லாரி பைக்கில் மோதி மருத்துவர் உயிரிழப்பு!

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
accident 2 e1563426147205 - 2026

ஜெகதீஸ் சந்திர ராஜா (வயது 50). ராஜபாளையம், மதுரை ரோட்டில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர். இவர் ஒரு பிசியோதெரபி மருத்துவர். இவர் இன்று காலை 10.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

ராஜபாளையம் டி.பி.மில்ஸ் ரோடு, பழைய பஸ் நிலைய நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ஜெகதீஸ் சந்திரராஜா மீது லாரி டயர் ஏறி, இறங்கியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

lorry bike acc - 2026
file pic

ராஜபாளையம் காவல்துறை இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.