December 6, 2025, 2:38 AM
26 C
Chennai

கரு தங்க, சிறுநீரக கல் நீங்க.. பீளை பூ!

pulai poo - 2025

கிராமங்களில் காணும் இடங்களில் எல்லாம் காணப்படும், பொங்கல் பூ எனும் சிருபீளைச் செடியின் வெண்ணிற மலர்கள் தண்டுகளில் ஒட்டிக்கொண்டு காணப்படும், சிறிய இலைகளைக் கொண்டு, நீண்ட தண்டுகளில் காணப்படும் இதன் பூக்களே, இந்தச் செடியைத் தனித்துக் காட்டும்.

மனிதருக்கு பயன் தரும் மூலிகைகள் நம் அருகிலேயே இருக்கும் என்ற அளவில், நம்மைச் சுற்றிக் காணப்படும் மூலிகைகளுள் ஒன்று தான், தேங்காய்ப்பூ கீரை, சிறுகண் பீளை என்று அழைக்கப்படும் சிறுபீளை. நீர்ப்பாங்கான இடங்களில் விளையும் இந்தச் செடியின் அனைத்து பாகங்களும், மருத்துவ குணங்கள் மிக்கது.

சிறுபீளையில் மேலும் இரு வகைகள் உண்டு, பெருங்கண் பீளை, பாடாண வேதி இவை மூன்றும் மழைக்கால முடிவில் தானாக வளர்ந்து, மார்கழி மாத முடிவில் பெருமளவில் பூப்பவை, இம் மூன்று மூலிகைகளும் ஒரே வகையில், சிறுநீரக பாதிப்புகளுக்கு, நிவாரணம் தரும் ஆற்றல் வாய்ந்தவை.

பயன்படுத்தும் முறை :
இவை அதிகம் விளையும் காலங்களில், செடிகளைப் பறித்து, சுத்தம் செய்து சமூலம் எனும் இலைகள், பூக்கள், வேர்கள் இவற்றை நன்கு உலர்த்தி, இடித்து பொடியாக வைத்துக்கொண்டு, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தி வரலாம்.

சிறுபீளை செடியை, கிராமங்களில் பொங்கல் பூ என்று அழைப்பர். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறப்பதை, பொங்கல் நன்னாளாக, தமிழர் திருநாளாகக் கொண்டாடும் நாளின் முதல் நாள், வீடுகளின் கூரைகளில் சில இலைக் கொத்துக்களை, காப்பு கட்டுதல் என்று செருகி வைத்திருப்பர்! அதன் காரணம்
வீடுகளில் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது, யாருக்கும் எந்த வியாதி, தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்க, இந்த இலைகளைக் கொத்தாக, வீடுகளின் வாசலில் கட்டி வைப்பர்.

அதனாலேயே சிறுபீளையை, பொங்கல் பூ என்று கிராமங்களில் அழைப்பர். இதே போல, பொங்கல் விழாவில் ஊரெங்கும் கட்டும் தோரணங்கள், மற்றும் மாடுகளின் கழுத்தில் அணிவிக்கும் மாலைகளிலும் சிறுபீளை பூங்கொத்துக்கள் இடம் பெற்றிருக்கும்.

தற்காலத்தில், பரவலாக அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒன்றான சிறுநீரகக் கல் உள்ளிட்ட அனைத்து வகை சிறுநீரக பாதிப்புகளைப் போக்கும், உடல் வெளுத்து இருத்தல், பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் போன்றவற்றை சரிசெய்யும்.

சிறுநீரக பாதிப்புகளில் ஒன்றுதான், சிறுநீரகக் கல் அடைப்பு வியாதியாகும். இந்தக் கல் என்பது, உடலில் உள்ள கால்சியம் உப்புக்களால் உடலில் உண்டாவதாகும்! சிறு நீர் கற்களை கரைக்க : இவற்றில் தானே, உடலில் கரையும் வகை, உடையாத வகை என்று இருந்தாலும், இவை அனைத்தையும் சிறுநீரை அதிகரித்து, அவற்றை கரைத்து வெளியேற்றும் தன்மை மிக்கது, இந்த சிறுபீளை.

