October 22, 2021, 2:50 am
More

  ARTICLE - SECTIONS

  ஆலயங்களில் அந்நிய மதத்தவர் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்!

  மந்திரங்களின் வருமானங்களுக்கு வரி கூட இன்றி காப்பாற்றுவது, ஹிந்து கோவில்களின் வருமானத்தைக் கூட அவர்களுக்கு பகிர்ந்தளிப்பது

  samavedam pic e1520302902270

  தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
  தமிழில் – ராஜி ரகுநாதன்

  ஹிந்து கோவில்களில் அந்நிய மதத்தவர் ஊழியர்களாக இருக்கக் கூடாது என்ற கூற்று அதிகாரப் பூர்வமாக வெளிவருவது மகிழ்ச்சியே! ஒரு புறம் அந்நிய மத பிரசாரகர்களுக்கு அரசாங்க செல்வத்தை பங்கிட்டுக் கொடுப்பது, அவர்களின் பிரார்த்தனை மந்திரங்களின் வருமானங்களுக்கு வரி கூட இன்றி காப்பாற்றுவது, ஹிந்து கோவில்களின் வருமானத்தைக் கூட அவர்களுக்கு பகிர்ந்தளிப்பது, ஹிந்து கோவிகளின் மேல் வரி வசூலிப்பது போன்ற கொடுமைகள்நடந்தபடி இருந்தாலும்இந்த அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதே என்று தோன்றுகிறது. அல்லது கண்துடைப்புச் செயல் என்று கூட கூறலாம்.

  ஆயின்இது குறித்து மதம் மாற்றும் மதங்களைச் சேர்ந்த சிலர் கவலை கொண்டனர். “ஹிந்து ஆலயங்களில் பணி புரியும் எங்களை விரட்டுவது தவறு.அதனால்ஹிந்துக்களின் மனநிலை காயப்படும். தெய்வக் குற்றமாகி விடும். அப்படி ஆயின் எங்கள் மதத்தைச் சேர்ந்த வெளிநாட்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளான மின்சாரம், பஸ், ஜெனரேட்டர், போன், சிசிடிவி,ஸ்பீக்கர், கம்ப்யூடர் போன்றவற்றைக் கூட கோவில்களில் பயன்படுத்தக் கூடாது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எங்கள் வெளிநாட்டு மத சயின்டிஸ்டுகள் கண்டறிந்த விமானங்களிலோ கார்களிலோ வரக் கூடாது” என்று வெறிபிடித்த வாதங்கள் செய்தார்கள். ஏதோ பெரிய விஷயம் கூறிவிட்டாதாக பீற்றிக் கொண்டார்கள் கூட.

  இந்த மூர்க்க சிகாமணிகளின் ஓட்டை வாதங்களை அந்த கும்பலைத் தவிர அறிவுள்ளவர் யாரும் அங்கீகரிக்க மாட்டார். மின்சாரம் போன்றவற்றை கண்டுபிடித்தவர் யாரும் கோவில்களில் ஊழியர்களாக இல்லை… இருக்கவும்மாட்டர்கள். அவர்களின் மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள் கூறிய சயிண்டிஸ்டுகள் அனைவரும் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை. அதில் பல விஞ்ஞானிகள் எந்த ஒரு மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. மேலும்பலர்நாஸ்திகர்கள். அறிவியல் உண்மைகளைக் கூறிய கலிலியோ போன்றவர்களை பயங்கரமாக சித்திரவதை செய்த மதம் அவர்களுடையது. அந்த மதத்திற்கும் இந்த சயின்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

  பலப்பல யுகங்களுக்கு முன்பே கணிதம், ஜோதிட விஞ்ஞானம், கட்டட சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், மருத்துவ சாஸ்திரம், யோக சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் போன்றவற்றை அளித்த ஹிந்து மதம் பலப்பல விஞ்ஞானங்களுக்கு மூலம் என்று உலக மேதைகளே அங்கீகரித்துள்ள காலம் இது. மேற்சொன்ன விஞ்ஞான அம்சங்கள் அனைத்தும் ஹிந்து மத நூல்களான வேதம், புராணம், இதிகாசம் போன்ற அனேக சாஸ்திரங்களில் உள்ளன.

