40க்கு 40ஐயும் சமாதி கட்டிடணும்! பல்லிளித்த பகுத்தறிவு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

40seatdmk - 2026

ஆமா… 40/40ன்னா 1.தானே வரும். அதானே கணக்கு என்ற கிண்டலுடன் தொடங்குகிறது, திமுக.,வினர் கருணாநிதி சமாதியில் செய்துள்ள பூ அலங்காரம்.

கருணாநிதி சமாதியில் தயிர் வடையும் முரசொலியும் வைத்ததில் தொடங்கி, வேட்புமனுவும் வெங்காய பஜ்ஜியும் வைத்து ஆசி பெறுவதில் தொடங்கி… இப்போது 40 சீட்டையும் பகுத்தறிவுப் பதுங்குகுழியில் சமாதி ஆக்கியிருக்கின்றனர் திமுக.,வினர்!

அதாவது, திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் கருணாநிதியின் நினைவிடத்தில் 40க்கு 40 என்று ரோஜா மலர்களால் அலங்கரித் துள்ளனராம்.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றியதுபோல, இந்தத் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டுதலாம்!

கருணாநிதி மறைந்த பின்னர் நடக்கும் முதல் பொதுத் தேர்தல்! ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற உள்ள தேர்தல். எனவே திமுகவினர் இந்தத் தேர்தலை முக்கியம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர். அதனால் இப்போது சமாதி வழிபாடும் சம்பிரதாய குருபூஜையும் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.