dhinasari panchangam jyothidam - 2026

பஞ்சாங்கம் நவ.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம்
dhinasari panchangam jyothidam - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – நவ.21

ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

கார்த்திகை ~ 5 ( 21.11.2026 ) சனிக்கிழமை
வருடம் ~ பராபவ{ பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ சரத் ருது.
மாதம் ~ கார்த்திகை மாதம் { வ்ருச்சிக மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ இரவு 2.08 AM வரை த்வாதசி பின்னர் த்ரயோதசி.
நாள் ~ { ஸ்திர வாஸரம் } சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ மறுநாள் காலை 3.58 AM வரை ரேவதி பின்னர் அச்வினி
யோகம் ~ ஸித்தி.
கரணம்~ பவம் / பாலவம்.
அமிர்தாதியோகம் ~ அசுபயோகம் / சுபயோகம்.
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30 AM.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00 PM.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30 AM.
நல்ல நேரம் ~ 7.30 to 8.30 AM & 4.30 to 5.30 PM.
சூரிய உதயம் ~ காலை 6.14 AM.
சந்திராஷ்டமம் ~ ஸிம்ஹம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்த திதி ~ த்வாதசி.
இன்று ~

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..

astrology - 2026

இன்றைய (21-11-2026) ராசி பலன்கள்


மேஷம்

எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். தந்தை வழி உறவுகளிடம் பொறுமை வேண்டும். மருத்துவப் பொருள்கள் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். வாழ்க்கை துணைவருடன் அனுசரித்து செல்லவும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும்.

ALSO READ:  பஞ்சாங்கம் நவ.23 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா நிறம்

அஸ்வினி : பொறுமை வேண்டும்.
பரணி : அனுபவம் ஏற்படும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.


ரிஷபம்

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். பலம், பலவீனங்களை உணர்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

கிருத்திகை : முடிவுகள் பிறக்கும்.
ரோகிணி : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.


மிதுனம்

வரவுகள் மூலம் கையிருப்புகள் மேம்படும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான சில பணிகளை முடிப்பீர்கள். எதிர்பாராத வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : கையிருப்புகள் மேம்படும்.
திருவாதிரை : வசதிகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.


கடகம்

நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் ஏற்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மிக செயல்களில் நாட்டம் அதிகரிக்கும். வேலை சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : மதிப்புகள் ஏற்படும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சிம்மம்

ரகசியமான செயல்பாடுகளால் ஆதாயம் ஏற்படும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை குறைத்து கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைகளை அறிந்து கருத்துகளை வெளியிடவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

மகம் : ஆதாயம் ஏற்படும்.
பூரம் : அனுபவம் உண்டாகும்.
உத்திரம் : கருத்துக்களில் கவனம்.


கன்னி

சுப விரயங்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். செல்வ சேர்க்கைக்கான முயற்சிகள் கைகூடும். மனதளவில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

உத்திரம் : முயற்சிகள் கைகூடும்.
அஸ்தம் : ஆதரவு ஏற்படும்.
சித்திரை : மதிப்புகள் கிடைக்கும்.


துலாம்

எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். நண்பர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். அரசு பணிகளில் அனுகூலம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகள் பிறக்கும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : வரவுகள் உண்டாகும்.
சுவாதி : பிரச்சனைகள் குறையும்.
விசாகம் : மதிப்புகள் உயரும்.


விருச்சிகம்

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். வித்தியாசமான உணவுகளை தவிர்க்கவும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கலைப்பணிகளில் ஒருவிதமான ஈடுபாடுகள் உண்டாகும். வியாபாரத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் நவ.19 - வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : ஆர்வம் உண்டாகும்.
கேட்டை : புரிதல் உண்டாகும்.


தனுசு

நினைத்த சில பணிகள் தாமதமாக முடியும். தாயுடன் விவாதங்கள் ஏற்பட்டு மறையும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மூலம் : வாதங்கள் நீங்கும்.
பூராடம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
உத்திராடம் : ஆர்வமின்மை குறையும்.


மகரம்

செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

உத்திராடம் : துரிதம் அதிகரிக்கும்.
திருவோணம் : அறிமுகங்கள் ஏற்படும்.
அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.


கும்பம்

மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தொழில் நிமித்தமான புதிய வியூகங்களை அமைப்பீர்கள். ஞாபக மறதி பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : புதுமையான நாள்.
சதயம் : குழப்பங்கள் குறையும்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.


மீனம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் பதற்றமின்றி செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிலும் திருப்தியற்ற சூழல்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : புரிதல் அதிகரிக்கும்.
ரேவதி : திருப்தியின்மையான நாள்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

ALSO READ:  பஞ்சாங்கம் நவ.20 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ
(குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
– சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725)

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்

தினசரி.காம்


இன்றைய சிந்தனைக்கு…

பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!

உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!

எந்த மனிதரிடமும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், உறவு கொள்வதும், பிரதி பலன் எதிர் பாராமல் அன்பு செய்வதும், அறம்! அனைவரும் அவரவர் பார்வையில், தங்களை சரியானவர்கள் என்று நினைப்பதை புரிந்து கொண்டு, எதையும் கடந்து போக கற்றுக்கொள்!! பட்டம், பதவி, பகட்டு வாழ்க்கையுடன், மனதின் மகிழ்ச்சியை, ஒன்றாக இணைத்து பார்ப்பதை நிறுத்தும் போது, உண்மையில் மனம், பக்குவம் அடைகிறது!!!

Posts by செந்தமிழன் சீராமன்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eleven =