December 5, 2025, 2:03 PM
26.9 C
Chennai

ருஷி வாக்கியம் (46) – அட்சதை போடுவது எதற்காக?

rice2 - 2025
நம் கலாசாரத்தில் அட்சதை என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பூஜைகளில் பயன்படுத்துகிறோம். ஆசீர்வாதம் செய்யும் போது அட்சதை போடுவதை பார்த்திருக்கின்றோம். அரிசியை அட்சதை வடிவில் பயன்படுத்துகிறோம்.

ஆனால் அரிசி ‘க்ஷதம்’ ஆகாமல் இருக்க வேண்டும். அதாவது அரசி உடையாததாக இருக்க வேண்டும். உடையாத அரிசியை நீரில் களைந்து மஞ்சள் பொடி சேர்த்து அட்சதையாக பயன்படுத்துகிறோம். சில இடங்களில் அரிசியுடன் கும்குமம் கலந்து அதில் ஒரு சொட்டு நெய்யோ எண்ணெயோ கலப்பதுண்டு. அவ்வாறு செய்து வைக்கும் போது அதனை நீண்டநாள் உபயோகிக்க முடியும். நீரில் களைந்து மஞ்சள் கலக்கும் போது அதனை உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும். நெய்யும் குங்குமமும் கலந்து தயாரித்த அட்சதை மறுநாள் கூட பயன்படுத்த முடியும்.

உடைந்த அரிசியை எப்போதும் அட்சதைக்கு உபயோகிக்கக் கூடாது என்பதால் தெரிந்தோ தெரியாமலோ உடைந்த அரிசி ஒன்றிரண்டு அதில் இருந்துவிடும் என்பதால் மஞ்சள் குங்குமம் போன்ற மங்களகரமான திரவியங்களை அதில் சேர்க்கும்போது அட்சதை பவித்திரமாக மாறுகிறது.

அதே போல் சில காரியங்களின் போது அரிசியில் மஞ்சளோ குங்குமமோ கலக்காமல் உபயோகிப்பர். பித்ரு கர்மா செய்யும் போது அவ்வாறு வெள்ளை அரிசியை உபயோகிப்பதைப் பார்க்கிறோம். ருத்ரார்ச்சனையில் கூட மஞ்சளும் குங்குமமும் கலக்காமல் வெறும் அரிசியை நீரில் நனைத்து சிறிது ஆற வைத்து உபயோகிப்பார்கள். அதனை ‘ஸ்வேதாக்ஷதை’ என்பார்கள்.

மொத்தத்தில் அரிசி அந்த மந்திர சக்தியை ஏற்றுக்கொண்டு நமக்கு மீண்டும் அளிப்பதால் அரிசியை அக்ஷதையாக பயன்படுத்துகிறோம்.

அதோடுகூட தானியங்களில் அரிசி சந்திரனோடு தொடர்புடையது. சந்திரன் மனதிற்கு அதிபதி. மனதின் இயல்பான எண்ண சக்தி சந்திரனின் தொடர்பு கொண்ட அரசி எனப்படும் தானியத்தில் இருக்கிறது என்பதால் அதனை அட்சதைக்கு உபயோகிக்கிறோம். இதன்மூலம் எண்ண சக்திக்கு பலம் கொடுப்பது அட்சதை என்பதை அறிய முடிகிறது.

அட்சதை என்றவுடனே அரிசி என்றோ மஞ்சள் குங்குமம் என்றோ பொருள் கொள்வதைவிட ‘அட்சதை’ எனும் சொல்லுக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது என்பதை அறிய வேண்டும்.

புண்ணியாகவசனம் செய்யும்போது அட்சதை குறித்த சிறந்த மந்திரம் சொல்வார்கள். அப்போது சிலர் தாம்பாளத்தில் உள்ள அட்சதை மீது கை வைப்பார்கள். அதுவல்ல அங்கு முக்கியம். அட்சதை என்ற மந்திரம் அங்கு முக்கியமானது.
rice1 - 2025
அதன் பொருளை இப்போது பார்ப்போம்.‘க்ஷதம்’ என்றால் நாசம், குறைவுபடுதல் என்று பொருள்படும். அக்ஷதம் என்றால் அழிவில்லாதது, குறையாதது என்று பொருள். அங்கு எந்த பாவனையை ஆசீர்வாத வடிவில் அளிக்கிறோமோ அது அழியாதபடி முழுமையாக பலிக்க வேண்டும் என்ற எண்ணம் அங்கு முக்கியம்.

அந்த ஆசிகளுக்கு வடிவமாக வெளியில் தெரியும்படியாக நாம் கையில் அட்சதையை வைத்துக்கொண்டிருக்கிறோம். அங்கு அந்த மந்திர சக்தி அக்ஷதம், அதாவது நாசமில்லாதது, குறையாதது. அதுவே அங்கு உச்சரிக்கப்படும் மந்திரத்தின் பலன்.

அழியாத சத்தியம் அந்த மந்திரத்தில் பொருந்தியுள்ளது. ஏனென்றால் அந்த மந்திரம் ருஷிகள் அளித்தல்லவா! எனவே ருஷிகள் அளித்த மந்திரங்களெல்லாம் அக்ஷதைகளே! அவை நாசமடையாதவை. இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே பெரியவர்கள் ஆசி அளிக்கும் போது நம் மீது போடும் பொருள் அல்ல அட்சதை. அவர்களின் எண்ணம் அட்சதையாக இருக்கும். அவர்களின் ஆசிகள் அழியாத பலனைக் கொடுக்கும்.

