
இந்தியா நியூசிலாந்து இரண்டாவது T20 போட்டி, லக்னோ, 29.01.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
நியூசிலாந்து அணியை (99/8, ஆலன் 11, கான்வே 11, சாப்மேன் 14, பிரேஸ்வெல் 14, சாண்ட்னர் 19, உதிரி ரன்கள் 10, அர்ஷதீப் 2/7, ஹார்திக், சுந்தர், சாஹல், ஹூடா குல்தீப் தலா ஒரு விக்கட்) இந்திய அணி (19.5 ஓவரில் 101/4, சூர்யகுமார் 26, இஷான் கிஷன் 19, பாண்ட்யா 15, திரிபாதி 13, கில் 11, சுந்தர் 10, உதிரி 7, பிரேஸ்வெல், சோதி தலா ஒரு விக்கட்) ஆறு விக்கட் வித்தியாசத்தில் வென்றது. இது ஒரு குறைந்த ஸ்கோர் மேட்ச்.
டி20 போட்டிகள் எல்லாம் அண்மைக்காலத்தில் அதிக ரன் அடிக்கும் போட்டிகளாகவே இருக்கின்றன. அவ்வகையில் இத்தகைய குறைந்த ரன் எடுக்கின்ற போட்டிகளும் அவ்வப்போது நடப்பது நல்லது. நியூசிலாந்து அணி 6 ஃபோர், இந்திய அணி எட்டு ஃபோர், ஆக மொத்தம் 14 ஃபோர்கள் மட்டுமே அடித்தன. ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை.
இரண்டு அணிகளிலும் ஸ்பின்னர்களின் ஆதிக்கம். 18, 19, 20ஆவது ஓவர்களில் அர்ஷதீப் 2 ஓவர்களையும் ஷிவம் மாவி 1 ஓவரையும் வீசினார்கள். தொடக்கத்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று நியூசிலாந்து வீரர்கள் ஆட்டமிழந்தனர். எனவே ஸ்வீப் ஷாட்டை அவர்கள் மீண்டும் ஆட முயற்சிக்கவில்லை.
100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கோடு ஆடவந்த இந்திய அணியும் நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர்கள் பிரேஸ்வெல், சாண்ட்னர், பிலிப்ஸ், சோதி ஆகியோரின் சுழல்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
விக்கட் இழப்பு அதிகம் இல்லாததால் இந்திய அணி 19.5 ஓவரில் 101 ரன் அடித்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன.
அடுத்த டி20 போட்டி அகமதாதில், பிப்ரவரி 1ஆம் தேதி நடக்க உள்ளது, சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.