உதிரப் போக்கு : சிறுபீளை இலைகளை அரைத்து சாறெடுத்து, தினமும் இருவேளை பருகி வர, நீர்ச் சுருக்கு மற்றும் அடைப்பு, மாதாந்திரப் போக்கின் போது உண்டாகும் அதீத உதிரப் போக்கு பாதிப்புகள் ஆகியவை நீங்கி விடும்.

கருவைக் காக்கும் சிறுபீளை! கருவுற்ற மகளிரின் உடல் தளர்ச்சியைப் போக்கி, உடலுக்கு நல்ல ஆற்றலும், வலிமையையும் தரக் கூடியது, சிறுபீளை.

சிறுபீளை வேர்களை அலசி நிழலில் உலர வைத்து, அதில் சிறிது எடுத்து, அரிசி அல்லது தானியங்களை உடைத்து செய்யப்படும் கஞ்சியில் இட்டு, வேக வைத்து, அந்த கஞ்சியைப் பருகி வர, கருவுற்ற பெண்களின் உடல் அசதி தீரும், மேலும், கரு தங்காமல் போகும் ஆபத்துள்ள மகளிருக்கும், இந்த கஞ்சி நன்மைகள் செய்து, கருவினைக் காக்கும்!

சிறுநீரக கற்களுக்கு சிறுபீளை! சிறுபீளை வேரை அரைத்து அதில் பனை வெல்லம் கலந்து பாலில் கலந்து தினமும் இரு வேளை பருகி வர, சிறுநீர் அடைப்பு, சிறுநீர்ப் பாதையில் கற்கள் அடைத்துக் கொண்டு, சிறுநீர் பிரியாமல் இருந்த நிலை, மாறி, சிறுநீர் நன்கு பிரியும்.

pulai poo 1 - 2025

சிறுபீளை செடியின் இலைகள், தண்டு, வேர், பூக்கள் இவற்றை சேகரித்துக் கொண்டு, பேராமுட்டி வேர், மாவிலங்க வேர், நெருஞ்சில் வேர் இவற்றை சேர்த்து, நீரில் இட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி வைத்துக் கொண்டு, சிறிதளவு தினமும் இருவேளை பருகி வர, சிறுநீரகக் கல் பாதிப்பு மற்றும் சிறுநீரகம் சார்ந்த அனைத்து வியாதிகளும், பாதிப்புகளும் விலகி, உடல் நலமாகும்.

சிறுகண் பீளைச் செடிகளைப் பச்சையாகச் சேகரித்து… சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து பிழிந்து பிறகு சாறு எடுக்க வேண்டும். இச்சாற்றை ஒரு வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் காலை, மாலை இரு வேளைகளிலும் குடித்து வந்தால்… கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் அதி ரத்தப்போக்கு எனும் பெரும்பாடு நோயும் குணமாகும். இச்செடியின் வேரை சுத்தமாகக் கழுவி நிழலில் காய வைத்துக்கொண்டு… கஞ்சி காய்ச்சும்போது 10 கிராம் வேரையும் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால், கர்ப்பிணிகளின் சோர்வு நீங்கும். கரு தங்காத பெண்களுக்குச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

சிறுபீனை குடிநீர்

சிறுபீளை சமூலம் (ஒரு மூலிகைத் தாவரத்தின் இலை, வேர், தண்டு உள்ளிட்ட அனைத்து பாகங்களும் மருத்துவத்துக்கு பயன்பட்டால் அதற்கு சமூலம் என்று பெயர்), சிறுநெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றில், வகைக்கு 25 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, 4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அது கால் லிட்டராகச் சுண்டியவுடன் எடுத்து வடிகட்டி ஒரு ஃப்ளாஸ்க்கில் வைத்துக் கொண்டு…ஒரு நாளைக்கு 3 முதல் 5 வேளைகள் குடித்து வர வேண்டும்.

அதோடு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை கொதிக்க வைத்து ஆறிய சீரகத் தண்ணீரையும் குடிக்க வேண்டும். இப்படி 5 முதல் 10 நாட்கள் வரை குடித்தாலே அனைத்து விதமான சிறுநீரகக் கற்களும் கரைந்து வெளியேறிவிடும்.
ஹைட்ரோ நெஃப்ரோசிஸ் எனப்படும் சிறுநீரக வீக்கமும் குறையும். மேலும் கற்கள் ஏற்படுத்தும் வலியையும் போக்கும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படக்கூடிய எரிச்சலைப் போக்குவதோடு, சிறுநீரோடு ரத்தம் போவதையும் சரி செய்யக்கூடியது.

சிறுபீளையின் முழுத்தாவரத்தையும் அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த நீரை வடிகட்டி அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்துக் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்துவர மாதவிலக்கு நாள்களில் ஏற்படக்கூடிய வலி குறையும். அதிக ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும். மேலும் அப்போது ஏற்படக்கூடிய உடல்சோர்வைத் தவிர்த்து புத்துணர்ச்சி தரும்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது. காயங்களால் ஏற்படும் வடுக்களைப் போக்கக்கூடியது. கொழுப்பைக் கரைத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்..ஈரலில் ஏற்படும் பிரச்னைகளைப் போக்கக் கூடியது.
உள் உறுப்புகளில் உண்டாகும் அலர்ஜியைச் சரிசெய்யும். கண்ணெரிச்சலைப் போக்கும்.
ரத்தக் கழிச்சலை சரிப்படுத்தும்.தேகம் வெளிறலைத் தடுக்கும்.
பித்த வாதத்தைச் சரிசெய்யும் சிறுபீளைச்செடியின் வேர் பாம்புக்கடி மற்றும் வெறி நாய்க்கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, உடலில் தேங்கும் கழிவை உடனடியாக வெளியேற்றும்.

‘அறுகு சிறுபீளை நெல்லோடு தூஉய்ச் சென்று…’ எனும் சங்கப்பாடல் வரி, சிறுபீளை, அறுகம்புல் பொடியைச் சாதத்தில் கலந்து சாப்பிட, இடுமருந்தால் ஏற்பட்ட பாதிப்புகள் முறியும் என்பதை பதிவிடுகிறது. நஞ்சுமுறிவு செய்கை குறித்தும், சிறுநீரகங்களில் அதன் செயல்பாடு குறித்தும் ஆழமான ஆய்வு, பாடலின் உண்மையை விளக்கும்.

ஏர்வா லானாட்டா’ (Aerva lanata) என்ற தாவரவியல் பெயர்கொண்ட சிறுபீளை ‘அமரந்தஸியே’ (Amaranthaceae) குடும்பத்துக்குள் அடங்கும். டானின் (Tannins), டிரைடெர்பீன் (Triterpenes), ஏர்வோஸைடு (Aervoside), ஏர்வைன் (Aervine), சுண்ணாம்புச்சத்து (Calcium), இரும்பு (Iron), வனிலிக் அமிலம் (Vanillic acid) போன்ற தாவர வேதிப்பொருட்கள் சிறுபீளையில் இருக்கின்றன

வீட்டு மருந்தாக: அரிசிக் கஞ்சியில் சிறுபீளையைச் சேர்த்து கொதிக்க வைத்து ‘சூப்’ போல குடித்துவர உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். பிரசவ காலத்தை நெருங்கும் கர்ப்பிணிகளின் உடல் பலத்தைக் கூட்டுவதற்காக சிறுபீளைக் கஞ்சி வழங்கப்படுகிறது.

குழந்தைகளைக் குளிப்பாட்டும் நீரில் சிறுபீளை சமூலத்தை (முழு தாவரம்) போட்டுக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தினால், குழந்தைகளுக்குச் சுரம் தாக்காது என்பது கிராமங்களில் நிலவும் நம்பிக்கை. சிறுபீளையை உலரவைத்து தலைபாரம் உள்ளவர்கள் புகை போடவும் செய்கின்றனர்.

பாம்புக்கடிக்கான மருத்துவத்தில், சிறுபீளைச் சாறு அனுபானங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுபீளைக் குடிநீரை இருமலைக் குறைக்கவும் தொண்டைப் புண்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இதன் வேர்க் கஷாயத்தை கல்லீரல் சார்ந்த தொந்தரவுகளுக்கு ராஜஸ்தானிய பழங்குடிகள் பயன்படுத்துகின்றனர்

pulai poo - 2025

கிராமங்களில் காணும் இடங்களில் எல்லாம் காணப்படும், பொங்கல் பூ எனும் சிருபீளைச் செடியின் வெண்ணிற மலர்கள் தண்டுகளில் ஒட்டிக்கொண்டு காணப்படும், சிறிய இலைகளைக் கொண்டு, நீண்ட தண்டுகளில் காணப்படும் இதன் பூக்களே, இந்தச் செடியைத் தனித்துக் காட்டும்.

மனிதருக்கு பயன் தரும் மூலிகைகள் நம் அருகிலேயே இருக்கும் என்ற அளவில், நம்மைச் சுற்றிக் காணப்படும் மூலிகைகளுள் ஒன்று தான், தேங்காய்ப்பூ கீரை, சிறுகண் பீளை என்று அழைக்கப்படும் சிறுபீளை. நீர்ப்பாங்கான இடங்களில் விளையும் இந்தச் செடியின் அனைத்து பாகங்களும், மருத்துவ குணங்கள் மிக்கது.

சிறுபீளையில் மேலும் இரு வகைகள் உண்டு, பெருங்கண் பீளை, பாடாண வேதி இவை மூன்றும் மழைக்கால முடிவில் தானாக வளர்ந்து, மார்கழி மாத முடிவில் பெருமளவில் பூப்பவை, இம் மூன்று மூலிகைகளும் ஒரே வகையில், சிறுநீரக பாதிப்புகளுக்கு, நிவாரணம் தரும் ஆற்றல் வாய்ந்தவை.

பயன்படுத்தும் முறை :
இவை அதிகம் விளையும் காலங்களில், செடிகளைப் பறித்து, சுத்தம் செய்து சமூலம் எனும் இலைகள், பூக்கள், வேர்கள் இவற்றை நன்கு உலர்த்தி, இடித்து பொடியாக வைத்துக்கொண்டு, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தி வரலாம்.

சிறுபீளை செடியை, கிராமங்களில் பொங்கல் பூ என்று அழைப்பர். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறப்பதை, பொங்கல் நன்னாளாக, தமிழர் திருநாளாகக் கொண்டாடும் நாளின் முதல் நாள், வீடுகளின் கூரைகளில் சில இலைக் கொத்துக்களை, காப்பு கட்டுதல் என்று செருகி வைத்திருப்பர்! அதன் காரணம் வீடுகளில் பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது, யாருக்கும் எந்த வியாதி, தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்க, இந்த இலைகளைக் கொத்தாக, வீடுகளின் வாசலில் கட்டி வைப்பர்.

அதனாலேயே சிறுபீளையை, பொங்கல் பூ என்று கிராமங்களில் அழைப்பர். இதே போல, பொங்கல் விழாவில் ஊரெங்கும் கட்டும் தோரணங்கள், மற்றும் மாடுகளின் கழுத்தில் அணிவிக்கும் மாலைகளிலும் சிறுபீளை பூங்கொத்துக்கள் இடம் பெற்றிருக்கும்.

தற்காலத்தில், பரவலாக அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒன்றான சிறுநீரகக் கல் உள்ளிட்ட அனைத்து வகை சிறுநீரக பாதிப்புகளைப் போக்கும், உடல் வெளுத்து இருத்தல், பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் போன்றவற்றை சரிசெய்யும்.

சிறுநீரக பாதிப்புகளில் ஒன்றுதான், சிறுநீரகக் கல் அடைப்பு வியாதியாகும். இந்தக் கல் என்பது, உடலில் உள்ள கால்சியம் உப்புக்களால் உடலில் உண்டாவதாகும்! சிறு நீர் கற்களை கரைக்க : இவற்றில் தானே, உடலில் கரையும் வகை, உடையாத வகை என்று இருந்தாலும், இவை அனைத்தையும் சிறுநீரை அதிகரித்து, அவற்றை கரைத்து வெளியேற்றும் தன்மை மிக்கது, இந்த சிறுபீளை.

உதிரப் போக்கு : சிறுபீளை இலைகளை அரைத்து சாறெடுத்து, தினமும் இருவேளை பருகி வர, நீர்ச் சுருக்கு மற்றும் அடைப்பு, மாதாந்திரப் போக்கின் போது உண்டாகும் அதீத உதிரப் போக்கு பாதிப்புகள் ஆகியவை நீங்கி விடும்.

கருவைக் காக்கும் சிறுபீளை! கருவுற்ற மகளிரின் உடல் தளர்ச்சியைப் போக்கி, உடலுக்கு நல்ல ஆற்றலும், வலிமையையும் தரக் கூடியது, சிறுபீளை.

சிறுபீளை வேர்களை அலசி நிழலில் உலர வைத்து, அதில் சிறிது எடுத்து, அரிசி அல்லது தானியங்களை உடைத்து செய்யப்படும் கஞ்சியில் இட்டு, வேக வைத்து, அந்த கஞ்சியைப் பருகி வர, கருவுற்ற பெண்களின் உடல் அசதி தீரும், மேலும், கரு தங்காமல் போகும் ஆபத்துள்ள மகளிருக்கும், இந்த கஞ்சி நன்மைகள் செய்து, கருவினைக் காக்கும்!

pulai poo 1 - 2025

சிறுநீரக கற்களுக்கு சிறுபீளை! சிறுபீளை வேரை அரைத்து அதில் பனை வெல்லம் கலந்து பாலில் கலந்து தினமும் இரு வேளை பருகி வர, சிறுநீர் அடைப்பு, சிறுநீர்ப் பாதையில் கற்கள் அடைத்துக் கொண்டு, சிறுநீர் பிரியாமல் இருந்த நிலை, மாறி, சிறுநீர் நன்கு பிரியும்.

சிறுபீளை செடியின் இலைகள், தண்டு, வேர், பூக்கள் இவற்றை சேகரித்துக் கொண்டு, பேராமுட்டி வேர், மாவிலங்க வேர், நெருஞ்சில் வேர் இவற்றை சேர்த்து, நீரில் இட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி வைத்துக் கொண்டு, சிறிதளவு தினமும் இருவேளை பருகி வர, சிறுநீரகக் கல் பாதிப்பு மற்றும் சிறுநீரகம் சார்ந்த அனைத்து வியாதிகளும், பாதிப்புகளும் விலகி, உடல் நலமாகும்.

சிறுகண் பீளைச் செடிகளைப் பச்சையாகச் சேகரித்து… சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து பிழிந்து பிறகு சாறு எடுக்க வேண்டும். இச்சாற்றை ஒரு வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் காலை, மாலை இரு வேளைகளிலும் குடித்து வந்தால்… கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் அதி ரத்தப்போக்கு எனும் பெரும்பாடு நோயும் குணமாகும். இச்செடியின் வேரை சுத்தமாகக் கழுவி நிழலில் காய வைத்துக்கொண்டு… கஞ்சி காய்ச்சும்போது 10 கிராம் வேரையும் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால், கர்ப்பிணிகளின் சோர்வு நீங்கும். கரு தங்காத பெண்களுக்குச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

சிறுபீனை குடிநீர்

சிறுபீளை சமூலம் (ஒரு மூலிகைத் தாவரத்தின் இலை, வேர், தண்டு உள்ளிட்ட அனைத்து பாகங்களும் மருத்துவத்துக்கு பயன்பட்டால் அதற்கு சமூலம் என்று பெயர்), சிறுநெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றில், வகைக்கு 25 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, 4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அது கால் லிட்டராகச் சுண்டியவுடன் எடுத்து வடிகட்டி ஒரு ஃப்ளாஸ்க்கில் வைத்துக் கொண்டு…ஒரு நாளைக்கு 3 முதல் 5 வேளைகள் குடித்து வர வேண்டும்.

அதோடு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை கொதிக்க வைத்து ஆறிய சீரகத் தண்ணீரையும் குடிக்க வேண்டும். இப்படி 5 முதல் 10 நாட்கள் வரை குடித்தாலே அனைத்து விதமான சிறுநீரகக் கற்களும் கரைந்து வெளியேறிவிடும்.
ஹைட்ரோ நெஃப்ரோசிஸ் எனப்படும் சிறுநீரக வீக்கமும் குறையும். மேலும் கற்கள் ஏற்படுத்தும் வலியையும் போக்கும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படக்கூடிய எரிச்சலைப் போக்குவதோடு, சிறுநீரோடு ரத்தம் போவதையும் சரி செய்யக்கூடியது.

சிறுபீளையின் முழுத்தாவரத்தையும் அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த நீரை வடிகட்டி அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்துக் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்துவர மாதவிலக்கு நாள்களில் ஏற்படக்கூடிய வலி குறையும். அதிக ரத்தப்போக்கும் கட்டுக்குள் வரும். மேலும் அப்போது ஏற்படக்கூடிய உடல்சோர்வைத் தவிர்த்து புத்துணர்ச்சி தரும்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது. காயங்களால் ஏற்படும் வடுக்களைப் போக்கக்கூடியது. கொழுப்பைக் கரைத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்..ஈரலில் ஏற்படும் பிரச்னைகளைப் போக்கக் கூடியது.
உள் உறுப்புகளில் உண்டாகும் அலர்ஜியைச் சரிசெய்யும். கண்ணெரிச்சலைப் போக்கும்.
ரத்தக் கழிச்சலை சரிப்படுத்தும்.தேகம் வெளிறலைத் தடுக்கும்.
பித்த வாதத்தைச் சரிசெய்யும் சிறுபீளைச்செடியின் வேர் பாம்புக்கடி மற்றும் வெறி நாய்க்கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, உடலில் தேங்கும் கழிவை உடனடியாக வெளியேற்றும்.

‘அறுகு சிறுபீளை நெல்லோடு தூஉய்ச் சென்று…’ எனும் சங்கப்பாடல் வரி, சிறுபீளை, அறுகம்புல் பொடியைச் சாதத்தில் கலந்து சாப்பிட, இடுமருந்தால் ஏற்பட்ட பாதிப்புகள் முறியும் என்பதை பதிவிடுகிறது. நஞ்சுமுறிவு செய்கை குறித்தும், சிறுநீரகங்களில் அதன் செயல்பாடு குறித்தும் ஆழமான ஆய்வு, பாடலின் உண்மையை விளக்கும்.

ஏர்வா லானாட்டா’ (Aerva lanata) என்ற தாவரவியல் பெயர்கொண்ட சிறுபீளை ‘அமரந்தஸியே’ (Amaranthaceae) குடும்பத்துக்குள் அடங்கும். டானின் (Tannins), டிரைடெர்பீன் (Triterpenes), ஏர்வோஸைடு (Aervoside), ஏர்வைன் (Aervine), சுண்ணாம்புச்சத்து (Calcium), இரும்பு (Iron), வனிலிக் அமிலம் (Vanillic acid) போன்ற தாவர வேதிப்பொருட்கள் சிறுபீளையில் இருக்கின்றன

வீட்டு மருந்தாக: அரிசிக் கஞ்சியில் சிறுபீளையைச் சேர்த்து கொதிக்க வைத்து ‘சூப்’ போல குடித்துவர உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். பிரசவ காலத்தை நெருங்கும் கர்ப்பிணிகளின் உடல் பலத்தைக் கூட்டுவதற்காக சிறுபீளைக் கஞ்சி வழங்கப்படுகிறது.

குழந்தைகளைக் குளிப்பாட்டும் நீரில் சிறுபீளை சமூலத்தை (முழு தாவரம்) போட்டுக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தினால், குழந்தைகளுக்குச் சுரம் தாக்காது என்பது கிராமங்களில் நிலவும் நம்பிக்கை. சிறுபீளையை உலரவைத்து தலைபாரம் உள்ளவர்கள் புகை போடவும் செய்கின்றனர்.

பாம்புக்கடிக்கான மருத்துவத்தில், சிறுபீளைச் சாறு அனுபானங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுபீளைக் குடிநீரை இருமலைக் குறைக்கவும் தொண்டைப் புண்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இதன் வேர்க் கஷாயத்தை கல்லீரல் சார்ந்த தொந்தரவுகளுக்கு ராஜஸ்தானிய பழங்குடிகள் பயன்படுத்துகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories