மில்க் ப்ரெட் அல்வா
தேவையானவை:
பால் – 2 கப்,
ஸ்வீட் பிரெட் – 5 துண்டங்கள்,
பொடியாக நறுக்கிய முந்திரி -ஒரு டேபிள் ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பாதாம் – ஒரு டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
பால்கோவா – 2 டேபிள் ஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன், (விருப்பப்பட்டால்)
ஏதாவது மில்க் பிஸ்கெட் – 5 அல்லது 6,
சர்க்கரை – கால் கப்
செய்முறை:
பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்குங்கள். பிஸ்கெட் நீங்கலாக, மற்ற எல்லாப் பொருள்களையும் அடி கனமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். சற்று சேர்ந்து வரும்வரை கிளறி இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, பிஸ்கெட்டைப் பொடித்து, அதன்மேல் பரவலாகத் தூவுங்கள் (இது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்). ஆறிய பிறகு, இதை ஃப்ரிஜ்ஜில் நன்கு குளிரவைத்து பரிமாறுங்கள்.