27 நட்சத்திர வரிசையில் இறுதியான நட்சத்திரம் ரேவதி. இது குரு வீடான மீனராசியில் அமைந்த புதனின் நட்சத்திரம். பாலினவரிசையில் பெண்பால் நட்சத்திரம்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழி பாவத்திற்கு பயந்தவர்கள். நேர்மையாக வாழ்பவர்கள், பேச்சில் இனிமை, கொடுக்கல் வாங்கலில் நாணயம், உள்ளவர். சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வளைந்து கொடுத்து காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். அவசியமற்ற வார்த்தகளை பேசி நேரத்தை வீணடிப்பதில்லை. சில சமயம் மற்றவர்கள் பேச்சைக் காது கொடுத்துக் கேட்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. சுதந்திரப் பிரியர்கள். வெள்ளேந்தி மனசு. அன்பாக பேசினால் எதை பேசனும், எதை மறைக்கனும் என்று உணராமல் எல்லாவற்றையும் பேசிவிடுவார்கள். அதனால்தான் நட்சத்திர சிந்தாமணி ரகசியம் காக்கத் தெரியாது என்கிறது. சில விஷயங்களில் எவ்வளவுதான் உயிருக்கு உயிராக பழகினாலும நம்ப மாட்டார்கள். நம்பி விட்டால் அவர்களை விட்டு விலகுவதே இல்லை. மனம் போலவே நடப்பார்கள். தனக்கு சரி என்று தோன்றியதை துணிந்து செய்வார்கள். மற்றவர் அபிப்ராயங்களைப் பற்றி யோசிப்பதில்லை.
மீன ராசி ரேவதி நட்சத்திர பலன்கள்
Popular Categories


