நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலளித்துப் பேசினார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குறுக்கிட்டதுடன், அவையில் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். கடும் கத்தல் கூச்சல் மற்றும் அமளிக்கிடையே பிரதமர் மோடி பேசியவற்றில் இருந்து…
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
சிறுபிள்ளை புத்தி, நீ அதற்கு சரிப்பட்டு வரமாட்டாய் என்று யாரைக் குறிக்கிறார் மோதி
ஐயோ பயங்கரம். என்னை இவரு அடிச்சாரு. என்னை அவரு அடிச்சாரு. எங்க இங்க அடிச்சாங்க. என்னை அங்க அடிச்சாங்க. இப்படித்தான் நடந்திட்டு இருந்திச்சு. மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே!! பச்சாதாபத்தைப் பெறுவதற்காக, இந்தப் புதிய நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
ஆனால், இவருக்கு உண்மை நன்றாகத் தெரியும், அதாவது இவர், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், தொடர்பான மோசடி விவகாரத்திலே, ஜாமீனிலே வெளியே திரிந்து கொண்டிருக்கிறார். இவர், ஓபிசி பிரிவைச் சேர்ந்த மக்களை, திருடர்கள் என்று கூறிய விஷயத்திலே, தண்டனையை அடைந்திருக்கிறார்.
மேலும் இவர், தேசத்தின் உச்சநீதிமன்றத்திலே, பொறுப்பற்ற வகையிலே பேசியதற்காக, மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. இவர் மீது, மகத்தான சுதந்திரப் போராட்ட வீரரான, வீர சாவர்க்கர் போன்ற, மாபெரும் ஆளுமையினை, அவமதிப்பு செய்தமைக்கான வழக்கு இருக்கிறது. இவர் மீது, தேசத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவரையே, கொலைகாரன் என்று கூறியதன் பேரிலும் வழக்கு நடந்து வருகிறது.
இவர் மீது, பல தலைவர்கள், அதிகாரிகள், அமைப்புகள் மீது, பொய்யுரை பேசினார் என்ற தீவிரமான குற்றச்சாடு இருக்கிறது. மேலும் அந்த வழக்குகள் நடந்து வருகின்றன. மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, சிறுபிள்ளை புத்திக்கு, என்ன பேசுகிறோம் என்று தெரியாது, அதே போல சிறுபிள்ளை புத்திக்கு, எப்படி நடக்கிறோம் என்றும் தெரியாது.
மேலும் இந்த சிறுபிள்ளை புத்திக்கு, தலைகால் ஏதும் தெரியாத நிலையிலே, அவையிலே கூட, யாரையாவது கட்டிப் பிடித்துக் கொள்கிறார். இந்தச் சிறுபிள்ளை புத்தி, தன்னுடைய எல்லைகளை எல்லாம் இழந்து விடுகிறார். பிறகு அவையிலே அமர்ந்து கொண்டு, கண்ணாலே சைகை செய்கிறார் கண்ணடித்துக் காட்டுகிறார்.
இவரைப் பற்றிய உண்மையை, மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இப்போது தேசம் முழுவதும் தெரிந்து கொண்டு விட்டது. ஆகையினாலே தான், இன்று தேசம், இவரிடத்திலே கூறுகிறது, நீ அதற்கு சரிப்பட்டு வரமாட்டாய் என்று. உன்னால் ஆக்கக்கூடிய வேலை கிடையாது.
இரண்டு நாட்களாக நடக்கும் சிறுவனின் மனதைக் குஷிப்படுத்தும் வேலை என்கிறார் மோதிஜி
அன்றாட வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து கூறுகிறேன். ஒரு சின்னவயதுப் பையன், சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். அந்தப் பையன் ஒருவேளை விழுந்து விட்டால், சைக்கிளிலிருந்து வழுக்கி விழுந்தால், அழத் தொடங்கினால், அப்போது வயதில் பெரியவர் அவனிடத்தில் செல்கிறார்கள்.
அவனிடத்திலே கூறுகிறார் பாரு எறும்பு செத்துப் போச்சு!! காக்காய் பறந்து போச்சு பாரு!! அடேங்கப்பா நீ ரொம்ப அருமையா சைக்கிளை ஓட்டுறியே!! அட நீ எங்கப்பா கீழ விழுந்தே? இப்படியெல்லாம் சொல்லி, அந்தப் பையனின் மனதை, சாந்தப்படுத்த முயற்சிகள் செய்கிறார்கள். அவனுடைய கவனத்தை திசைதிருப்பி, அந்தச் சிறுவனின் மனதைக் குஷிப்படுத்துகிறார்கள்.
