நாளை பேருந்துகளில் முன்பதிவு ஆரம்பம் ! தீபாவளி பயணம் !

அடடே... அப்படியா? இந்தியா தமிழகம் லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
deepavali - 2026
file pic

தீபாவளி பண்டிகை சொல்லும் போதே மகிழ்ச்சியும் இப்பண்டிகையின் எதிர்பார்ப்பும் மக்கள் மனதில் சிறகடிக்கும்.இந்த பண்டிகை வரும் முன்னே இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யத்தொடங்குவர் ஆடை எங்கு எடுப்பது என்ன எடுப்பது இந்த வருடம் என்ன புதிய ட்ரண்ட் இப்படி யோசனைகள் நண்பருகளுடன் ஆலோசனை உரையாடல் இப்படி இருமாதம் முன்பே கலைக்கட்டத்தொடங்கும்.

southern railway - 2026
file pic

இதை எல்லாம் விட சொந்த ஊருக்கு போகும் முன்னேற்பாடு அப்பப்பா ரெயில் செல்வதா பேருந்தில் செல்வதா எதில் இடம் கிடைக்கும் ஒவ்வொரு முறையும் இதற்காய் படுகின்ற மன உளைச்சல் சொல்லி முடியாது அது அனுபவித்தவர்க்கே தெரியும்.

இப்படியிருக்க இந்த வருடம் அக்டோபர் மாதம் 27-ந்தேதி தீபாவளி பண்டிகை வருவதால், பண்டிகைக்காக அக்டோபர் 25-ந்தேதி ஊருக்கு செல்பவர்களுக்கான தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது.

buses - 2026
file pic

இந்நிலையில், சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
பெரும்பாலானோர் தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் பயணம் செய்வதால், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அக்டோபர் 25-ந்தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. மேலும், தீபாவளி பண்டிகையின்போது கூடுதலாக எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.