To Read it in other Indian languages…

Home நலவாழ்வு பார்வைக்கு முள்.. பயனிலோ.‌. சப்பாத்தி கள்ளி!

பார்வைக்கு முள்.. பயனிலோ.‌. சப்பாத்தி கள்ளி!

Chapati Cactus - Dhinasari Tamil

நாகதாளி எனப்படும் சப்பாத்தி கள்ளியின் மருத்துவ பயன்பாட்டுக்கு மிக முக்கிய காரணம் இதில் உள்ள நுண்ணூட்டங்களே, மிகையாக. உள்ள கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் சத்துகளும் உயர்தரமான நார்சத்தும் நிறைந்து உள்ளது

இதில் விட்டமின் மிகவும் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இரத்த அழுத்தம் மிகையாகாமல் பாதுகாக்கிறது இரத்த நாளங்களில் உள்ள கழிவுகளை நீக்கி இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.

வரண்ட நிலங்களில் ஆடு மாடு மேய்க்கும் போது நாவரட்சிக்கும், வெய்யில் ஏற்படுத்தும் உடல் சோர்வை போக்கவும் உஷ்ணத்தை குறைக்கவும் இந்த சப்பாத்தி கள்ளி பழம் உதவி புரியும்.

பழங்குடியினர் மத்தியில் இந்த சப்பாத்தி கள்ளி சிறந்த உணவாக மருந்தாக பயன்படுகிறது அவர்கள் தொலை தூரமாக காடுகளில் திரியும் போது ஓடைகளில் தேங்கி இருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்தி கள்ளியின் மடலில் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும் கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலானது பெரும் ஆற்றல் பெருகிறது

புத்துணர்வுடனே இருக்கும் எவ்வளவு தூரம் நடந்தாலும் சோர்வோ பசியோ எடுக்காது இருளர் இனமக்கள் கக்குவான் நோய்க்கு இதன் பழத்தை நெருப்பில் வாட்டி குழந்தைகளுக்கு கொடுக்க பூரண குணமாகும்.

நாகதாளியின் பயன்பாடுகள்.
1.சப்பாத்தி கள்ளியின் பசையை மேல் பூச்சாக பயன்படுத்தி வீக்கத்தை போக்கலாம்.

2.உடலில் ஏற்படும் எந்தவொரு கட்டியாக இருந்தாலும் இதன் மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைகல்லை அறைத்து இரண்டையும் சமமாக சேர்த்து அறைத்து கட்டிகளின் மீது பற்று போட கறைந்து விடும் அதுவும் அக்குள் கழுத்து பகுதிகளில் வரும் கட்டிகளுக்கு சிறந்த மருந்து இதுவே. ஓரிரு நாளில் கட்டி கரைந்து விடும்.

3.நாகதாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல்வளை, பித்தப்பை,மலக்குடல், சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமல், இரத்தம் கக்குதலும் தீரும்.

  1. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு பித்தப்பை வீங்கி விடும் இதனை சுரக்கட்டி என்பார்கள் இதனை தீர்க்க நாகதாளி பழத்தை கொடுக்க உடனடியாக குணம் கிடைக்கும்

5.ஞாபகமறதி எனப்படும் அல்ஸைமர் நோய்க்கு இது மருந்தாக பயன்படுத்தலாம் இந்த பழத்தை தொடர்ந்த எடுத்துகொள்ள கண் பார்வை கூர்மையாகிறது என்றும் ஏடுகளில் உள்ளது.

6.சப்பாத்தி கள்ளி பழத்தில் இருக்கும் உயர்தரமான நார்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கறைத்து வெளியேற்றி உடல் பருமனை குறைக்கிறது அதனால் தான் பிரேசில் போன்ற நாடுகளில் இதிலிருந்து எடுக்கப்படும் நீரை உடல் குறைப்புக்கு மருந்தாக பல நூறு கோடி ரூபாய்க்கான வியாபாரம் நடைபெறுகிறது .

சித்த மருத்துவத்தில் இதனை தீ நீராக செய்து பயன்படுத்தி வந்தால் உடல் குறையும் சர்க்கரை நோயும் கட்டுபடுகிறது என்று குறிப்புகள் உள்ளது.

கல்லீரல் பாதிப்படைந்து உருவாகும் மகோதிரம் எனப்படும் பெருவயிறு நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.

சப்பாத்திக்கள்ளியின் முட்களை முழுவதும் நீக்கி, அதன் சதைப்பகுதியை சேகரித்து அத்துடன் சிறிது மிளகுகளைப் பொடியாக்கி கலந்து சாப்பிட, உடலில் தேங்கியிருந்த விஷங்கள் செயல் இழந்து, விஷத்தால் ஏற்பட்ட உடல் நல பாதிப்புகள் யாவும் விலகி விடும்.

இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு, பெருந்துணையாகிறது.
சப்பாத்திக்கள்ளி சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணை ஊற்றி அதை சற்று நேரம் சூடாக்கி, ஒரு பருத்தித்துணியில் வைத்து, கைகால் மூட்டுகளில் ஒத்தடம் கொடுத்துவர, “ருமாட்டிக் ஆர்த்தரைத்டிஸ்” எனும் உடல் கைகால் மூட்டுகளை அதிகம் பாதிக்கும் முடக்கு வாத வியாதியைக் குணப்படுத்தும்

சப்பாத்திக்கள்ளி சாற்றை, கை கால் மற்றும் உடலில் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் “வைரஸ் வார்ட்ஸ்” என்று ஆங்கிலத்திலும், “பாலுண்ணிகள்” என்று தூய தமிழிலும் அழைக்கப்படும் மருக்களின் மேல் தடவி வர, அவை விரைவில் மறைந்து விடும்.

சப்பாத்திக்கள்ளியை சற்றே தீயில் இட்டு, அதன் சாற்றின் சில துளிகளைக் காதில் விட, காதில் உள்ள வலிகள் மற்றும் அனைத்து விதமான காது சம்பந்தமான பாதிப்புகளும் சரியாகி விடும்.

ஆஸ்துமா எனும் இளைப்பு வியாதி உள்ளவர்கள், சப்பாத்திக்கள்ளியை தீயில் இட்டு எடுத்த சாற்றில் சிறிது தேன் கலந்து, தினமும் மூன்று வேளை தொடர்ந்து நீரில் கலந்து பருகி வர, இளைப்பு வியாதிகள் விலகி விடும்.

தொடர் இருமல் பாதிப்பு உள்ளவர்கள், சப்பாத்திக்கள்ளி சாற்றில் இந்துப்பு கலந்து, தினமும் இருவேளை நீரில் கலந்து பருகி வர, இரத்தத்தை அதிகரித்து, இருமலால் உண்டான இரத்த சோகையை சரி செய்து, இன்னல்கள் தந்த இருமல் பாதிப்புகளை, உடலில் இருந்து நீக்கி விடும்.

சிறுநீர் பிரியாமல், சிறுநீர்ப்பையில் தேங்கி இருந்து உடலை வருத்தும் பாதிப்பை சரிசெய்ய, தீயில் வாட்டிய சப்பாத்திக்கள்ளியை, அடி வயிற்றில் வைத்து, கட்டி வர, சிறுநீர் பாதிப்புகள் நீங்கி, சிறுநீர் இயல்பான அளவில் வெளியேறும்.

சப்பாத்திக்கள்ளியை உணவில் சேர்த்து வர, அந்த உணவில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் தாதுக்கள், இரத்த குழாய்களின் செயல்திறனை சரியாக்கி, இரத்த அழுத்த பாதிப்புகள் இல்லாமல் சீரான இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது. இதனால், இரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும் ஹார்ட் அட்டாக் பாதிப்புகள் ஏற்படாமல், உடலை பாதுகாக்கிறது.

சத்துகளற்ற உணவுகள், மலச்சிக்கல், குடலில் சேர்ந்த நச்சு வாயு போன்ற காரணங்களால் உண்டாகும் பருத்த பெரு வயிறு பாதிப்புகள் சரியாகி, உடல் நலம் தேற, ஐம்பது மிலி சப்பாத்திக்கள்ளி பாலில், ஐந்து கிராம் என்ற அளவில் கடுக்காய் பொடி அல்லது அதன் விதை நீக்கிய தோல் பகுதி இவற்றை நன்கு கலக்கி, ஐந்து அல்லது ஆறு வாரங்கள் நிழலில் உலர்த்தி பொடியாக்கிக் கொள்ளவும்.

இந்தப் பொடியை சிறிதளவு, கைவிரல் நுனிகளால் எடுத்து, தினமும் காலையில் நீரில் கலந்து பருகி வர, தொல்லைகள் தந்த பெரு வயிறு பிரச்னைகள் விலகி, நீண்ட நாட்களாக ஆறாத உடல் காயங்கள், வயிற்றுப் புண்கள், கல்லீரல் வீக்கம் போன்ற பாதிப்புகள் குணமாகி, உடலும் மனமும் புத்துணர்வாகும். நார்ச்சத்து மிக்க சப்பாத்திக்கள்ளியை, உணவில் சேர்த்து வர, நாள்பட்ட மலச்சிக்கல் சரியாகி, உடல் பொலிவாகும்.

சப்பாத்திக்கள்ளியின் மஞ்சள் நிறப்பூக்களை அரைத்து கட்டிகளின் மேல் தடவி வர, கட்டிகள் குணமாகும். சப்பாத்திக்கள்ளி பூக்களை, நீரில் காய்ச்சி பருகி வர, வயிற்று வலி, குடல் சார்ந்த பிரச்னைகளை சரிசெய்து விடும்.

சப்பாத்திக்கள்ளி வேரை சிறிது மிளகுகளுடன் சேர்த்து நன்கு சுட வைத்து, தினமும் தேனுடன் கலந்து ஓரிரு வேளை சாப்பிட்டு வர, விஷ வண்டு, பூச்சி கடி, பூரான் கடி போன்ற விஷ பாதிப்புகள் நீங்கி விடும். மேலும், விஷம் என்று தெரியாமல் சாப்பிட்ட விஷச்செடிகளின் விஷத்தையும், உடலில் இருந்து போக்கும்.

சப்பாத்திக்கள்ளியை சற்று சுண்ணாம்பு சேர்த்து நன்கு கலக்கி, உடலில் தேள், தேனீ, குளவி போன்ற விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் அடர்த்தியாக தடவி வர, விஷக்கடியினால் தோலில் ஏற்பட்ட வீக்கம், தோல் கன்றிப் போதல் போன்ற விஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை, உடலில் இருந்து நீக்கி விடும்.

சப்பாத்திக்கள்ளி பழத்தை, தீயில் சுட்டு, தொடர் வறட்டு இருமல் உள்ளவர்களிடம் உண்ணக் கொடுக்க, இருமல் சரியாகும்.

சப்பாத்திக்கள்ளி பழங்களின் சாறெடுத்து, அதை வாணலியில் இட்டு, வெல்லம் சேர்த்து, இனிப்பு பாகு நீராக காய்ச்சி வைத்துக்கொண்டு, கோடைக்காலத்தில், நீரில் இட்டு சர்பத் போல பருகி வர, வெப்பத்தினால் உண்டாகும் உடல் சூடு, கண் எரிச்சல் உள்ளிட்ட சகல வியாதிகளும், விலகி விடும். இளமையில் முதுமையடைவதை தடுத்து, கண் பார்வைத்திறனை மேம்படுத்தி, நரம்பு இயக்க ஆற்றலை சரிசெய்யும் அற்புத மூலிகைதான் சப்பாத்திக்கள்ளி!

சப்பாத்திக்கள்ளி இலைகளின் முட்களை அகற்றி நன்கு சுத்தம் செய்துகொண்டு, அந்த சதைப்பகுதியுடன் ஐந்தாறு மிளகுகளை தூளாக்கி, நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்த பின் வடிகட்டி, அதில் சுவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து, தேநீராகப் பருகி வர, கோடை வெம்மையினால் ஏற்படும், அதிக களைப்பு, அதீத தாகம் மற்றும் உடல் சூடு போன்றவை அகன்று, உடல் வெப்ப நிலை இயல்பாகும்.

சத்துமிக்க உணவான சப்பாத்திக்கள்ளியில் உள்ள நார்ச்சத்து, கரோட்டின், பெட்டாலைன், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் மனிதரின் உடலுக்கு நிவாரணம் தரும் வீரியத்துக்கு, காரணமாக அமைகின்றன.

சப்பாத்திக்கள்ளியின் சதைப்பகுதியை, உணவில் சேர்த்து வர, அதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள், உடல் முழுவதும் செயல்பட்டு, உடலில் புற்று பாதிப்புகளை உருவாக்கக் கூடிய நச்சுக் கிருமிகளை அழித்து வெளியேற்றும் வல்லமை மிக்கதால், உடலின் வியாதி எதிர்ப்பு தன்மை அதிகரிக்கிறது.

உடல் வீக்கத்தை சரியாக்கி, உடலின் சீரண உறுப்புகள் வலுவுடன் இயங்க துணையாகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு துணையாகி, பற்களின் வியாதிகளை போக்குகிறது.

சப்பாத்தி கள்ளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட இதயத் துடிப்பு சீரடையும். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் சரிசெய்து விடும். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பை தவிர்க்க முடியும்.

இன்றைய மாறிவிட்ட சூழலில் நூற்றில் அறுபது பெண்களுக்கு மேல் இந்த பிசிஓடி என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது. இதனால் கருமுட்டை பலமில்லாமல் போவது, குழந்தை உண்டாவதில் சிரமம், மாதவிடாய் பிரச்சினைகள், கருக்கலைவு ஆகிய பிரச்சினைகள் அதிகமாக உண்டாகின்றன.

இந்த சப்பாத்திக் கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கரு முட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்களுக்கு இந்த பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

ஆண்மைக் குறைபாடு, விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாக இல்லாதது என ஆண்களுக்கு இருக்கும் பல பிரச்சினைகளை இந்த பழம் தீர்க்கிறது. கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை பெண்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்தில் பிறக்குமாம். குங்குமப்பூவை விட இந்த சப்பாத்திக்கள்ளி பழம் சிறந்தது. வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் தானாக அழிந்து விடுமாம்.

இந்த பழங்களை குழந்தைப் பேறுக்காக பெண்களும், விந்து உயிரணு உற்பத்திக்காக ஆண்களும் சாப்பிட்டு வரும்போது மற்ற எந்தவித இனிப்பான பொருள்களும் சாப்பிடக் கூடாது. டீ, காபி கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். நடைப்பயிற்சி கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 10 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.