எமிரேட்ஸ் விமானம்: ஊழியர்களின் ட்ரெஸ் கோடு மாற்றியது!

உலகம் பொது தகவல்கள்
dress - 2026

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, பிரபல விமான நிறுவனமான எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதுவகையான டிரெஸ் கோடு வெளியிட்டு உள்ளது.

இந்த புதுவகையான டிரெஸ் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து, விமான ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

ஒவ்வொரு விமான நிறுவனமும், விமான ஊழியர்களுக்கு பயணிகளை கவரும் வகையில் விதவிதமான டிரெஸ் கோடு வழங்கி, பயணிகளை இழுத்து வருகிறது. ஆனால், தற்போது கொரோனா பீதி காரணமாக பல நாடுகளில் விமான சேவைகள் முடங்கி உள்ளன.

இந்த நிலையில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதுவகையான டிரெஸ் கோடு வெளியிட்டு உள்ளது. பயணிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், விமான பணியாளர்கள் முகமூடி, கையுறைகள், கொரோனா பாதுகாப்பு கவுன் மற்றும் புதுவகையான பாதுகாப்பு ஹெல்மெட் (விசர்) ஆகியவை அணியும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.