— செல்வம் நாயகம் —
Hindenburg Vs Adani! – “அதானி பங்குகளில் முறைகேடு” என அமெரிக்க ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அறிக்கை விட்டதும், அதைத் தொடர்ந்து அதானி பங்குகள் வீழ்ந்ததும் நமக்கு நினைவிருக்கும். மேற்படி விவகாரத்தை நீதிமன்றம் எடுத்துச் சென்றவர் காங்கிரஸின் அடிவருடியான பிரஷாந்த் பூஷன். அதற்கு செபி “அதானி பங்குகளில் எந்த பிரச்சினையும் இல்லை.” என்று பதிலளித்தது.
“செபி சரியில்லை. வெளிநாட்டு நிறுவனத்தைக் கொண்டு செபியை ஆடிட் செய்ய வேண்டும்” என்று கேட்ட பூஷனிடம், “செபி அறிக்கையை நாங்கள் ஏற்கிறோம்” என்று நீதிமன்றம் பதிலளித்து மண்டையில் குட்டு வைத்தது.
இப்போது, ஹிண்டன்பர்க், செபிக்கு அளித்த பதில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து, பாஜக.,வின் மஹேஷ் ஜேத்மலானி பல விவரங்களை சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ANI செய்தி நிறுவனத்துக்கு அவர்அளித்த பேட்டியிலிருந்து:
1, ஹிண்டன்பர்க் ‘அதானி பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை’ வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டது.
2, ஹிண்டன்பர்க்கை அந்த ‘அறிக்கையை’ தயாரிக்க சொன்னது Mark Kingdon & அவரது சீன மனைவி Anla Cheng ஜோடியின் அமெரிக்க நிறுவனம்.
3, அன்லா செங் ஒரு சீன உளவாளி என்ற விவரம் அமெரிக்க பாராளுமன்றத்தில் / காங்கிரஸில் வெளியாகியிருக்கும் தகவல். அன்லா செங் அமெரிக்காவில் விசாரிக்கப்பட்டுவரும் நபர்.
4, மார்க் கிங்டன் இந்தியாவின் கோட்டக் (Kotak’s International Investment arm KMIL) நிறுவனத்தை நாடி, அதானி பங்குகளை வர்த்தகம் செய்யக் கோர, அதன் விளைவாக Kotak India Opportunity Fund KIOF உருவாக்கியது கோட்டக். மொரிஷியஸ் வழியாக இது நடந்திருக்கிறது.
5, ஹிண்டன்பர்க் ‘அறிக்கை’ வெளியானதும், பங்குகள் வீழ்ச்சியடையும் போது பங்குகளை வாங்கி, மீண்டும் பங்குகள் விலை ஏறும் போது விற்று, பல மில்லியன்கள் பார்த்திருக்கிறது இந்தக் கூட்டம்.
6, கோட்டக் உருவாக்கிய KIOF மூலம் அதானி பங்குகளில் 40 மில்லியன் டாலரை கிங்டான் – செங் ஜோடி முதலீடு செய்தது.
7, இதில் அதானிக்கு எதிராக குரல் எழுப்பிய அரசியல் கட்சிகள் (காங். – திரிணாமூல் – திமுக., உள்ளிட்டோர்) பலனடைந்தனரா / லஞ்சம் பெற்றனரா? என்று கேட்கிறார் ஜெத்மலானி.
8, உலகெங்கும் பல துறைமுகங்களை ஏற்று நடத்துகிறார் அதானி. இது சீனாவின் விருப்பங்களுக்கு விரோதமாக இருக்கிறது. (கடைசியாக இஸ்ரேல் துறைமுகத்தை அதானி எடுத்த பிறகு தான் இந்த ஹிண்டன்பெர்க் அறிக்கை என்பதை கவனிக்கவும்).
9, இந்தியாவின் வளர்ச்சி மூதும், அதானியின் துறைமுகங்களும் கண்ணெரிச்சலை உருவாக்கியிருக்கிறது சீனாவுக்கு. ஹிண்டன்பெர்க் அறிக்கை மூலம் அதானி முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டதோடு, அந்த அறிக்கையை காரனமாகக் காட்டி பாராளுமன்றத்தை முடக்கினர் ராகூல் இத்யாதிகள்.
10, கோட்டக் பல பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறது. இதிலும் சிக்கியிருக்கிறது. இன்னும் செபி விசாரணை நடந்து வருகிறது.
அதானிக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு, பெருமளவு விளம்பரம் தேடியதில் முக்கியமானவர்கள்: காங். தலைவர் ராகுல், மஹுவா மொயித்ரா, ரவிஷ் குமார் (உள்ளிட்ட பல என்.டி.டி.வி குழுவைச் சேர்ந்தவர்கள்), பர்க்கா தத், நியூஸ் மினிட் தன்யா ராஜேந்திரன், பிரஷாந்த் பூஷன் உள்ளிட்ட பலர்.
ஒரு புறம் அதானி பாரதத்தின் கொள்கை முடிவுகளின் படி செயல்படும் பல்வேறு விவகாரங்களில் பாரதத்துக்கு துணை நிற்கிறார். ஆனால் அம்பானி இன்னும் இந்தியா விரோதிகளான சமாஜ்வாதி – காங்கிரஸுக்கு துணை நிற்கிறார்! எனினும் காங்கிரஸ் கோஷ்டிகள் இவர்கள் இருவரையும் குறித்து தூற்றியே அரசியல் லாபம் அடைந்தன.