கொரோனாவால் அமெரிக்கர் உயிரிழப்பு: சீன அதிபரை பாராட்டிய டிரம்ப்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
trump chinese president - 2026

சீனாவில் கொரானோ வைரஸ் தாக்குதலுக்கு முதல் வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார். சீனாவின் யுஹான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க நாட்டவர் உயிரிழந்த தகவலை அமெரிக்க தூதரகம் உறுதி செய்தது. இதனிடையே, கொரோனா வைரஸை கையாளும் விவகாரத்தில் சிறப்பாக செயல்படுவதாக சீன அதிபரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார் .

சனிக்கிழமை இன்று காலை சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்த தகவலை உறுதிப் படுத்தியது. வுஹான் நகரில் ஜின்யுன்ஷியன் மருத்துவமனையில் பிப்.6ல் அமெரிக்கர் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. இதனை சனிக்கிழமை இன்று காலை தூதரகம் உறுதிப் படுத்தியது. இதனிடையே, வெள்ளிக்கிழமை நேற்று கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான வுஹான் நகரில் இருந்து அமெரிக்கர்கள் சுமார் 300 பேரை ஏற்றி வந்த விமானம், கலிபோர்னீயா மற்றும் டெக்சாஸில் தரை இறங்கியதாக செய்தி வெளியானது.

இந்நிலையில், கொரானா தடுப்பு நடவடிக்கைகளை சீனா மிகச்சிறப்பாக செய்து வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்!

சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசியதாகவும், கொரானா குறித்தே இருவரும் பெரும்பாலும் விவாதித்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரானாவுக்கு எதிராக சீனா கடுமையாக போராடி வருகிறது என்றும், மிகச்சிறப்பான முறையில் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

corano child - 2026

உலக சுகாதார நிறுவனத்துடனும், அமெரிக்காவின் சுகாதாரத்துறை நிறுவனமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடனும் சீனா தொடர்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரானா விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் 12 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதும், அதில் 2 பேர் அண்மையில் சீனா சென்று வந்தவர்கள் அல்ல என்றும் அமெரிக்க சுகாதாரத்துறை செயலர் அலெக்ஸ் அசார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.