் நம்முடைய ராஜாங்கத்தில் இந்த பசு என்பதை நேஷனல் அனிமல் என்று சொல்லிவிட்டார்கள் என்றால் நாம் இனி கோ வதையை தடுக்க வேண்டும் என்பதற்கு பிரத்யேகமான வேறு எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
ஆனால் அதிகாரம் உள்ளவர்கள் முயற்சி எடுக்கலாம். நாமோ ஒரு முயற்சியை மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது அதற்கு அதிகாரம் யார் கையில் இருக்கிறது அவர்களுக்கு பகவான் நல்ல பிரேரணையை கொடுக்க வேண்டும் என்கிறது ஒன்று தான் நம் பகவானை பிரார்த்தனை செய்ய முடியும். என்று ஆச்சார்யாள் மகாசன்னிதானம் அவர்கள் அருளுரை வழங்குகிறார்கள்.