திண்டுகல்லில் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் சேதம்!

சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள்
gas - 2026

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கல்லாங்காட்டுவலசு கிராமத்தில் வசித்து வரும் முருகேசன் தனது மனைவியுடன் புத்தாண்டு தினத்தைக் கொண்டாட அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார்.

அவரது மாமியாரும் அவர்களுடன் சென்றுள்ளார். முருகேசனும் அவரது மனைவியும் ஒரு வீட்டிலும், அதன் அருகிலேயே அவரது மாமியார் ஒரு குடிசை வீட்டிலும் வசித்து வந்துள்ளனர். தேவாலயத்துக்குச் செல்வதற்காக அவரது மாமியார் வீட்டில் விளக்கு மட்டும் ஏற்றி வைத்து விட்டுச் சென்றுள்ளார்.

gas 1 - 2026

அப்போது எதிர்பாராத விதமாக அந்த விளக்கின் மூலம் குடிசை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால்,வீட்டின் உள்ளே இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில், அருகிலிருந்த முருகேசனின் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஒரு பைக், ஆவணங்கள், பணம் ரூ 20,000 உட்பட அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.

அவர்கள் மூவரும் தேவாலயம் சென்றிருந்ததால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சில மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்துள்ளனர். இது குறத்து, கள்ளிமந்தையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.