அடடே வட போச்சே! புகைச்சலில் திமுக உறுப்பினர்கள்!

தமிழகம்
kathi anand - 2026

சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் மகனும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்துக்கு தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் பதவி கிடைத்திருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டார், துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த். தேர்தல் முடிவிலும் பலத்த இழுபறிக்கிடையே வெற்றியும் பெற்றார். அவர் வெற்றிபெற்றது. நோட்டாவுக்கு கிழான வாக்கு வித்தியாசத்தில், இன்னும் நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை. நாடாளுமன்றத்தில் இன்னும் பதவியேற்பும் செய்துகொள்ளவில்லை

மக்களவை உறுப்பினராக வெற்றிபெற்று இன்னும் பதவியேற்றுக்கொள்ளாத நிலையில், கதிர் ஆனந்த் தென்னக ரயில்வேயில் முக்கிய பதவியை பெற்றிருப்பது திமுக சீனியர் எம்.பி.க்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் பதவி என்பது மிகுந்த அதிகாரம் மிக்க ஒன்று என்றும், புதிய திட்டங்களை கொண்டு வருவதில் இந்தப் பதவியில் இருப்பவர்கள் முக்கிய பங்காற்ற முடியும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் என்ற பதவியை தயாநிதிமாறன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கதிர் ஆனந்த அந்தப் பதவியை பெற்றிருக்கிறார்.

சென்னைக் கோட்டத்தில்தான் டி.ஆர்.பாலுவின் ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட தொகுதிகள் வருகின்றன. இந்தத் தொகுதியில் மூத்த தி.மு.க உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளார்கள். ஆனால், அவர்களை முந்திச்சென்று பதவியை கதிர் ஆனந்த் பெற்றுள்ளார்.

துரைமுருகன் ஏன் இப்படி செய்கிறார், ஒரு சீனியர் நிர்வாகிக்கு தெரியவேண்டாமா இவ்வளவு பெரிய முக்கிய பதவியை அரசியலில் சூப்பர் ஜூனியருக்கு கொடுக்கலாமா என்று, வடதமிழக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலுவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம். மற்ற உறுப்பினர்கள் கட்சியின் மீது இச்செயலால் அதிருப்தியும் அடைந்துள்ளனர்

தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் பதவி என்பது மிகுந்த அதிகாரம் மிக்க ஒன்று என்றும், புதிய திட்டங்களை கொண்டு வருவதில் இந்தப் பதவியில் இருப்பவர்கள் முக்கிய பங்காற்ற முடியும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.