Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: மூங்கில் அரிசி ஹல்வா!

மூங்கில் அரிசி ஹல்வாதேவையான பொருட்கள் 1/2 கப் மூங்கிலரிசி •1/4கப் நாட்டு சர்க்கரை அல்லதுவெல்லம்1/4* கப் தேங்காய் துருவல்•ஏலக்காய் தூள்5 முந்திரி பருப்பு5 உலர் திராட்சைபசுநெய் செய்முறை முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். •நாட்டுசர்க்கரையாக இருந்தால் அப்படியே...
Homeஇந்தியா10,12, டிகிரி.. SSC தேர்வு..!

10,12, டிகிரி.. SSC தேர்வு..!

மத்திய அரசில் காலியாக உள்ள 2065 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற ஜூன் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின்( staff selection Commission) மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் தேர்வு தேதி வெளியாகும். அதேப்போன்று இந்தாண்டும் சுமார் 2065 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு 10, 12 மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? தேர்வு செய்யும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே கூடுதல் தகுதி தேவைப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், https://ssc.nic.in/Portal/Apply என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் – பொதுப்பிரிவினருக்கு ரூ. 100ம், எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – ஜூன் 13, 2022
தேர்வு செய்யும் முறை: மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழி எழுத்துத்தேர்வு மற்றும் சான்றதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத்தேர்வில் திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொதுஅறிவு போன்ற பிரிவுகளிலிருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்தக் கூடுதல் விபரங்களை, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_12052022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.