நம் வாழ்க்கையின் பெரும்பகுதி மற்றவர்களுக்காகவே வாழப்படுகிறது. மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்காகவே வாழப்படுகிறது. மெக்காளிக்கல் படிக்க ஆசைப்பட்ட மகனிடம், டாக்டருக்கு படி நல்லா சம்பாதிக்கலாம் என்கிறார் அப்பா. அப்பாவின் விருப்பத்திற்காக உடன்படுகிறான் மகன். அவனுக்கான வாழ்க்கையை அவன் தேர்ந்தெடுக்கவில்லை.
இராணுவத்தில் சேர ஆசைப்பட்டவனை, பத்து வருஷம் வெளிநாடு போயிட்டுவா. செட்டில் ஆயிடலாம். வந்த பிறகு ஏதாவது பிஸ்னஸ் செய்யலாம் என்று ஐடியா கொடுக்கிறார்கள். தனது சின்னவயது ஹீரோயிச கனவை மூட்டை கட்டிகட்டிவிட்டு வெளிநாட்டிற்கு போகிறான்.
இதெல்லாம் ஒரு வேலையா, அதசெய்…. என்கிறார்கள். சுதந்திரமாக சந்தோஷமாக வேலைப் பார்த்தவன் சில ஆயிரம் சம்பளம் கூடுதல் என்பதற்காக, வேறு வேலையில் சேர்ந்து வேதனைப்படுகிறான். விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் தவிக்கிறான். நம் வாழ்க்கையின் ஒவ்வொறு கட்டத்திலும் மாற்று கருத்து உள்ளவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அதற்காக கவலைப்பட்டால் நம்மால் வாழ முடியாது என்பதை எத்தனை பேர் உணர்ந்து வைத்திருக்கிறோம்.
விமர்சனங்களை விலக்கி தள்ளுங்கள்
Popular Categories



