
மாதுளை முத்து தயிர்ப்பச்சடி
தேவையானவை:
மாதுளை முத்துக்கள் -1 கப்,
தயிர் -ஒன்றரை கப்,
பெரிய வெங்காயம் -சிறியதாக 1,
பச்சை மிளகாய் -2,
உப்பு -தேவைக்கேற்ப.
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து பிசறி வைத்துவிடவும்.
சிறிது நேரம் கழித்து, அதில் தயிரை கலக்கவும். பரிமாறப்போகும் நேரத்தில் மாதுளை முத்துக்களையும் கலந்து பரிமாறவும். கண்ணைக் கவரும் நிறத்தில், பிரமாதமான சுவை கொண்ட தயிர் பச்சடி இது. செட்டிநாட்டுக் கல்யாண விருந்துகளில் பிரபலமானது.