
புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ்
தேவையான பொருட்கள்
சாதம் – ஒரு கப்
வறுத்த வேர்க்கடலை
பொட்டுக்கடலை – தலா 50 கிராம்
முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு – தலா 10
உலர்ந்த திராட்சை – 20
நெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை :

முதலில் கடாயில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர, கொடுத் துள்ள எல்லா பொருட் களையும் சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும்.
அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.



