Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்பஞ்சாயுத ஸ்தோத்திரம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

பஞ்சாயுத ஸ்தோத்திரம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

5ayutham - Dhinasari Tamil

பஞ்சாயுதம்_ஸ்லோகம்

உலகில் பிறந்த அனைவருக்கும் கடமைகள் கண்டிப்பாக இருக்கும்.

அதேபோல் பகவானின் பாஞ்சாயுதத்திற்கும் கடமைகள் உண்டு.

பகவான் அவதரிப்பதற்கு முன் பஞ்சாயுதங்கள் அவதரிப்பார்கள்.

பூமியில் தர்மத்தை நிலை நாட்டுவார்கள்

அதர்மம் மிகவும் அதிகமாக இருக்கும் போது தான் பகவானே நேரடியாக அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுவார்.

இது ஒவ்வொரு யுகத்திலும் இது சுழற்சி போல நடக்கும்.

பகவானின் ஒரு சிறு அம்சமே பஞ்சாயுதம் என்றாலும் பகவானுக்கு இருக்கும் அதே சக்தி இவர்களுக்கும் உண்டு.
அனைத்தும் பகவானுக்குள் அடக்கம்.

பஞ்சாயுதத்தை வழிபடுவதால் பகவானை நெருங்கும் பாக்யம் நமக்கு கண்டிப்பாக கிட்டும்.

ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்:

தினமும் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யுங்கள்
ஸ்ரீஹரியின் திருக்கரங்களிலுள்ள பஞ்ச ஆயுதங்கள் உங்களுக்குத் தேனான வாழ்வு கிட்டச் செய்யும். ஸ்ரீ ஹரியின் திருவருளும், அதனால் ஸ்ரீதேவியின் அருளும் உங்கள் இல்லம் வந்து சேரும்.
குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிலைக்கும்.
பரம எதிரிகள் சக்தியிழப்பர்.

1) சுதர்சனம் – சக்கரம்

ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்மி
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!

தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும்,
வல்லமை பொருந்தியதும்,
கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போலப் பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.

2) பாஞ்சஜன்யம் – சங்கு

விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்யத்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே!

மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளி வரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும், தனது கம்பீர ஓசையால்
அசுரர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.

3) கௌமோதகம் – கதை

ஹிரண்மயீம் மேரு ஸமான ஸாரம்
கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம் வைகுண்ட வாமாக்ரகரா பிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதான கௌமோதகம் என்ற கதையை சதா சரணமடைகிறேன்.

4) நந்தகம் – வாள்

ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேதக்ஷரச் சோணித திக்ததாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி, செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் எனும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடைகிறேன்.

5) சார்ங்கம் – வில்

யஜ்ஜ்யாநீ நாத ஸ்ரவபணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பர்ணவர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக்கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் சரணமடைகிறேன்.

இமம் ஹரே: பஞ்சமஹாயுதாநாம
ஸ்தவம் படேத் யோ அநுதிநம் ப்ரபாதே
ஸமஸ்தது:காநி பயாநிஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி

உயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தைப் பெற்றவையுமான பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும் அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்.

வநேரணே சத்ரு ஜலாக்நிமத்யே
யத்ருச்சயா பத்ஸு மஹாபயேஸுமி
இதம் படன் ஸ்தோத்ர நாகுலாத்மா
ஸுகிபவேத் தத்க்ருத ஸர்வரக்ஷ:

வனங்களிலும் யுத்த யூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துகளின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் ஸ்துதியைச் படித்தாலும் கேட்டாலும் கூட ஆபத்துகளிலிருந்து விடுபட்டு ஸ்ரீமந் நாராயணனின் பரிபூரண அருள் பெற்று சகல நன்மைகளையும் அடைவர்.

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,079FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,948FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

Ak 61: தொடங்கியதா ஷூட்டிங்..?

அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில்...

நம்ப மாட்டோம்… இது நீங்க இல்ல… பெயிண்டிங்!

உங்க ஆத்துக்கார் அரண்மனை4 உங்கள வச்சி எடுக்கலாம் போலயே.. குண்டு குஷ்புதான் தமிழர்களின் ஃபேவரைட் ப்யூட்டி

புஷ்பா பட பாடலுக்கு இரயிலில் இளைஞரின் அட்டகாசம்! வைரல்!

புஷ்பா திரைப்படப் பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு...

அகண்டா: ஓடிடி ரீலிஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி...

Latest News : Read Now...