அசாதாரண சூழல்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

கல்வி சற்றுமுன் தமிழகம்

anna university - 2026
தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால், மே 25 முதல் 28ஆம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக, அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும், மே 29ஆம் தேதிகளில் இருந்து ஏற்கெனவே திட்டமிடப்பட்ட தேர்வுகள், அட்டவணைப்படி அதே நாட்களில் நடைபெறும் என்றும், அவற்றில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் மே 25, 26, 28 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் மட்டும்,  ஜூன் 5, 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.