தைப்பூச நடைமுறைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது; பொங்கும் சிங்கப்பூர் தமிழ்ப் பெண்

அண்மைக் காலமாக, இந்து அறநிலையத்துறை இந்த வீதியுலாவுக்கு தாங்களாகவே சில கட்டுப் பாடுகளை விதித்து வருகிறது. ஏதோ சில தொலைபேசி அழைப்புகளில் யாரோ சிலர் கேட்டுக் கொள்வதால், கோஷங்களில் சத்தம் இடக்கூடாது என்றும், வாத்திய இசைக் கருவிகளை கட்டுப் படுத்த வேண்டும் என்றும் கூறுகிறதாம்.

சிங்கப்பூரில் இந்து மக்களின், தமிழர்களின் மிகப் பெரும் பண்டிகையாகத் திகழ்வது தைப்பூசம். முருகனுக்குக் காவடி எடுத்து வேல் குத்தி, அலகு குத்தி, இசைக் கருவிகளுடன் முருக கோஷங்கள் முழங்க வீதியுலா செல்வது ஆண்டாண்டுகளாக நடைபெற்று  வருகிறது. இது, நூறாண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு அளித்துள்ள உரிமை.

ஆனால், அண்மைக் காலமாக, இந்து அறநிலையத்துறை இந்த வீதியுலாவுக்கு தாங்களாகவே சில கட்டுப் பாடுகளை விதித்து வருகிறது. ஏதோ சில தொலைபேசி அழைப்புகளில் யாரோ சிலர் கேட்டுக் கொள்வதால், கோஷங்களில் சத்தம் இடக்கூடாது என்றும், வாத்திய இசைக் கருவிகளை கட்டுப் படுத்த வேண்டும் என்றும் கூறுகிறதாம். இதற்கு அந்நாட்டு தமிழர்கள் பெரும் எதிர்ப்பு கிளப்பி வருகிறார்கள். அவர்களின் ஒரு குரலாக இந்தத் தமிழ்ப் பெண்மணி ஒலிக்கிறார். இதுபோன்ற நிலமை இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்குக் காரணம், இந்து சமய அறநிலையத் துறையில், ஆன்மிக எண்ணம் இல்லாதவர்களும் வேற்று மத ஆதிக்கம் கொண்டவர்களும் புகுந்துவிட்டதுதான்! இத்தகைய உரிமைக்  குரல் எழுப்ப வேண்டிய தேவை இப்போது தமிழகத்திலும் எழுந்துவிட்டதை அண்மைக் கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.