
கோவைக்காய் கறி
தேவையானவை:
நறுக்கிய கோவைக்காய் – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் – தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கோவைக்காயை நன்றாக கழுவி நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, கோவைக்காயை சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு நன்றாக கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்து மூடி வைத்து, சிறிது நேரம் வேகவிட்டு கிளறி இறக்கவும்.
கோவைக்காய் இரும்புச் சத்து கொண்டது



