பூமியில் பிறக்கும் மனிதர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் 27 நட்சத்திர வரிசையில் 26வது நட்சத்திரம் உத்திரட்டாதி. இது குருவின் வீட்டில் அமைந்த சனியின் நட்சத்திரம். சனி பெண் தன்மையோடு செயல்பட்டாலும், அவரின் ஆளுமைக்கு உட்பட்ட பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்கள் ஆண் நட்சத்திரமாகவே இருக்கிறது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்லவர்கள். வல்லவர்கள், நாலும் தெரிந்தவர்கள், நாகரீகம் அறிந்தவர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடியவர்கள். சுயகௌரவம் பார்ப்பவர்கள். மயிர் நீத்தால் உயிர்வாழா கவரிமான் போன்றவர்கள். தங்கள் சுயமரியாதையை இழந்து எவ்வளவு பெரிய நன்மைகள் வந்தாலும் அதை துச்சமென நினைத்து தூக்கி எரிபவர்கள்.
ஏழையோ, பணக்காரனோ அனைவரையும சமமாக நினைப்பார்கள், களங்கம் இல்லாத மனம், பிறருக்கு துன்பத்தை தராத குணம் உள்ளவர்கள் . கோபம் வரும். அந்த கோபம் உடனே மாறிவிடும். ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்வார்கள்.
மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திர பலன்கள்
Popular Categories


