
ஐபிஎல் 2022 –லக்னோ vs பஞ்சாப்
K.V. பாலசுப்பிரமணியன்
நேற்று, ஏப்ரல் இருபத்தியொன்பதாம் நாள் லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கிடையே புனே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 42ஆவது போட்டி நடந்தது.
லக்னோ அணி (153/8, டி காக் 46 ரன், தீபக் ஹூடா 34 ரன், ரபாடா 4/38) பஞ்சாப் அணியை (133/8, அகர்வால் 25, பெயர்ஸ்டோ 32, மொஹ்ஷின் கான் 3/24) 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, லக்னோ அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. கே.எல். ராகுல் மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
நன்றாக ஆடிக்கொண்டிருந்த டி காக்கும் தீபக் ஹூடாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 104. அதன் பிறகு வந்த வீரர்கள் சரியாக விளையாடததால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 153 ரன் மட்டுமே எடுத்தது.
அடுத்து பஞ்சாப் அணி ஆடவந்தபோது இதே கதைதான். நாலு வீரர்கள் மட்டும் இரட்டை இலக்க ஸ்கோர் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கைதான்.
க்ருணால் பாண்ட்யா (4 ஓவர், 1 மெய்டன், 11 ரன், 2 விக்கட்) மற்றும் சமீரா (நாலு ஓவர், 17 ரன், இரண்டு விக்கட்) இருவரும் அருமையாக பந்து வீசினர்.
இறுதியில் எட்டு விக்கட் இழப்பிற்கு 133 ரன் எடுத்து பஞ்சாப் தோற்றுப் போனது.