  பைத்தியம் போல் வாதம் செய்யும் அந்த அந்நிய மதத்தவர்களின் மத நூல்களிலிருந்து ஒரு விஞ்ஞான அம்சம் கூட வெளியில் வந்த அறிகுறிகிடையாது. அதோடு தார்மீக, தத்துவ சிந்தனைகளுக்கு நிற்க முடியாத விசுவாச சித்தாந்தங்களே அவற்றின் வாக்கியங்கள் என்று அந்த தேச மேதாவிகளே தெளிவாக கூறிவிட்டார்கள்.

  இவர்கள் குறிப்பிடும் வெளிநாட்டு விஞ்ஞானிகள் கோவில்களில் வேலை கொடுத்தாலும் ஏற்க மாட்டார்கள். மதத்தோடு தொடர்பில்லாத விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அவர்களுக்குள்ளதால் மட்டுமே அந்த மதத்தவர்களை கோவில்களில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறுவது தப்பு.

  இவ்விதம் வாதிப்பவர்கள் மசூதியிலோ மக்காவிலோ உத்யோகம் செய்ய முடியுமா? அவர்களின் வாடிகனிலோ சர்சுச்களிலோ பிற மதத்தவர்களை… தம் மதத்திற்கு மாற்றாமல்… உத்யோகிகளாக இருத்துவார்களா?

  உலக அளவில் பிரசித்தியான மத அமைப்புகள் அனைத்தும் தம் அமைப்புகளில் அந்நியர்களை நுழைய விடாது. அவர்களின் மத அமைப்புகளின் சுற்றுபுறத்தில் கூட பிற மதத்தைஅண்ட விடமாட்டார்கள். அதற்காக பிற மதங்களை அவமதிப்பதாகபொருள் அல்ல. மதத்தோடு தொடர்பில்லாத துறைகளில் அனைத்து மதத்தவரும் பணி புரிந்து வருகிறார்கள்.

  திருமலையின் சுற்றுப் புறத்தில் அந்நிய மத அமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென்று முயற்சிக்கும் அவர்கள், தங்ககளின் வெளிநாட்டு மத நிலையங்களின் (வாட்டிகன் அல்லது மக்கா) சுற்றுப்புறத்தில் ஒரு கணபதி கோவிலோ சிவாலயமோ கட்ட அனுமதிப்பார்களா?

  ஹிந்து கோவில்களில் அந்நியர்கள் எதனால் வேலை பார்க்கக் கூடாது?

  *எந்த அமைப்பிலும் பணிபுரிபவர்களுக்கு முதலில் அந்த அமைப்பின் மீது மதிப்பு கௌரவம் விசுவாசம் இருக்க வேண்டும். அப்படி இருக்கையில், நம்பிக்கையின் மீது மட்டுமே ஆதாரப்பட்ட மத நிலையங்களில் அவற்றின் தேவை இன்னும் அதிகம் இருக்கும் அல்லவா?

  *இன்று லபோதிபோ என்று அடித்துக் கொள்பவர்கள் தாம் மதமாற்றம் அடைவதற்கு முன்பிருந்த ஹிந்து பெயர்களையே பயன்படுத்திக் கொண்டு ஆலயங்களின்குடியிருப்புகளில் இருந்து கொண்டு தம் மதங்களைக் கடைபிடிப்பது வஞ்சனை அல்லவா?

  *பிற மத வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் உள்ள ஹிந்து கோவில்களில் அன்னியர் வேலை செய்ய நுழைந்தால் கட்டாயம் அவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து விளையும்.

  *ஹிந்துவல்லாத பிற மதங்களுக்கு ஹிந்து மதம் மீது கடுமையான வெறுப்புள்ளது என்ற உண்மையை அங்கீகரிக்கத்தான் வேண்டும். பிற மத சகிப்புத் தன்மை மட்டுமல்ல.. பிற மதங்களை ஆதரிப்பது கூட மிக அதிக அளவு கொண்டது ஹிந்து மதம். ஆனால்ஹிந்து மத சம்பிரதாயங்களை அறியாதவர்களையும் கௌரவமளிக்காதவர்களையும் எவ்வாறு கோவில்களில் நியமிப்பது?

