
மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் செல்வம். 23 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. கொத்தனார் வேலை பார்க்கிறார். இவருக்கு ஜெயா என்ற பெண்ணுடன் உறவு ஏற்பட்டது.
தஞ்சை வீரமாங்குடியை சேர்ந்த ஜெயாவுக்கு 40 வயதாகிறது… கல்யாணம் ஆகி 2 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். குடும்பத்தை காப்பாற்ற சித்தனாள் வேலைக்கு வரும்போதுதான், கொத்தனார் வேலை செய்யும் செல்வத்துடன் பழக்கம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் சாதாரணமாக பழகிவந்த நிலையில், நாளடைவில் இது கள்ளக்காதலாக உருமாறியது. இவர்கள் இருவரும் கும்பகோணத்தில் உள்ள ஒரு லாட்ஜில்தான் அடிக்கடி வந்து தங்குவார்களாம்.
லாட்ஜ் வாரமெல்லாம் உழைத்து முடித்ததும், அந்த பணத்தை கொண்டு வந்து ரூம் போட்டு ஜாலியாக இருந்துள்ளனர். அதனால் லாட்ஜில் உள்ள ஊழியர்கள் அனைவருக்குமே 2 பேரும் நல்ல அறிமுகம். ஒருகட்டத்தில் 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இரு வீட்டிலுமே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
திருமணம் வயது வந்த பிள்ளைகளை வைத்து கொண்டு திருமணம் செய்வது சரியில்லை என்று ஜெயா வீட்டிலும், 40 வயது பெண்ணுக்கு 23 வயது மகனை திருமணம் செய்து தர இஷ்டமில்லை என்று செல்வம் வீட்டிலும் எதிர்ப்பு சொன்னார்கள்.
இதனால் மனம் உடைந்த கள்ளக்காதல் ஜோடி வழக்கம்போல், நேற்று முன்தினமும் கும்பகோணம் பஸ் ஸ்டேண்டில் உள்ள அதே லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் இவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் லாட்ஜ் ஊழியர்கள் பதறியடித்து கொண்டு ஓடினார்கள். அங்கே ஜெயா – செல்வம் இருவரும் “தற்கொலை செய்யலாம்னு விஷம் குடிச்சிட்டோம். எங்களை காப்பாத்துங்க” என்று அழுதுள்ளனர்.
இதையடுத்து லாட்ஜ் ஊழியர்கள் இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, விஷத்தையும் குடித்த பிறகுதான் இவர்களுக்கு உயிர் பயம் வந்து கதறி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.