உங்க ஹனிக்கு செஞ்சு கொடுங்க.. மினி மீல்மேக்கர் உப்புமா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
mealmakker uppuma
mealmakker uppuma

மினி மீல்மேக்கர் உப்புமா

தேவையானவை:
மினி மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) – ஒரு கப் (வேகவைக்கவும்),
சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு – கால் கப் உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு,
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – கால் கப்,
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கியது), சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி… உப்பு, மிளகுத்தூள், உருளைக்கிழங்கை சேர்த்து மேலும் வதக்கவும். உருளைக்கிழங்கு வெந்ததும், வேகவைத்த மீல்மேக்கரை நீரை ஒட்ட வடித்துவிட்டு இதில் சேர்த்துக் கிளறவும். பரிமாறும்முன் சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் பனீர் துருவலும் தூவி சாப்பிடலாம். மினி மீல்மேக்கரில் சூடான நீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்தால் போதும், வெந்துவிடும். சின்ன பீஸ் கிடைக்கவில்லை என்றால் பெரிய மீல்மேக்கரை நீரில் வேகவிட்டு நீரை ஒட்டப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.