December 6, 2025, 7:08 AM
23.8 C
Chennai

என் மனசுக்குள்ளேதானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்?

“மழநாடு-ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?”

(‘நான் பெரியவாளிடம் எதுவும் கேட்கவில்லையே! என் மனசுக்குள்ளேதானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்? தெள்ளத் தெளிவா பதில் சொல்லிட்டாளே!’)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-146
தட்டச்சு-வரகூரான் நாராயணன் 61756834 2517068251854066 7432222991972302848 n - 2025
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.

பதினெட்டு வயதில் புதுடில்லியில் காலடி எடுத்து வைத்தவருக்கு இப்போது ஐம்பதெட்டு வயது.எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழும் சுருக்கெழுத்து – தட்டச்சு (கீழ் நிலை) சான்றிதழ்களும் அவரை ஒரு தனியார் அலுவலகத்தில் வெகு எளிதாக நுழைத்து விட்டன.

காலம் செல்லச் செல்ல,பதவி,பணம் -செல்வாக்கு எல்லாம் பெருகின. இத்தனை நாள்களும்’நான் யார்’ என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கவில்லை. நாளையிலிருந்து அலுவலகத்துள் நுழைய முடியாது. நேற்றைக்கே பிரிவுபசாரம் நடத்தப்பட்டுவிட்டது.

‘இனி எங்கே போய் வாழ்நாளைக் கழிப்பது? என்று பூதாகாரமான பிரச்னை. பையில் – நிறைய பணம்இருக்கிறது. பந்துக்கள் இல்லையே?

பையன் – இதோ, கொல்கத்தாவில் இருக்கிறான். வங்கி மண்டல அதிகாரி.அவன் நல்லவனாகத்தான் பாசமுள்ளவனாகத்தான் – வளர்ந்தான்.

‘பானை பிடித்தவளும் நல்லவளாகத்தான் இருந்திருப்பாள். புகுந்த வீட்டைப் பற்றிய அக்கறையே இல்லை எப்போதும் பிறந்த வீட்டுப் பெருமை தான். அங்கே போய்த் தங்கினால், இப்போதிருக்கும் பேச்சு – வார்த்தை உறவும் அற்றுப் போய்விடும்.

யார் வழி காட்டுவார்கள்.

‘சங்கரனே துணை’ என்று ‘ஸத்ய வ்ரத நாமாங்கித’ காஞ்சி க்ஷேத்திரத்துக்கு வந்தார் முன்னாள் மேலாளர் நாலு நமஸ்காரம்.கை கட்டி,வாய் புதைத்து.

“அநேகமா எல்லா க்ஷேத்திரமும் தரிசனம் பண்ணிட்டோம் போன வாரம், தலைக்காவேரி போய்விட்டு ,அப்படியே காவிரிப் பூம்பட்டினமும் போய்விட்டு வந்தோம்..”

பெரியவாள் சொன்னார்கள்.

“காவேரி உற்பத்தி ஸ்தானத்திலேயும் சங்கமத்துறையிலும் ரொம்பக் குறுகலாத்தானே இருக்கு?”

“ஆமாம்…”

“காவேரி, ரொம்ம்ம்ப அகலமா இருக்கிற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?”

“அகண்ட காவேரி”

“அது எங்கே இருக்கு?”

“திருச்சி பக்கத்திலே..”

“அந்த பிரதேசத்துக்கு என்ன பேரு?”

ஓய்வு பெற்ற மேலாளர் விழித்தார்.

கிங்கரர்களை அதட்டிப் பழக்கம். சங்கரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு விழித்துப் பழக்கமில்லை.

“மழநாடு-ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?”

“எங்க தாத்தா சொல்லுவார்..”

“காவேரி தீரம்தான் மழநாடு.ரொம்ப ஆசாரக்காரர்கள் இருந்த நாடு..உன் பாட்டனார் இருந்த இடம்….”

‘ஓல்டுமேன்’ நெளிந்தார்.

“திருச்சியிலே ஜாகை வெச்சுக்கோ. தினமும் ஒரு கோயிலுக்கு – உச்சிப் பிள்ளையார் மாத்ருபூதேஸ்வரர்,அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வயலூர் முருகன்,குணசீலம் ஸ்ரீநிவாஸன் – இப்படிதரிசனம் பண்ணிண்டு இரு….”

வந்தவர், நாலு முறை நமஸ்காரம் செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுக் கொண்டார்.

அவர் உத்தியோக காலத்தில் எத்தனையோ புதிர்களை விடுவித்திருக்கிறார்.ஆனால்,

இப்போது ஒரு புதிருக்கு விடை காண முடியாமல் தவிக்கிறார்.

‘நான் பெரியவாளிடம் எதுவும் கேட்கவில்லையே! என் மனசுக்குள்ளேதானே நினைத்துக் கொண்டிருந்தேன்! அது எப்படி பெரியவா காதில் விழுந்திருக்கும்? தெள்ளத் தெளிவா பதில் சொல்லிட்டாளே!’

இந்தப் புதிருக்கு விடை தெரிந்திருந்தால் அவர் தாயுமானவர் ஆகியிருப்பார்.!

.மலைக்கோட்டைத் தெருவில் அவருக்கு வீடு கிடைத்தது. ‘வீடும்’ கிடைக்கும்.

பெரியவா உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories