spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஊடகவாதிகளை மோசமாகத் திட்டித் தீர்க்கும் சமூக ஊடகவாதிகள்!

ஊடகவாதிகளை மோசமாகத் திட்டித் தீர்க்கும் சமூக ஊடகவாதிகள்!

- Advertisement -

சமூக ஊடகங்கள் இப்போது சாமானியர்களின் கருத்தையும் பிரதிபலிக்கும் தளங்களாகி வருகின்றனர். எனவே நியாயமாக விமர்சிக்கும், வெறுப்புக் கருத்துகளை விதைக்கும் என இரு வேறு வகைகளில் சமூக ஊடகவாசிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரவலாக வெகுஜன ஊடகங்களை அதிகம் திட்டித் தீர்த்தும், அல்லது வெகுஜன ஊடகங்களின் மீது தங்களுக்கு உள்ள கோபத்தை கொட்டித் தீர்ப்பதும் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப் படுகின்றன. 

அண்மைக் காலத்தில் பாஜக., தங்களது கட்சியின் சார்பில் எவரும் ஊடகங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தது. அதை அடுத்து, இது குறித்து கருத்துப் பதிவிட்டு, பலரும் சமூக ஊடகங்களில் ஊடகங்களை திட்டித் தீர்த்தனர். குறிப்பாக ஊடகவாதிகளைப் பதம் பார்த்தனர். அப்படி ஊடகவாதிகளைத் திட்டித் தீர்த்த சமூக ஊடகவாதி ஒருவரின் கருத்து இது… 



தமிழக ஊடகங்கள் இன்று தேசிய அளவில் “‘ வேசி ஊடகங்கள் “” என்ற பெயருடன் கேவலப்பட்டு நிற்கிறது. பல அரசியல் கட்சிகள் ஊடக விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்து விட்டது. தமிழக ஊடகங்கள் ஏன் இப்படி செருப்படி வாங்கி கேவலப்பட்டு நிற்கிறது என்பதை ஆராய்ந்தால் காறி துப்புவது கூட நமக்கு கேவலம் என்று புரியும்.

முதலில் ஊடகங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளது…? எப்படி செய்படுகிறது என பார்க்கவும். இதை தெரிந்து கொண்டாலே தமிழக மக்களை ஊடகங்கள் எப்படி மடையர்களாக்கி வைத்துள்ளனர் என்பது தெளிவாக புரியும்.

தமிழக ஊடகங்கள் வகைப்படுத்தினால் கீழ்கண்ட வரிசைப்படி அதன் முதலாளிகள் இருப்பார்கள்.

  1. சட்டத்திற்கு புறம்பான தொழில்களை செய்பவர்கள்.

  2. அரசாங்க அனுமதி பெற்று விதிமுறைகளுக்கு மாறாக, சட்டத்திற்கு புறம்பாக அதிகாரிகளின் துணையோடு தொழில்களை செய்பவர்கள்.

  3. முறைகேடான வழியில் அல்லது தொழிலில் சம்பாதித்த பணத்தை அரசியல் வாதிகளிடமிருந்து காப்பாற்ற அல்லது அரசு நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஊடகத்துறையில் நுழைந்திருப்பவர்கள்.

  4. மதம் பரப்பும் வேலையில் உள்ள கிறிப்டோ கிறிஸ்தவர்கள்.

  5. பொதுவுடமை பேசும் கிறிப்டோ கிறிஸ்தவர்கள்.

  6. இல்லாத திராவிடத்தை சொல்லி மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் திருட்டு திராவிட அரசியல் வியாதிகள்.


தமிழகத்தின் எந்த தொலைக்காட்சி ஊடகத்தை எடுத்துக் கொண்டாலும் மேற்கண்ட இந்த பட்டியலுக்குள் தான் இருப்பார்கள்.

இந்த ஊடகங்கள் மக்களுக்கு நாட்டு நடப்புகளையும், உலக அரசியல் நகர்வுகளையும் எடுத்து சொல்வதற்காகத்தான் நடத்துகின்றனர் என நாம் நம்பினால் நம்மை விட முட்டாள்கள் இந்த உலகத்தில் வேறு எவரும் கிடையாது.


இந்த ஊடகங்களை வழி நடத்தும் தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் யாரென்று பார்த்தால் நமக்கு தலை சுற்றும்.

  1. உண்டியல்களின் பொதுவுடமை சித்தாந்தத்தில் ஊறியவர்கள்.

  2. திராவிடத்தின் பகுத்தறிவு கும்பலுக்கு சொம்பு அடிப்பவரகள்.

இந்த இரண்டு பிரிவிலும் இருக்கும் தலைமை அதிகாரிகள் மற்றும் விவாதங்களை நடத்தும் நெறியாளர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் கிறிப்டோ கிறிஸ்தவர்களாக இருப்பார்கள் அல்லது திராவிட அடிமையாக இருப்பார்கள். இந்த கும்பலுக்கு இதற்காக தனி சம்பளமும் வழங்கப்படுவதாக பரவலாக பேச்சும் உண்டு.


ரைட், இப்போது ஊடகங்கள் எந்த லட்சனத்தில் இயங்குகிறது என்று பார்க்கலாம்.

தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒவொன்றும் சட்டத்திற்கு விரோதமான, விதிமுறைகளை மீறின, வரி கட்டாத கருப்பு பண முதலைகளுக்கு இடியாக இறங்குகின்றது.

கருப்பு பண முதலைகள் இத்தனை காலமாக முந்தைய காங்கிரஸ் அரசின் துணை கொண்டு மக்களையும், தேசத்தையும் சுரண்டி கொளுத்து வந்தனர். மணல், கிரானைட், மருந்து, ரேசன் பொருட்கள், உணவுப் பொருட்கள் என்று அத்தனை துறைகளிலும் நாட்டையும் மக்களையும் சுரண்டி அதற்கு கப்பமும் கட்டி வந்தனர். ஒவ்வொரு துறைக்கும் மாபியாக்கள் உருவானது இப்படித்தான்.

மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் இந்த முதலைகளைத்தான் கதற வைக்கின்றது. திருடனுக்கு தேள் கொட்டியது போல இதை வெளிப்படையாகவும் எதிர்க்க முடியாது.

இதில் மற்றொரு விசயத்தையும இங்கு பதிவிட வேண்டியுள்ளது. தொண்டு நிறுவனங்களின் பெயரால் வெளிநாட்டு பணத்தை பெற்று மதமாற்றம் செய்து வந்த கிறிஸ்தவ மெஷினரிகள் இப்போது மோடி அரசின் கிடுக்கி பிடியால் விழி பிதுங்கி நிற்கின்றன. மத மாற்றத்திற்கு அயல் நாட்டு பணம் வரும் வழிகள் அடைக்கப்பட்டு விட்டதால் வெளியே சத்தமில்லாமல் கதறிக்கொண்டு உள்ளன.

ஆக மொத்தம் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை. வெளியே சொன்னால் மக்கள் காறி துப்பி விடுவார்கள்.

இந்த இடத்தில் தான் புத்திசாலித்தனமாக தங்கள் வசம் உள்ள ஊடகங்களை பயன்படுத்தி மத்திய அரசின் சீர் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களே பொங்கி எழுவதாக ஒரு மாய பிம்பத்தை மக்களிடையே பரப்பி கட்டமைத்து வைத்துள்ளனர்.


சில ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு ஊர், தெருவிற்கு தெரு ஒரு விசயத்தை கவனித்திருப்பீர்கள். அது…..

மனித உரிமை என்ற பெயரில் சங்கம், இயக்கம், தொண்டு நிறுவனம் மூலைக்கு மூலை இருந்தது. இவர்கள் எல்லாம் யார்…? எங்கிருந்து வந்தனர்….? என்று யாராவது சிந்தித்தது உண்டா….?

எல்லாமே வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த வெட்டி முண்டங்களால் ஆரம்பித்து நடத்தப்பட்ட அமைப்புகள். இவர்களின் வேலை மனித உரிமை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கே சென்று அவர்களை மிரட்டுவது, கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பாரப்பது தான்.

மக்கள் கண்காணிப்பகம் .. ஆங்கிலத்தில் பீபுள்ஸ் வாட்ச்ஸ் என்ற அமைப்பை நடத்தி வரும் ஹென்றி டிபேன், எவிடென்ஸ் என்ற பெயரில் அமைப்பை நடத்தி வரும் கதிர் போன்றோர்கள் இந்த மாதிரியான கட்டப் பஞ்சாயத்து கூட்டத்தின் முன்னோடிகள். இந்த கும்பலுக்கு பின்னிருந்து இயக்குவது கம்யூனிசம் என்ற முகமூடி அணிந்த கிறிப்டோ கிறிஸ்தவ கூட்டம்.

இவர்களின் ஆட்டம் எல்லை மீறி சென்றதால் நீதித்துறையே தலையிட்டு மனித உரிமை என்ற பெயரில் அமைப்பு, நிறுவனம் வைத்து நடத்த தடை விதித்த பின்பு தான் இவர்களின் ஆட்டம் முடிவிற்கு வந்தது. அதன் பின் தான் காவல் துறையும் மூச்சு விட்டது.


. நீதி மன்றம் தனியார் மனித உரிமை அமைப்புகளை தடை செய்த பின்பு மேலே சொன்ன கும்பல்கள் அவரவர்கள் தங்கள் வசதிப்படி புதிய அவதாரங்களை எடுத்துள்ளனர்.

சமூக ஆர்வலர், இயற்கை ஆர்வலர், உண்மை கண்டறியும் குழு, வரலாற்று ஆய்வாளர், முன்னால் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு…. எக்சட்ரா….எக்சட்ரா….

….. இப்படி அந்தந்த சீசனுக்கு ஏற்றபடி பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றனர்.

சரி, இந்த வெட்டி முண்டங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய விரிவரை என கேட்கலாம். இருக்கிறது…. அதையும் பார்க்கலாம்.


தொலைக்காட்சிகளில் விவாதங்களை நடத்த தலைப்புகளை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்…? அப்போதைய பிரச்சனைகளை பற்றி விவாத தலைப்புளை தேர்ந்தெடுத்து அது சம்பந்தமாக விவாதம் நடத்துகின்றனர்.

உதாரணமாக கோதாவரி – காவேரி நதி நீர் இணைப்பு பற்றிய விவாதம் எனில் அதில் யார் யார் பங்கேற்பது என்று ஊடகங்களே முடிவு செய்கின்றன. இங்கு தான் ஊடகங்களின் வேசித்தனத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  1. ஒரு நல்ல ஊடகம் எனில் இந்த திட்டத்திற்காகும் செலவு, அந்த தொகையை நாடு செலவு செய்ய சாத்தியமா….? திட்டம் நிறைவேறினால் செலவு செய்த பணத்தை எவ்வளவு காலத்தில் திரும்ப பெறலாம்…? என புள்ளி விவரத்துடன் பேச நிதித்துறை நிபுணர் ஒருவர்.

  2. திட்டத்தினை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், அதில் ஏற்படும் இடர்பாடுகள், இடர் பாடுகளை நீக்க என்ன செய்யலாம்…? இதை பற்றி பேச அனுபவமிக்க பொறியியலாளர்.

  3. திட்டத்தினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம், பாதிப்புகள், பாதிப்பை ஈடுகட்ட செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடுகள் பற்றி பேச சுற்றுச்சூழல் நிபுணர்.

  4. திட்டத்தினால் அதிகரிக்கும் விவசாய விளைநிலங்களின் பரப்பு, விவசாய உற்பத்தி, எந்தெந்த பயிர்களை விளைவிக்கலாம் என்று பேச அந்த மண்ணை சார்ந்த விவசாய நிபுணர் ஒருவர்.

  5. திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் எத்தனை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும், அந்த தண்ணீரை பயன்படுத்தி எத்தனை தொழிற்சாலைகள புதிதாக அமைக்கலாம், மீன் பிடித்தல், நீர் வழி போக்குவரத்தை அதில் செயல் படுத்தினால் மேலும் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என பேச மனிதவள மேம்பாட்டு துறை நிபுணர் ஒருவர்……

இந்த அமைப்பில் தகுதியான நபர்களை அழைத்து, அமர வைத்து விவாதம் நடத்தினால் அது ஊடக தர்மம்.

ஆனால் நடப்பது என்ன…?

இங்கே தான் ஊடகங்கள் தங்களின் வேசித்தனத்தை செய்கின்றன.


தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நதிநீர் இணைப்பு பற்றி விவாதம் நடத்த இவர்கள் அழைத்து அமர வைக்கும் நபர்கள், அவர்களின் பின்னணியை பார்த்தால் வேசி ஊடகங்களை காறி உமிழ தோன்றும்.

  1. மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்கும் தி.மு.க வின் ஒரு. சொம்பு.

  2. ஊருக்கு நான்கு கிழவன்களை வைத்து கட்சியை நடத்திக்கொண்டு திராவிடத்தின் கால்களை கழுவியே பிழைக்கும் உண்டியல் ஒன்று.

  3. சமூக ஆர்வலர் அல்லது இயற்கை ஆர்வலர் என்ற பெயரில் உள்ள வெட்டி முண்டங்களில் ஒரு திராவிட அல்லது உண்டியல் அடிமை.

  4. முன்னால் பல்கலை பேராசியர் என்ற பெயரில் அறிவு ஜீவியாக காட்டிக் கொள்ளும். ஒரு திராவிட சொம்பு

இந்த நான்கு பேரில் மூன்று பேர் அல்லது குறைந்தது இரண்டு பேர் கண்டிப்பாக கிறிப்டோ கிறிஸ்தவராக இருப்பார்கள். மற்ற இரண்டு பேர் திராவிடத்துற்கு கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தினை சேரந்தவராக இருப்பார்கள்.

கூடுதலாக விவாதத்தை நடத்தும் நெறியாளர் கிறிப்டோ கிறிஸ்தவர் + திராவிட சொம்பாக அல்லது இதில் ஏதாவது ஒன்றாக இருப்பார்.

விவாதம் செய்ய நான்கு பேர் + நெறியாளர் ஒருவர் = மொத்தம் ஐந்து பேர் கொண்ட வேசிப்படை தயாராகி விடும்.

இவர்களுடன் விவாதப் செய்ய BJP கட்சியை சேர்ந்த ஒரே ஒருவரை அமர வைப்பார்கள்.

இதற்கு மேல் தான் ஊடக விபச்சாரத்தை ஒளிபரப்புவார்கள்.


நதி நீர் இணைப்பு என்று விவாதத்தை வைத்து விட்டு நெறியாளர் உட்பட ஐந்து பேரும் சம்பந்தமில்லாமல் மாட்டுக்கறி, தலித், மதவெறி… இப்படி விவாதம் செல்லும்.

ஒரு வேளை மற்றவர்களுக்கு தெரியாவிட்டாலும் கூட நெறியாளர் அருமையாக எடுத்துக் கொடுப்பார்.

இந்த கூட்டணி தங்களின் சிற்றறிவிற்கு கூட எட்டாத நதிநீர் இணைப்பு பற்றி அருமையாக மக்களுக்கு பாடம் எடுப்பது தான் கொடுமை.

