கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மெர்க்குரி திரைப்படத்திற்கு ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை நேற்று பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ப்ரியா பவானிசங்கர் உள்பட அனைவரையும் பாராட்டிய ரஜினிகாந்த் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இந்த சந்திப்பில் பிரபுதேவா இல்லை என்றாலும் அவரது நடிப்பை பாராட்டிய ரஜினி, ‘பிரபுதேவா கலக்கிட்டாரு என்று கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் தங்கள் டுவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