ஆக இரண்டு நாட்களாக, சிறுவனின் மனதை சந்தோஷப்படுத்தும், வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது.
சிறுவனே, 100க்குத் 99 வாங்கவில்லை, 543க்குத் 99 வாங்கியிருக்கிறாய் என்று புரிய வைக்கிறார் மோதிஜி
எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. தொண்ணூற்று ஒன்பது மதிப்பெண்கள் பெற்று, ஒரு சிறுவன், ஆணவத்தில் திரிந்து கொண்டிருந்தான். மேலும் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தான், பாருங்கள், எத்தனை அதிக மதிப்பெண்கள் வந்திருக்கிறது என்று.
மக்களுமே கூட, 99 என்று கேட்டவுனனேயே, பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். அதிக அளவில்…. அவனுக்கு ஊக்கமளிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது அவனுடைய ஆசிரியர் வந்தார், எதற்காக இனிப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கிறாய்? நீ ஒன்றும் 100க்குத் 99 வாங்கவில்லை, 543க்குத் 99 வாங்கியிருக்கிறாய். இப்போது அந்த சிறுவனின் புத்திக்கு, யார் புரிய வைப்பார்கள்? பாருப்பா நீ, தோல்வி அடைவதிலே, உலக சாதனையைப் படைத்திருக்கிறாய்.
நாட்டுமக்களின் உத்தரவை புரிந்து கொள்ள முயலுங்கள் காங்கிரஸ்காரர்களே என்கிறார் மோதிஜி
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் அறிக்கைகளில், இந்த அறிக்கையானது, ஷோலே படத்துடைய வசனத்தையும் கூட பின்னுக்குத் தள்ளி விட்டது. உங்கள் அனைவருக்கும், ஷோலே திரைப்படத்தின் அந்த அத்தை ஞாபகமிருக்கும். மூன்றாவது முறையாகத் தோற்றிருக்கிறார்கள். ஆனால் அத்தையாரே, ஆம் ஒரு விஷயம் என்னமோ சரிதான். மூன்றாவது முறை தானே தோற்றிருக்கிறார். ஆனால் அத்தையாரே, தார்மீக வெற்றி கிடைத்து விட்டதே!! மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, 13 மாநிலங்களிலே, ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. அட அத்தையாரே!! 13 மாநிலங்களிலே பூஜ்யம் சீட்கள் கிடைத்திருக்கின்றன, ஆனாலும் ஹீரோ தான் இருக்கிறாரே!! மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, அட கட்சியினுடைய, டம்ப்ளர் தானே மூழ்கியிருக்கிறது, அட அத்தையாரே, கட்சி இன்னும் மூச்சு இழுத்துக் கொண்டு தானே இருக்கிறது!!
நான் காங்கிரசின் உறுப்பினர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். மக்கள் அளித்திருக்கும் ஆணையை, போலியான வெற்றி என்ற கொண்டாட்டத்தில் தொலைக்காதீர்கள். மக்களின் கட்டளையை, போலியான வெற்றியென்ற, மயக்கத்தில் தொலைக்காதீர்கள். களியாட்டத்தில் கோட்டை விடாதீர்கள்.
நேர்மையான முறையினிலே, நாட்டுமக்கள் இட்டிருக்கும் கட்டளையை, கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இந்துக்களை அழிக்கத் துடிக்கும் காங்கிரஸ்
நேற்று நடந்ததை, இந்த தேசத்தின் கோடானுகோடி நாட்டுமக்கள், வரவிருக்கின்ற பல நூற்றாண்டுகளுக்கு மன்னிக்கவே மாட்டார்கள். மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, 131 ஆண்டுகளுக்கு முன்பாக, 131 ஆண்டுகளுக்கு முன்பாக, ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள், ஷிகாகோவிலே கூறினார். நான் பெருமையாக உணர்கிறேன், அதாவது நான், எந்த தர்மத்திலிருந்து வருகிறேன் என்றால், அந்த தர்மம், ஒட்டுமொத்த உலகிற்குமே, சகிப்புத்தன்மை, மற்றும், உலகளாவிய ஏற்புத்தன்மையைக் கற்பித்திருக்கிறது.
