தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், வைகை உட்பட 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை எழும்பூர்-விழுப்புரம் தடத்திலும், சென்னை சென்ட்ரல்-கூடூர் தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சில விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி 4-ம் தேதி விஜயவாடா-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12711) கூடூர் வரை மட்டும் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல்-விஜயவாடா விரைவு ரயில் (12712) கூடூரில் இருந்து இயக்கப்படும்.
இதேபோல, மதுரை-சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) வரும் 5, 19-ம் தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும்.
புதுச்சேரி-புதுதில்லி விரைவு ரயில் (22403) மேற்கண்ட 2 நாட்களில் மாற்றுப் பாதையாக காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும்.