தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடியே தீரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன் என பதிவிட்டுள்ளார்
இந்த பதிவின் மூலம் போராட்டக்களத்திற்கு கமல் விரைவில் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.
தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.— Kamal Haasan (@ikamalhaasan) March 24, 2018