உதாரணமாக பல்கலைக்கழக முன்னால் பேராசியர் என்ற பெயருடன் கலந்து கொள்பவர் நதி நீர் இணைப்பினால் தமிழ் இனமே அழிந்து விடும் என்று பட்டையை கிளப்புவார். நேரலையில் விவாதத்தை பார்ப்பவர்கள் பல்கலை பேராசிரியே எதிர்த்து கருத்து சொல்வதாக புல்லரித்து போய் விடுவார்கள்.

ஆனால் உண்மையில் பார்த்தால் அவர் விவாதம் சம்பந்தப்பட்ட எந்த துறையையும் சாராத முன்னால் வரலாற்று பேராசிரியராகவோ அல்லது தமிழ் துறை பேராசிரியராகவோ இருந்திருப்பார்.

திருவள்ளுவர் கிறிஸ்தவர், திருக்குறள் கிறிஸ்தவ நூல் என்று பாதிரிக்கும்பல் நிறுவ முயலும்போது தனது தமிழ் பேராசிரிர் அறிவை பயன்படுத்தி உண்மையை சொல்ல வர மாட்டார். இராஜ இராஜ சோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் இஸ்லாத்தை ஏற்றவர் என்று தொப்புள்கொடி உறவு என்று கூறிகொண்டே நமது சங்கை அறுக்கும் ஜீகாதி கூடடம் சொல்லும் போது தமது வரலாற்று அறிவை கொண்டு உண்மையை மக்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துச் சொல்ல முன்வர மாட்டார்.

ஆனால் தான் சார்ந்த துறைக்கு சம்பந்தமே இல்லாத நதி நீர் இணைப்பை எதிர்த்து முன்னால் பல்கலைக்கழக பேராசிரியர் என்ற லேபிளுடன் கம்பு சுத்தி மக்களை நம்ப வைத்து முட்டாளாக்குவார்.

இந்த ஐவரையும் ஒற்றை பா.ஜ தேசியவாதி விவாதத்தில் சமாளிக்க வேண்டும். கேவலமாக இல்லையா…?

அது மட்டுமல்ல…..

மொத்த விவாத நேரம் என்பது ஒரு மணி நேரம். இதில் விளம்பரங்கள் போக விவாதம் என்பது நாற்பது நிமிடங்கள் தான்.

நெறியாளரையும் சேர்த்தால் ஒருவருக்கு ஆறு நிமிடங்கள் கூட வராது. இந்த ஆறு நிமிடங்களில் பா.ஜ சார்பாக விவாதத்தில் ஈடுபடுவர் ஐந்து பேருக்கான 34 நிமிட வாதங்களுக்கு பதில், புள்ளி விவரங்கள், திட்டத்தின் பயன்கள் அனைத்தையும் சொல்ல வேண்டும்.

அதிலும் பதில் சொல்லும் போது நெறியாளரின் குறுக்கீடு, மற்ற நால்வரின் காட்டுக்கத்தல் அனைத்தையும் கழித்தால் வருவது மூன்று நிமிடங்கள் தான்.

திட்டம் சம்பந்தமான விளக்கத்தையும் சொல்ல முடியாது, மக்களுக்கு அதில் உண்டாகும் பலன்கள், அதில் தேசத்திற்குண்டான வளர்ச்சி, எதையும் சொல்ல நேரம் இல்லாமல் அத்தோடு முடிக்கப்படும். பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழன் பா.ஜ பதில் சொல்ல முடியாமல் ஓடி விட்டது என மறுநாள் காலை டீக்கடையில் சிரித்துக் கொண்டே தன் கருத்தை சொல்வான்.

இப்படிப்பட்ட வேசி ஊடகங்களில் விவாதிப்பதை நிறுத்த முடிவு செய்த தமிழக பா.ஜ இதை எப்போதோ செய்திருக்க வேண்டும்.

  • வசந்த் குட்டா 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe