தமிழ்நாட்டை விட்டே சென்றுவிடுவேன்: ஞானவேல்ராஜா

சினி நியூஸ் சினிமா

gnanaveraja1 - 2026பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த படம் ஒன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். தமிழில் இந்த படத்திற்கு ‘என் பெயர் சூர்யா… என் வீடு இந்தியா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தபோது, இந்த விழாவில் பேசிய ஞானவேல்ராஜா கூறியதாவது: ‘தெலுங்கு திரைப்பட உலகம் தான் சிறப்பாக இருக்கிறது. அனைவரும் அதிகம் லாபம் சம்பாதிக்கிறார்கள். ஒரு படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றால், அங்குள்ள நடிகர்கள் சம்பளம் 10 அல்லது 15 கோடி தான் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தையும் பிரம்மாண்டமாக கொடுக்கிறார்கள். ஆனால், இங்குள்ள நடிகர்கள் 100 கோடி பட்ஜெட் என்றால், படத்தின் நாயகனே 50 கோடி சம்பளம் கேட்கிறார். மீதியிருக்கும் பணத்தில் எப்படி படத்தை பிரம்மாண்டமாக எடுக்க முடியும்.

அதுமட்டுமில்லாமல், தெலுங்கு நடிகர்கள் முன்பணமாக 50 லட்சம் கொடுத்தால் போதும். ஆனால், இங்கு முன்பணமாக 10 கோடி கேட்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். இதற்காக ஒரு குழு அமைத்து சம்பளத்தை வரைமுறை படுத்த வேண்டும். இதை நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சரி செய்வார் என்று நம்புகிறேன். இந்த சூழ்நிலை மாறவில்லை என்றால், தெலுங்கு படங்களை தயாரிக்க அங்கு சென்றுவிடுவேன். ஏற்கனவே அங்கு அலுவலகம் வாங்கி விட்டேன். ஏனென்றால் நஷ்டத்தில் படம் தயாரிப்பதைவிட லாபத்தில் படம் தயாரிக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள்’

இவ்வாறு ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.