  *ஹிந்துக்களை காபிர்கள் என்றும் ஹிந்து கடவுள்களை சைத்தான்கள் என்றும் தீர்மானமாக நம்புபவர்கள் ஹிந்து கோவில்களில் பணி புரிய நினைப்பது விபரீதம்… விந்தை.

  *வெறுப்பு இல்லாமல் பிற மதங்களுக்கு மாறமாட்டர்கள். வெறுப்பை ஊட்டி தம் மதத்திற்கு மாற்றிக் கொள்வது அவர்களின் மதத்தின் முக்கிய கொள்கை. அந்த சித்தாந்தத்தை துளிக் கூட விடாதபழமைவாதிகள் அவர்கள். ஆசை காட்டியோ உயிர் பயம் ஏற்படுத்தியோ மத மாற்றம் செய்யும் வரலாறு கொண்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் நம் மத அமைப்புகளில் கூட தம் கொள்கையையே கடைபிடிப்பார்கள்… கடைப்பிடித்து வருகிறார்கள் கூட. அத்தகைய கொள்கையின் தாக்கத்தால் மத பிரச்சாரம், மத மாற்றம் போன்றவற்றை ஒரு செயல்பாடாக, ஒரு இயக்கமாக செய்து வருகிறார்கள்.

  உலகை அச்சுறுத்தும் மதத் தீவிரவாதிகளிடம் அந்தந்த மதத்தவர்களுக்கு அனுதாபம் உள்ளது. தம்முடையதல்லாத மத அமைப்புகளில் பணி புரியும் போது அந்த அமைப்புகளை அழிப்பதற்கு அந்த தீவிரவாதிகளுக்கு உதவத்தயங்கமாட்டார்கள் கூட. பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் யோசித்தாலும் அனைத்து விதங்களிலும் சந்தேகிக்க வேண்டிய அம்சம் இது.

  *மிகவும் பக்தியோடும் நம்பிக்கையோடும் கோவிலுக்கு வருபவர்களுக்கு அங்கு அந்நியர்கள் திரிவது தென்பட்டால் பக்தர்களின் மனநிலை பாதிக்கப்படாதா? எந்த மத நிலையங்களில் அந்த மதம் தொடர்பான வாசனைகள் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல.

  *ஹிந்து கடவுளர்களின் பிரசாதங்களைக் கூட தொட மாட்டோம் என்று கூறுபவர்கள் அந்த தேவஸ்தானங்களின் சம்பளத்தை எப்படி ஏற்கிறார்கள்?

  *அன்னிய மத்தவரின் எண்ணிக்கைகோவில்களில்சிறிதுசிறிதாகஅதிகரித்தால் அவர்கள் தம் சமூகத்திற்காக ஒரு பிரார்த்தனை நிலையத்தை அமைத்துக் கொள்ள நினைக்கலாம். தம்மவர் அல்லாத மத உத்தியோகிகளிடம் விரோதம் காட்டலாம். மதம்மாற்றும் முயற்சி செய்யலாம்.

  இந்த சந்தேகங்கள் ஆதாரமற்றவை அல்ல. பல கல்வி அமைப்புகளிலும் அலுவலகங்களிலும் மதம் மாற்றும் முயற்சிகளும், மாறாவிட்டால்பலவித துன்புறுத்தல்கள் நடப்பதும் செய்திகள் தெரிவிக்கும் உண்மை. புகார் அளிப்போமா என்றால்.. அந்த அதிகாரிகள் கூட அந்த மதத்தைச் சேர்ந்தவராக அவற்றைக் குப்பையில் போடுகிறார்கள்.

  மாணவர்களை மதம் மாறும்படி அழுத்தம் கொடுப்பது, பொட்டு வைத்துக் கொண்டால் ஏளனம் செய்வது, மாறாவிட்டால் மார்க் போடாமல் அழவிடுவது போன்றவை நடக்கின்றன என்பதற்கு ஆதாரங்களாக செய்திகள் வெளிவருவதைப் பார்க்கிறோம்.

  இத்தகைய வழிமுறை ஹிந்து ஆலயங்களில் கூட அதிகரித்தால் அங்கு ஒரு துணை ஆலயமாக தம் மத நிலையத்தை அமைத்து, சிறிது சிறிதாக நம் கோயில்களையே துணை கோயில்களாக மாற்றி விடுவார்கள். அல்லது இருப்பில்லாமல் கூட செய்து விடுவார்கள். அந்த மதங்களின் வரலாறு அப்படிப்பட்டது.யாராவது தடுத்தால் மைனாரிடிகளின் மீது தாக்குதல் என்று வீதியில் இறங்கி போராடுவார்கள். தேவையானால் ஹிந்து தலித்துகளை உடன் சேர்த்துக் கொண்டு தலித்துகளின் மீது தாக்குதல் என்று நிறம் பூசுவார்கள். அவர்களுக்கு போலி மதசார்பற்ற செக்யூலர்வாதிகளும் இடதுசாரிகளும்ஒத்து ஊதுவார்கள்.

  இப்போதே ஆலய அதிகார்களின் ஊழல் காரணமாக பல லைசென்சுகள் அந்நியர்களின் கைவசமாகியுள்ளன. பெருங்கோவில்களின் சுற்றுப்புறங்களில் அந்நிய மதத்தவர்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன.

  பாரத தேசமெங்கும் மதத்தோடு தொடர்பில்லாத இடங்களில் அனைவரும் சேர்ந்து அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்து கொண்டு பிறரையும் வாழவிடுவது அவசியம். ஆனால் மத நிலையங்களில் மட்டும் அந்த மத நம்பிக்கை இல்லாதவர்களையும் சம்பிரதாயம் தெரியாதவர்களையும் நியமிக்கக் கூடாது.

  ஹிந்துக்களின் ஆலயங்களில் மட்டுமாவது ஹிந்துக்களின் மனநிலையை பாதுகாக்க வேண்டாமா? முன்னாள் ஹிந்துக்களாகிய பிறமதத்தவர்மீதி உள்ள ஹிந்துக்களை மதம் மாற்றும் வேலையை நிறுத்த மாட்டார்கள்.

  குறைந்தபட்சம் புகழ்பெற்ற கோவில்களையாவது காப்பாற்றிக் கொள்ளாவிட்டால் ஹிந்துக்களின் இருப்பிற்கே ஆபத்து. இந்த விஷயத்தில் சோம்பலைஉதறி விட்டு சைதன்யத்தோடு விழித்தெழ வேண்டும். பாரத தேசத்தில் அனைத்து மதத்தவரும் சமரசத்தோடு அனைத்து துறைகளிலும் பரஸ்பரம் கௌரவத்தோடு வாழ வேண்டும். ஆனால் அவரவர் மத நிலையங்களில் அவரவர் மட்டுமே பணி புரிவதே அனைத்து மதங்களுக்கும் நன்மை.

  அந்நியர்களின் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொண்டதால் அந்த தேசத்தவரின் மதத்தையும் கூட ஏற்றுக் கொள்ளவேண்டும் எந்த நியமமும் இல்லை. பல நாஸ்திக நாடுகள்,அவர்களின்மதங்களுக்கு மாறாக உள்ள வேற்று நாடுகளின் விஞ்ஞானத்தை பயன்படுத்துகின்றன. அதற்காக மதத்தை ஏற்கவில்லை.

  இந்த பைத்தியக்கார வாதங்களால் தெரியவந்தது என்னவென்றால்…தம்முடையது வேற்றுநாட்டு மதம் என்பதை பறைசாற்றுகிரார்களா?

  மண்ணிலிருந்து வந்த நீரை பயன்படுத்தினாலும் நீரோடு மண்ணைக் கலக்கமட்டோம் அல்லவா?அதனதன் தனித்தன்மை அததற்கு உண்டு.

  விஞ்ஞானம் சமுதாயத்தோடு தொடர்புடையது. மதம் தனிமனித தொடர்புடையது. அது சம்பிரதாயமாக வருவது. வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதாலோ வெளிநாட்டு விஞ்ஞானத்தை பயன் படுத்துவதாலோவெளிநாட்டாரால் தம் தேசம் ஆளப்படவேண்டும் என்று எந்த தேசமும் விரும்பாது.

  Source: ருஷிபீடம் நவம்பர் 2019

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-