மொழிக்கு ஒருவரை பிடிக்கும்: தன்ஷிகா!

சினி நியூஸ் சினிமா
thanshika - 2026

நடிகை சாய் தன்ஷிகா, தஞ்சாவூரை சேர்ந்த பெண். தமிழில் பேராண்மை, அரவான், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்ற நடிகை சாய் தன்ஷிகா.இவர் நேற்றிரவு இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

Puneeth Rajkumar - 2026

அப்போது “தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?” என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தன்ஷிகா, ” தமிழில் எனக்கு பிடித்த நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் நடித்த அசுரன் படம் பார்த்து வியந்து போனேன்”, என கூறினார்.

மேலும், “கன்னடத்தில் எனக்கு பிடித்த நடிகர் புனித் ராஜ்குமார். அதேபோல் ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகரை பிடிக்கும்”, என்று தன்ஷிகா கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.