131 ஆண்டுகளுக்கு முன்பாக, இந்து மதம் தொடர்பாக ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள், அமெரிக்காவின் ஷிகாகோ நகரிலே, உலகின் பெரும் சான்றோர்களின் முன்னிலையில் கூறினார். மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்துக்கள், சகிப்புத்தன்மை கொண்டவர்கள். இந்துக்கள், ஏற்புத்தன்மை உணர்வோடு, வாழக்கூடிய சமூகமாகும்.
இதன் காரணமாக, பாரதத்தின் ஜனநாயகம், பாரதத்தின் இத்தனை பன்முகத்தன்மை, அதன் வேற்றுமையின் பரந்துபட்ட நிலை, இன்று இவை காரணமாகவே தழைத்திருக்கின்றன. மேலும் தழைத்து வருகின்றன. மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, தீவிரமான விஷயம் கூறுகிறேன்.
அதாவது இன்று, இந்துக்களின் மீது, பொய்யான குற்றச்சாட்டை வீசுகின்ற, சதிவேலை நடந்து வருகிறது. பயங்கரமான சதிவேலை நடந்து வருகின்றது.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இங்கே என்ன சொல்லப்பட்டது? இந்துக்கள் வன்முறையாளர்களா? இதுவா உங்களுடைய கலாச்சாரம்? இதுவா உங்களுடைய குணம்? இதுவா உங்களுடைய எண்ணம்? இதுவா உங்களுடைய காழ்ப்பு?
இந்த தேசத்தின் இந்துக்களின்பால், உங்களுடைய இந்தச் செயல்பாடுகள், மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, இந்த தேசம், பல நூற்றாண்டுகள் வரை, மறக்கப் போவதில்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், இந்துக்களிடத்திலே, சக்தி பற்றிய எண்ணப்பாடு, அது அழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நீங்கள் எந்தச் சக்தியைப் பற்றிப் பேசுகிறீர்கள்? இந்த தேசம், பல நூற்றாண்டுகளாக, சக்தியை வழிபட்டு வந்திருக்கிறது. என்னுடைய இந்த வங்காளம், அன்னை துர்க்கையை வழிபடுகிறது, சக்தியை உபாசனை செய்கிறது.
இந்த வங்காளம், அன்னை காளியை வழிபடுகிறது, அர்ப்பணிப்பு உணர்வோடு செய்கிறது. அந்தச் சக்தியை அழிப்பது பற்றியா பேசுகிறீர்கள்? இவர்கள் யார் தெரியுமா? இவர்கள் தாம், இந்துத் தீவிரவாதம், இந்தச் சொற்களை ஜோடிக்க முயற்சி செய்தார்கள்.
அவர் மேலும் பேசியவை…
வரவிருக்கின்ற ஐந்தாண்டுகள், அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலே, கண்ணியமான வாழ்க்கை வாழ, எந்த வகையான அளுகைக்கான, தேவைகள் இருக்கின்றனவோ, நாங்கள் இந்த அடிப்படை வசதிகளை, அனைவருக்கும் கிடைக்கும் வகையிலே மாற்றமேற்படுத்த விரும்புகிறோம்.
நாம் உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும் வேளையிலே, ஆக்கப்பூர்வமான தாக்கம் என்னவோ ஏற்படும்; ஆனால் உலகப் பின்னணியில் பார்க்கும் போது வரலாறு காணாத மாற்றங்கள் ஏற்படும்.
நமக்கெல்லாம் அரசியலமைப்புச் சட்டம் என்றால் அதன் உணர்வும் சொல்லும், மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. எந்த ஒரு அரசாங்கத்திற்கும் கொள்கைகளிலும் சரி செயல்பாடுகளிலும் சரி, நம்முடைய அரசியல்சட்டம், திசையைக் காட்டும் பணியை ஆற்றுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின்பால் நம்பிக்கை உணர்வு மேலோங்கவும், மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின்பால் புரிதல் மேம்படவும், அரசியல்சட்டம் நமக்கெல்லாம் பெரிய கருத்தூக்கமாக இருக்க வேண்டும். இதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டு வர வேண்டும்.
இப்போது நாம், 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், நாம் இதை ஒரு மக்கள் விழாவாக தேசம் தழுவிய வகையிலே கொண்டாட வேண்டும்.