திருப்பதி பெத்த ஜீயர் ஸ்வாமிகளுக்கு மருத்துவ சிகிச்சையில் புது திருப்பம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tirupati-petta-jeer-swamigal
tirupati-petta-jeer-swamigal

திருமலை கோவிலின் பெரிய ஜீயருக்கு கொரோனா பாசிட்டிவாக முடிவு வெளிவந்தது. அதனால் அவரை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரவேண்டும் என்று முதலில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் நினைத்தார்கள். ஆனால் அவருடைய சிகிச்சை விஷயத்தில் பெரிய திருப்பம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த மாதம் 5ம் தேதி பெரிய ஜீயர் சாதுர்மாஸ்ய தீட்சையை எடுத்துள்ளார். தீட்சையில் இருக்கும் நேரத்தில் எல்லை தாண்டி எங்கும் போகக்கூடாது என்று நிபந்தனை உள்ளது.

jeer-swami-1
jeer-swami-1

உடல் நிலை காரணமாக இன்று காலை பத்மாவதி கோவிட் சென்டருக்கு திதிதே அதிகாரிகள் பெரிய ஜீயர் ஸ்வாமிகளை அழைத்துச் சென்றார்கள்.

தீட்சையில் இருப்பதால் மீண்டும் சற்று நேரத்தில் பெரிய ஜீயர் மடத்திற்கு மருத்துவர்கள் திரும்பி அனுப்பினார்கள்.

மடத்திலேயே ஜீயருக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்கிறது. மேலும் அருகிலிருந்து சேவைகள் செய்வதற்கு சீடர் குழு முன்வந்துள்ளது.

ஜீயர் சுவாமிகளை கவனித்துக் கொள்ள, சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து டாக்டர் ஒருவர் திருப்பதிக்கு வருவதாகவும் தகவல் கூறப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.