செங்கோட்டை- கொல்லம் பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

train new - 2026
செங்கோட்டை-கொல்லம் மற்றும் கொல்லம் -செங்கோட்டை பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து ரயில் போக்குவரத்து துவங்கியது.

ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரம் விழுந்த காரணத்தினால் இந்த ரயிலின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த வழியாக ரயில் சேவை மீண்டும் துவக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

​இதை அடுத்து, 56335 / 56336 செங்கோட்டை – கொல்லம் – செங்கோட்டை பயணிகள் ரயில், இன்று முதல் வழக்கம் போல இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்லம் செங்கோட்டை மற்றும் செங்கோட்டை – திருநெல்வேலி ரயில்கள் ஒரே பெட்டிகளுடன் தொடர்ச்சியாகத்தான் செல்கின்றன. இடையில் 15 நிமிடம், மற்றும் 40 நிமிடங்கள் இரு மார்க்கத்தில் செல்லும் போது செங்கோட்டையில் நிறுத்தப் படுகின்றன. இப்படி இல்லாமல், திருநெல்வேலி – கொல்லம் என ஒரே மார்க்கமாக இயக்கினால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தைச் சேர்ந்த கே.எச்.கிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.