தயிர் குருமா :
தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு – கால் கிலோ , ட்புள் பீன்ஸ் பருப்பு – கால் கிலோ, வெங்காயம் -3 தயிர் – ஒன்றரைக் கப், கரம் மசாலா – கால் ஸ்பூன், தேங்காய் – அரை மூடி முந்திரி பருப்பு – 10 கசகசா- 2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 7
செய்முறை :
வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், உருளைக்கிழங்கை தோலுரித்து துண்டுகளாக்கி வைக்கவும்.உருளைக்கிழங்கை பீன்ஸுடன் வேக வைக்கவும்.மசாலாக்களை தனியாகவும், தேங்காய்,கசகசா,முந்திரி பருப்பு, பச்சைமிளகாயைத் தனியாகவும் அரைக்கவும்.
நெய்யை காய வைத்து ,வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி ,அரைத்த மசாலா காய்கறி,கரைத்த தயிர் சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும்.கிழே இறக்கும் போது கரம் மசாலா போட்டு இறக்கவும்



