December 6, 2025, 3:08 AM
24.9 C
Chennai

இவ்வளவு இருக்கா..? இது தெரியாம போச்சே!

onion thal - 2025

உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படும் வெங்காயதாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

வெங்காயத்தாள் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கீரையாகும். வெங்காயத்தாளனது சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. வெங்காயத்தாளனது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என பலவாறு அழைக்கப்படுகிறது.

இது சாம்பார் வெங்காயம், பல்லாரி, பூண்டு ஆகியவற்றின் குடும்பத்தை சேர்ந்த கீரையாகும். வெங்காய தாளின் மேற்பகுதியானது பச்சையாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும்.

வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.

வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தக சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தக சத்து பல ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு வாரி வழங்குகிறது.

வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளன.

இதன் அறிவியல் பெயர் அல்சியம் செபா வர். இது தங்க நிறத்தில் இருந்து ரோஜாப் பூ நிறம் வரைக்கும் கூட வேறுபடும்.

ஊட்டச்சத்து அளவுகள் 100 கிராம் வெங்காயத்தில் 72 கலோரிகள் ஆற்றல் உள்ளது 16.8 கிராம் கார்போஹைட்ரேட்
3.2 கிராம் நார்ச்சத்துகள்
7.87 கிராம் சர்க்கரை
79.8 கிராம் நீர்ச்சத்து
2.5 கிராம் புரோட்டீன்
37 மில்லி கிராம் கால்சியம்
1.2 மில்லி கிராம் இரும்புச் சத்து
21 மில்லி கிராம் மக்னீசியம்
60 மில்லி கிராம் பாஸ்பரஸ்
334 மில்லி கிராம் பொட்டாசியம்
12 மில்லி கிராம் சோடியம் உள்ளது.

வெங்காயத்தாள் மருத்துவ பயன்கள்

  1. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
  2. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
  3. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
  4. வெங்காயத்தாள் இரத்தத்தில் சேர்ந்துள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.
  5. வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது.
  6. வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
  7. வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும்.வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.
  8. வெங்காய தாளில் காணப்படும் விட்டமின் கே இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  9. வெங்காய தாளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்களான ப்ளவனாய்டுகள், குவர்செடின் மற்றும் அன்டோசைனின் போன்றவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகின்றன.
  10. வெங்காய தாளில் உள்ள வைட்டமின் கே-வானது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
  11. வெங்காய தாளானது புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது. இதில் உள்ள அலிசின் என்னும் வேதிபொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.

இது இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, எல்லா உடல் உறுப்புகளுக்கும் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. உடல் ஆற்றலுக்கும், செல்களின் வளர்ச்சிக்கும் துணை புரிகிறது.

56029a85 a2c0 425e b80f 1a3b04310eec - 2025

இந்த வெங்காயத்தில் அல்சின் என்ற பொருள் உள்ளது. இது உங்கள் உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதில் உருவாகும் என்சைம்னான ரிடெக்டேஸ் கல்லீரலில் தங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது

அல்லியம் மற்றும் அல்லில் டிஸல்பைடு, வெங்காயத்தில் காணப்படும் இரண்டு பைட்டோ கெமிக்கல் கலவைகள். இந்த இரண்டு பைட்டோ கெமிக்கல்கள் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.

வெங்காயத்தில் உள்ள காமா – அமினோபியூட்டிரிக் அமிலம் ஒரு நியூரோ டிரான்ஸ்மிட்டர் மாதிரி செயல்பட்டு மூளையை ரிலாக்ஸ் செய்கிறது. அதே மாதிரி இதிலுள்ள விட்டமின்கள், மினரல்கள் மற்றும் பைரிடாக்ஸின் போன்றவைகள் நரம்புகளை அமைதிப்படுத்த மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது.

வெங்காயத்தில் அதிகளவு கால்சியம் சத்து இருப்பதால் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது. எனவே அடிக்கடி நீங்கள் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உங்கள் எலும்புகள் வலிமையாக ஆரோக்கியமாக இருக்கும். இது மட்டுமல்லாமல் வெங்காயம் கூந்தலுக்கும், சருமத்திற்கும் சிறந்தது.

இரத்தக் கசிவு உள்ளவர்கள் வெங்காயத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிருங்கள். இது இரத்தம் கட்டுதலை தடுத்து அதிகமாக இரத்தக் கசிவு ஏற்பட செய்து விடும் குறைந்த இரத்த சர்க்கரை கொண்டவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் போது மேலும் இரத்த சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.

கண் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் அவசியம் வெங்காயத்தாளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிட்ட பார்வை/தூர பார்வை என்பது இன்றைய உலகில் பெரியவர்கள் மட்டும் பாதிப்படைவதில்லை. மொபைல்/டிவின்னு பார்த்து பார்த்து ஸ்கூல் பிள்ளைகள் கூட பாதிக்கப்படுகிறார்கள். இந்த பார்வை கோளாறுகளை சரி செய்வதற்கு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை வெங்காயத்தாளை பச்சையாகவோ, உணவிலோ சேர்த்துக் கொள்ள வேண்டும். பார்வை மங்களாக தெரிபவர்கள் வெங்காயத்தாள் பூவை கசக்கி கண்களில் காலை மாலை இரண்டு அல்லது மூன்று சொட்டு போட வேண்டும். இவ்வாறு செய்தால் மூன்றே நாட்களில் பார்வை தெளிவடையும்.

வெங்காயத்தாளை எப்படி வாங்குவது:

வெங்காயத்தாளின் அடிபாகத்தில் இருக்கும் வெங்காயம் பளபளப்பாக இருக்க வேண்டும் அதன் குச்சி போன்ற தலைப்பகுதி நல்ல அடர்ந்த நிறத்தில் ஊசி போல் இருக்க வேண்டும்.

வீட்டில் பாதுகாக்கும் முறை:

சாதரணமாக வெங்காயத்தை காற்றோட்டமாக வைப்பது போல் இதை வைக்க கூடாது இதை குளிர்சாதன பெட்டியில் அதன் சத்துக்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

வெங்காயத்தை போன்றே இதையும் பயன்படுத்தலாம்.

வெங்காயத்தாள் சாம்பார்-வெங்காயத்திற்கு பதிலாக இதை தாலிக்கலாம்
சாண்ட்விச் செய்யலாம்-பிரட் சாண்ட்விச் தயாரிக்கும் போது அதில் வெஜிடபிள்ஸ் அல்லது நான்வெஜ் (non veg)உடன் வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.
சூப்-அனைத்து விதமான சூப்களிலும் இதனை சேர்த்து கொள்ள வேண்டும்.

வெங்காயத்தாள் பூ மற்றும் வெங்காயத்தை சம அளவெடுத்து சாறெடுத்து தினமும் வாய்கொப்பளித்து வந்தால் தீராத பல்வலி நீங்கும் ஈறு பிரச்சனைகள் குணமாகும்.மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.

வயிற்று பிரச்சனை:

வெங்காயத்தாள் பூவை பொடியாக வெட்டி ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் சேர்த்து சூடேற்றி வதக்கவும். பூ வெந்தவுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் குடித்தால் வயிற்று பிரச்சனை நீங்கும் மேலும் இது பசியை தூண்ட கூடியது. செரிமான உபாதைகளை நிவாரணம் கூட வழங்குகிறது.

மூலம்:

ஒரு சட்டியில் வெங்காயத்தாள் பூக்களையும் வெங்காயத்தையும் நறுக்கி தயிரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் எரிச்சல் குத்தல் குணமடையும்.
நினைவாற்றலை அதிகரித்து அறிவுத்திறன் வளர்க்க உதவும்.
வெங்காயத் தாள் சாறைத் தொடர்ந்து குடித்து வந்தால் இதயத்தில் ஏற்படுகிற அடைப்பு90% குறையும். காக்காய் வலிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பச்சரிசி தவிட்டுடன் வெங்காயத்தாள் சாறு கலந்து மூக்கில் ஒரு சொட்டு விட்டால், உடனே குறையும். (இதை விபரம் அறிந்தவர் செய்ய வேண்டும்.) காய்ச்சலைக் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

கை குழந்தைகளுக்கு 5 முதல் 10 சொட்டு வரை தரலாம். இரண்டரை வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் என்றால், 2.5 மில்லி லிட்டரும், 5-லிருந்து 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியருக்கு ஐந்து மில்லி லிட்டரும், 18 வயதைக் கடந்தவர்களுக்கு 15 மில்லி லிட்டரும் கொடுக்கலாம்.

காலை, மாலை என இரண்டு வேளையும் சாப்பிட்ட பிறகு குடிப்பது அவசியம். வயிற்று எரிச்சல் மற்றும் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் ஒரு மடங்கு சாறில் 2 மடங்கு தண்ணீர் கலந்து அருந்தலாம்.

காரத்தன்மை உள்ள இந்த சாறை அருந்த சிரமப்படுபவர்கள், நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வெங்காயத்தாள் சாற்றினை இனிப்பு கலந்து பருகக் கூடாது.

வெங்காயத் தாளை நன்றாக நசுக்கி கொள்ளவும். பின்னர், அதனை சுத்தமான மண் பானையில் போட்டு, வெள்ளை நிறத்துணியால் 3 நாட்கள் மூடி வைக்கவும். இவ்வாறு வைக்கப்படும் தாள் மெல்லமெல்ல புளிப்புத்தன்மை உள்ள காடி நீராக மாறும். இந்தப் பானைக்குள் கண்ணாடி டியூப் வழியாக குளிர்ந்த நீர் செலுத்தப்படும். பிறகு இதை சூடுபடுத்துவதால் சுடுநீராக வெளியேறும்.

கடைசியாக, இந்த நீரில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு ஆனியன் எஸன்ஸ் சேகரிக்கப்படும். இவ்வாறு தயாரிக்கப்படும் வெங்காயத் தாளின் 10 முதல் 15 மில்லி லிட்டர் சாறு, 20, 30 வெங்காயத்துக்குச் சமமானதாகும். அந்த அளவுக்கு, குறைந்த அளவு சாறிலேயே நிறைய பயன்கள் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories