spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஜோதிடம்எது நன்மை.. எது தீமை.. சகுனம்!

எது நன்மை.. எது தீமை.. சகுனம்!

- Advertisement -
sakunam
sakunam

சுமங்கலிப்பெண், கன்னிப்பெண், சங்குநாதம், மங்கலவாத்தியம், சுபக் கூட்டம், நிறை குடம், தாசி, வேத ஓசை, மணமக்கள், அட்சதை, கட்டுச்சோறு, இரட்டை சலவைத்தொழிலாளி, இரண்டு பூரண கும்பங்கள், பூக்கள், பழங்கள், அரசன், நெருப்பு, பறவைக்கூட்டம், பிரேதம், குதிரை, யானை, காளை, மாமிசம், முத்து, தயிர், நெய், கள், பொறி, தேன், குடை, சாமரை, கொடி, கரும்பு, கழுதை, நாய், மூஞ்செலிசத்தம், ஆந்தை கிளைக் கூட்டல், கழுதை, இவை தென்பட்டால் நல்ல சகுனங்கள் என்று சொல்வார்கள்.

ஒரு காரியத்திற்கு செல்லும்போது கழுகு, கருடன், கீரி, உடும்பு, குரங்கு, நாய், ஆந்தை, அணில் இவைகள் வலமிருந்து இடமாக போனால் நல்ல சகுனம் என்று சொல்வார்கள்.

நரி, கிளி, காகம், மயில், கொக்கு, ஓனான், கோழி, மான் இவைகள் இடமிருந்து வலமாக போனால் நல்ல சகுனம்.

ஆனால் எந்த பக்கத்தில் இருந்தும் பாம்பு பூனை, பன்றி, முயல், ஆகியன குறுக்கே தென்படக் கூடாது.

விதவை, மாதவிலக்கான பெண், எண்ணெய் தலை, அவிழ்ந்த தலை, மொட்டைத்தலை, பைத்தியக்காரன், சடைமுடியுள்ள ஆண், நொண்டி, குருடர், நோயாளி, வைத்தியன், வாணிகன், தட்டான், குயவன், சன்னியாசி, ஒற்றை பிராமணன், மூன்று கோமூட்டிகள், விறகு கட்டு, ஈர வேஷ்டி, வெற்றுக்குடம், உப்பு, அரிவாள், கோடாரி, கடப்பாரை, ஆகியன எதிரில் தென்பட்டால் கெட்ட சகுனம் என்று கொள்வார்கள்.

மழைபெய்தல், இடி இடித்தல், தூரல் போடுதல், தும்மல் போடுதல், ஓங்காரமிடல், சண்டை போடுதல், கொக்கரித்தல், பன்றி உறுமுதல், பூனை கத்துதல், தலைதட்டுதல், துணி அவிழ்தல், போகாதே என்பது, இடறிவிழுதல், சாப்பிட்டுபோ என்பது, எங்கே போகிறாய் என்பது, கூட வருகின்றேன் என்பது, கெட்ட சகுனம் என்று சொல்வார்கள்.

சுப சகுனங்களாக வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, பட்டத்து யானை அல்லது கோயில் யானை இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக் கேட்பதும் சிறந்த நற்சகுனங்களாக கூறப்படுகிறது.

மேலும் அழகிய பெண்கள், நாட்டியப் பெண்கள், தயிர், இரட்டை பிராமணர்கள், மஞ்சள் கலந்த அரிசி(அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன்,ஆலய மணி ஓசை, விளக்கு, தாமரைப் பூ, நாய் தன் உடலை சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, பசு மாடுகள் இவைகளைக் காண்பது சுப சகுனமாகும்.

அசுப சகுனங்களாக அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை, ஒற்றைத் தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையைக் காண்பது, சத்தமிடல், எண்ணெய்க் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது, தன் நட்சத்திரத்துக்கு உரிய பட்சி இடமிருந்து வலமாகச் செல்வது , விருட்சம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாகக் கேட்பது, எருமை மாடு தென்படுவது ஆகியவை கருதப்படுகின்றன.