“தீர்க்காயுஷ்மான் பவ”, “கல்யாண பிராப்திரஸ்து”, “ஞானவான் பவ” என்று இவ்விதம் வாழ்த்துவார்கள். அவ்வாறு வாழ்த்தும் போது அந்த வாழ்த்துக்களே அட்சதைகள்! அழிவடையாமல் முழுமையாக பலிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அட்சதை. அந்த மந்திரத்திலேயே அக்ஷதை உள்ளது.

அதனால் அட்சதை என்ற சொல்லைக் கேட்டவுடன் நாம் அரிசியை நினைக்க வேண்டிய தேவை இல்லை. அது ஒரு எண்ணத்திற்குச் செயல் வடிவில் பயன்படுத்தப்படும் பொருள் மட்டுமே!

அட்சதை என்னும் சொல் வேதத்தில் காணப்படுகிறது. ரிக் வேதத்தில் ஒரு மந்திரம் உள்ளது. “சிசு தாயின் கர்ப்பத்தில் ஒன்பது மாதங்கள் சுகமாக உறங்கி, பத்தாவது மாதம் அட்சதையாக தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வர வேண்டும்” என்ற ஆசிகள் இந்த மந்திரத்தில் வெளிப்படுகிறது. “தாயின் கர்ப்பத்தில் பிரவேசித்த ஜீவன் சிசு வடிவம் எடுத்து வளர்ந்து எந்த அழிவுமின்றி நன்கு வேலை செய்யும்படியான அனைத்து அவயவங்களோடும் நல்லவிதமாக வெளியே வரவேண்டும்” என்பது வேதமந்திரத்தின் விருப்பம். இங்கே ஜீவனை, “அட்சதையாக இருப்பாயாக!” என்று வாழ்த்துகிறது வேதம்.

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் ஜீவனிடம் கூட அட்சதை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அந்த சிசு நிலையிலிருந்தே ஜீவன் அக்ஷதமாக குறைவின்றி முழுமையாக இருக்க வேண்டும் என்பது இதன் கருத்து. சிசுவின் உடலுறுப்புகளோ, புத்திசக்தியோ எதுவும் குறைவுபடாமல் முழுமையாக இருக்க வேண்டும்.

அதேபோல் சிசு பிறந்த பின்பும் வாழ்நாள் முழுவதும் அக்ஷதமாக அதாவது பூரணமாக இருக்க வேண்டும்.

தாயின் கர்ப்பத்தில் அக்ஷதமாக இருக்கவேண்டும் என்று கோருவதோடு அவன் பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் குறைவின்றி முழுமையாக இருக்கவேண்டும் என்றும் வேதம் வாழ்த்துகிறது!

பல சம்ஸ்காரங்களில் அதாவது தொட்டில் போடுவது, பெயர் வைப்பது, காது குத்துவது, உபநயனம்… இன்னும் விவாகம் போன்ற பல சுப காரியங்களிலும் ஜீவனுக்கு அந்த வாழ்த்தை அளிக்கிறது வேதம். ஜீவனிடமுள்ள செல்வமும் வெற்றியும் முன்னேற்றமும் அடிபடாமல் முழுமையாக இருக்கவேண்டும் என்ற வாழ்த்து இது.

மகரிஷிகள் மானுட வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் எந்த குறையும் இல்லாமலிருக்க வேண்டும் என்றும் விரும்பி வாழ்த்தியுள்ளார்கள். பரிபூரண பாவனையே அட்சதை என்ற சொல்லில் உள்ள பொருள்.

இருப்பது சிறிது சிறிதாக குறையக்கூடாது. குறைந்து போனால் அது “க்ஷதம்”. எதுவும் குறையாமல் நிறைவாக இருந்தால் அக்ஷதம். அதனால் ஆனந்தமாக பரிபூரணமாக வாழவேண்டும் என்பது அட்சதை என்ற கருத்தில் வெளிப்படுகிறது.

இன்னும் ஒரு விதத்தில் பார்த்தால் ஜீவனுக்கு ‘அக்ஷதன், அக்ஷரன்’ என்று இரண்டு பெயர்கள் அழிவில்லாதவன் என்ற பொருளில் உள்ளன. உடல் அழியுமே தவிர ஜீவனுக்கு அழிவு கிடையாது. அவனுள் அழியாமல் இருக்கும் அந்தத் தத்துவத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அழியாத தத்துவம் ஒன்று உள்ளது. அதுவே பரமாத்மா! அட்சதை என்ற சொல்லுக்கு பரமாத்மா என்ற பொருளும் உள்ளது. ஜீவன் இகலோகத்தில் சுகமும் செல்வமும் எக்குறையுமின்றி பெற வேண்டுமென்று வாழ்த்துவதோடு அக்ஷதமான பரமாத்மாவை அறிய வேண்டும் என்றும் வாழ்த்துகிறது வேதம். அக்ஷதமான பரமாத்மாவை வணங்குவோம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories