வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு வேட்பாளர் சீட்! அசத்தும் பாஜக!

இந்தியா சற்றுமுன்
Kalitha Maji - 2026

தேர்தல் வந்துவிட்டால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்கும் தங்கள் வாரிசுகளுக்கும் சீட் வழங்குவது பல மாநிலங்களில் வாடிக்கையாக உள்ள நிலையில், வித்தியாசமான கட்சி என அறியப்படும் பாஜக, திறமைக்கும் உழைப்பிற்கும் தான் முன்னுரிமை என்ற வகையில் மேற்குவங்கத்தில் வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து ஆச்சரியபப்டுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் ஆஸ்கிராம் தொகுதியில் போட்டியிட, பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் கலிதா மஜி எனும் பெண்ணுக்கு வாய்ப்பளித்துள்ளது.

தனது வாழ்வாதாரத்திற்காக பல வீடுகளில் வீட்டு உதவியாளராக பணிபுரியும் கலிதா மஜி, மாநிலத்தில் வரவிருக்கும் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கும், தனது தொகுதியில் உள்ள மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கும், தனது வேலைக்கு ஒரு மாதம் ஓய்வு கொடுத்துள்ளார்.

32 வயதான அவர் ஐந்து ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் 2018’ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலிலும் போட்டியிட்டார். கலிதா மஜியின் கணவர் பிளம்பர் வேலை செய்கிறார். அவர்கள் ஒரு குடிசையில் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் உள்ளூர் அரசு பள்ளியில் 8’ஆம் வகுப்பு படிக்கிறார்.

பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், கலிதா மஜிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, கட்சி எப்போதும் திறமையையும் கடின உழைப்பையும் அங்கீகரிக்கிறது என்றார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

கலிதா மஜியைத் தவிர, மற்றொரு தினசரி கூலித் தொழிலாளியின் மனைவி சந்தனா பவுரியை பாங்குரா மாவட்டத்தில் உள்ள சால்டோரா சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.