பறவைகள் கூட்டமாகப் பறந்தால், சுப சகுனமாகவும், அவை கத்திக் கொண்டே பறந்தால் அபசகுனமாகவும் ஆகிறது.

ஒரு காரியத்தைத் தொடங்கும் பொழுது கோவில் மணி ஒலித்தால் காரிய வெற்றி கிட்டும். வீட்டிலிருந்து வெளியில் புறப்படும் பொழுது தண்ணீர் நிறை குடமாக வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

அதேபோல் பால், பூத்தட்டு, உப்பு மூட்டை வந்தால் காரியம் உடனடியாக நிறைவேறும். கர்ப்பிணிப் பெண் எதிரில் வந்தால் தொழிலில் தன லாபம் பெருகும். காகம் இடமிருந்து வலமாகச் சென்றால் எடுத்த காரியங்கள் இனிதே வெற்றிபெறும்.

பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கிட்டால் இதனை கெட்ட சகுனம்

இரவு நேரத்தில் வீட்டில் ஆந்தை கத்தினால் இது கெட்ட சகுனம் எனக் கருதி அதனை விரட்டி விடுவார்கள். கழுதை கத்தினால் நல்ல சகுனம். காரணம், அது உறவைத் தேடிக் கத்துகிறது.

காக்கை கரைந்தாலும், கழுதை கத்தினாலும் உறவு வருகிறது. பூனை வலமிருந்து இடமாகப் போனால் துன்பம் விலகுகிறது. கூட்டிப் பெருக்கும்போதோ, ஒன்றை அப்பால் தள்ளும்போதோ, வலமிருந்து இடமாகத்தானே தள்ளுகிறோம்!

அதுபோல், எழுதும்போதோ, கோடு போடும்போதோ இடமிருந்து வலமாகப் போடுகிறோம். அதனால், பூனை இடமிருந்து வலமாகப் போனால் துன்பம் வருகிறது. காரணம், எழுத்திலே செலவும் எழுதலாம்; வரவும் எழுதலாம்; இல்லையா? மண ஓலையும் எழுதலாம்; மரண ஓலையும் எழுதலாம்; இல்லையா? இடமிருந்து வலம் எப்போதும் சந்தேகத்திற்கு உரியது. அதனால் ‘யானை, வலம் போனாலும், பூனை வலம் போகக்கூடாது’ என்பார்கள்.

‘நரி வலம் நல்லது’ என்பார்கள். சிலர் நரி எந்தப் பக்கம் போனாலும் நல்லது என்பார்கள். குரைக்கின்ற நாய் ஓலமிடத் தொடங்கினால், அந்த ஒலியே அவலமாக, மரண ஓலமாகப் படுகிறது. அதை ஏதோ ஒரு மரணம் பற்றிய முன்னறிவிப்பு என்று நம்பினார்கள்.

தூக்கத்தில் சூரியன் நம்மில் விழுவது கூட தெரியாமல் தூங்கக் கூடாது என்கிறது சகுன சாஸ்திரம். அப்படி தூங்கும் பொழுது சூரியன் நம் மேல் விழுந்தால், நாம் செய்கின்ற எல்லா காரியங்களும் தடைகளாக வந்து சேருமாம். இது நமக்கு தரித்திரத்தை உண்டாகும் என்று கூறப்படுகிறது.

நாம் புதிதாக ஒரு வீட்டிற்கு குடியேற போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுது சிலர் தீபத்துடன் நுழைவார்கள். அது போல் செய்யும் பொழுது நீங்கள் புறப்பட்ட வீட்டிலிருந்து தீபத்தை ஏற்றி கொண்டு வரக் கூடாது.

புதிய வீட்டிற்கு வந்ததும் வாசலில் வைத்து விளக்கேற்றி பின் எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும் என்கிறது சகுன சாஸ்திரம். இதனால் அந்த இல்லத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று கூறப்படுகிறது.

விளக்கின் ஒளி அல்லது ஒளி தரக்கூடிய ஜோதி வடிவங்கள் சுப சகுனங்கள் என்று நம் முன்னோர்கள் கூறக் கேட்டிருப்போம். அவ்வகையில் நாம் தூங்கி எழுந்திருக்கும் பொழுது நேரே தீப ஜோதி அல்லது சிறிய மின் விளக்கு எரிய வேண்டும் என்கிறார்கள். முதல் முதலாக விழித்ததும் தீப ஜோதியாகிய சுப சகுனத்தில் விழிப்பது அன்றைய நாள் முழுவதும் சுப பலன்களை தரும் என்பது நம்பிக்கை.

அடுத்ததாக மரத்தில் ஏதாவது ஒரு உயிரினம் மேலே ஏறுவது போல காட்சியைக் கண்டால், அது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஓணான் ஏறுவது, அணில் ஏறுவது அல்லது குரங்கு, பூனை போன்ற விலங்குகள் ஏறுவது போல், காட்சியை கண்டாலும் அது உங்களுக்கான ஏறுமுகம் என்று சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் வெளியே கிளம்பும்போது, உங்களின் இடது பக்கத்தில் இருந்து, வலது பக்கத்திற்கு காகம் பறந்து சென்றால், அது உங்களுக்கு அதிர்ஷ்டம், நல்ல சகுனம் என்று சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே, காகம் தலையில் அடித்தால் கெட்டது நடக்கப் போகிறது என்று சொல்லுவார்கள்.

இருப்பினும், அந்த காகம் நாம் வெளியே கிளம்பும் போது, நம் எதிரே நம்மை கடந்து செல்லும் பட்சத்தில், அது நமக்கு அதிகப்படியான நன்மையை தரும்

நீங்கள் ஒரு நல்ல காரியத்திற்காக வெளியில் புறப்படும் பொழுது கூந்தலை விரித்துக் கொண்டு யாராவது உங்கள் கண்களுக்கு தெரிந்தால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்வது நல்லதாம். இது போல் கால் தடுக்கும் பொழுது சிறிது நேரம் அமர்ந்து விட்டு, தண்ணீர் அருந்தி விட்டு செல்லுமாறு கூறுவார்கள். அதே போல தான் இந்த விஷயமும் என்கிறார்கள். அதில் விதி விலக்காக நீங்கள் பார்க்கும் தலைவிரி கூந்தலில் பூக்கள் சூடியிருந்தால் அது சுப சகுனமாக பார்க்கப்படுகிறது. அதனால் தாராளமாக நீங்கள் வெளியே செல்லலாம் என்கிறார்கள்.

அது போல் காலையில் வேலைக்கு அல்லது சுபகாரிய விஷயங்களுக்காக வெளியில் செல்லும் முன் மங்கல ஒளியான நாதஸ்வர சத்தத்தையும், தாள சத்தத்தையும் கேட்டு விட்டு சென்றால், செல்லும் காரியம் வெற்றி அடையுமாம். இதற்காகவே இந்த சத்தத்தை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக உங்களை வழி அனுப்புபவர்கள் நல்ல வார்த்தை சொல்லி வழியனுப்பினால் செல்லும் காரியம் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை

உங்கள் பூஜையறையில் பிரார்த்தனை செய்யும்போது எரிந்து கொண்டிருக்கும் விளக்கு திடீரென அணைவது முக்கியமான அபசகுனமாகும். உங்களுக்கு அருகாமையில் ஆபத்து காத்திருக்கிறது என்பதன் அறிகுறிதான் இது.

பெண்களுக்கு இடது கண் மற்றும் இடது தோள் துடிப்பதும், ஆண்களுக்கு வலது கண் மற்றும் வலது தோள் துடிப்பதும் நல்லது. விபரீதமானால் இரண்டும் கெடுதல்

நாய் ஊளையிடுவது
நகரங்களில் அதிகம் காணப்படும் விலங்குகளில் ஒன்று நாயாகும், நாய்கள் நடிகை ஊளையிடுவதை நாம பார்த்திருப்போம். ஆனால் அவை சில முக்கிய காரணங்களுக்காக இரவில் ஊளையிடும். பொதுவாக இது மரணத்தின் அறிகுறி என்று கூறப்படுகிறது. வீட்டிற்க்கு வெளியே இரவு நேரத்தில் நாய் அழும் சத்தத்தை கேட்டால் உங்களுக்கு எதிர்காலத்தில் பெரிய ஆபத்து வரப்போகிறது என்று அர்த்தம். உடனடியாக அந்த நாயை அங்கிருந்து விரட்டி விடுங்கள்.

நீங்கள் ஏதாவது முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும்போது எதிர்பாராத விதமாக யாராவது உங்களை திடீரென அழைப்பது அபசகுனங்களில் ஒன்றாகும். இது அந்த காரியத்தை தடைசெய்வதோடு உங்களின் முன்னேற்றத்தையும் தடுக்கும்.

உங்கள் வீட்டில் இருக்கும் கடவுளின் படங்களோ அல்லது சிலைகளோ திடீரென கீழே விழுவது மோசமான அபசகுனமாகும். இது உங்கள் குடும்பத்தில் ஒருவர் மரணிக்கப் போவதன் அறிகுறியாகும்.

உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடி அல்லது கண்ணாடி பொருட்கள் திடீரென உடைவது அபசகுனங்களில் ஒன்றாகும். இது உங்கள் குடும்பத்தில் இருக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் தொலையப்போவதற்கான அறிகுறியாகும்.

நீங்கள் வெளியே செல்லும்போது உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணின் அழுகையை கேட்க நேர்ந்தால் அது அபசகுனமாகும். இது உங்கள் வாழ்க்கையில் சோதனைக்காலம் வரப்போவதன் அறிகுறியாகும்.

காகம் உங்கள் தலையில் எலும்பை போடுவது முக்கியமான அபசகுனமாகும். இது உங்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருங்கியவர்களுக்கோ மரணம் அருகிலிருப்பதை குறிக்கும்.

பயணத்தின் போது உயரமான இடத்திலோ அல்லது சாலை ஓரமாகவோ மயிலை பார்ப்பது நல்ல சகுனமாகும். ஆனால் அதன் அகவல் சத்தத்தை கேட்பது நல்ல சகுனமல்ல. எனவே வெளியே செல்லும்போது மயிலின் சத்தத்தை கேட்டால் ஜாக்கிரதையாக இருக்கவும்

நீங்கள் அடிக்கடி பூனா அழுவதை கேட்க நேர்ந்தால் அது அபசகுனங்களில் ஒன்றாகும். இது உங்கள் வாழ்க்கையில் சோதனைகள் தொடர்ந்து வரப்போவதன் அறிகுறியாகும்.

விறகு, ஆயுதம், காகம், பூனை, விதவை, அந்தணர் ஆகியோரை எதிர்கொண்டால் தோல்வியைத் தழுவ நேரிடும்
வெளியே கிளம்பும்போது, திடீரென்று வாலை ஆட்டிக்கொண்டு, நாய் ஒன்று, உங்கள் முன்னே வந்து நின்றாலோ, அல்லது அந்த நாய் உங்கள் பின்னாடியே ஓடி வந்தாலும், அது ஒரு நல்ல சகுனமாக சொல்லப்பட்டுள்ளது. ரோட்டில் இருக்கும் ஒரு நாய் உங்களை கண்டு ஓடி வருகிறது என்றால், மட்டுமே அது நல்ல சகுனம்.

தும்மல், காரணம் இல்லாமல் விளக்கு அணைதல், குங்குமம் நெற்றியில் வைக்கும்போது தவறுதல் ஆகியன வருங்கால விபரீத விளைவுகளைச் சுட்டிக்காட்டும்.

சுருக்குக் கயிறு மரத்தில் தொங்குவதைக் கண்டால், தற்கொலை நினைவுக்கு வரும். கூரான ஆயுதத்தைக் கண்டால், அதனால் தீங்கு வருமோ என்று மனம் எண்ணும். நெற்றியில் குங்குமம் வைக்கும்போது தவறி விழுந்தால், கணவனுக்கு விபரீதம் ஏற்படுமோ என்று நினைக்கத் தோன்றும். கைதவறி கண்ணாடி உடைந்தால், பொருள் இழப்பு ஏற்படுமோ என்று எண்ணத் தோன்றும்.

உங்கள் வீட்டிற்குள் குருவிக்கூடு கட்டுவது உங்களை தேடி அதிர்ஷ்டம் வரபோவதன் அறிகுறி ஆகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe