நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதை அடுத்து ஜூன் 09 ஞாயிற்றுக் கிழமை இன்று மாலை 7.15 மணி அளவில் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதை அடுத்து 7.25க்கு பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நரேந்திர மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட அமைச்சர்களின் பட்டியல்…
மத்திய அமைச்சர்கள் பட்டியல்
1)பிரதமர் மோடி
2)ராஜ்நாத் சிங்
3)அமித்ஷா
4)நிதின் கட்கரி
5)ஜே.பி.நட்டா
6)சிவராஜ் சிங் செளகான்
7)நிர்மலா சீதாராமன்
8)ஜெய்சங்கர்
9)மனோகர்லால் கட்டார்
10)H.D.குமாரசாமி (கூட்டணி)
11)பியூஸ் கோயல்
12)தர்மேந்திர பிரதான்
13)ஜித்தன் ராம் மாஞ்சி (கூட்டணி)
14)ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் (நிதிஷ்குமார் கட்சி)
15)சர்பானந்த சோனாவால்
16)டாக்டர் வீரேந்திர குமார்
17)ராம்மோகன் நாயுடு (தெலுங்குதேசம்)
18)பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி
19)ஜுவல் ஓரம்
20)கிரிராஜ் சிங்
21)அஸ்வினி வைசவ்
22)ஜோதிர் ஆதித்ய சிந்தியா
23)பூபேந்திர யாதவ்
24)கஜேந்திரசிங் ஷெகாவத்
25)அன்னபூர்ணா தேவி
26)கிரண் ரிஜிஜூ
27)ஹர்தீப்சிங் பூரி
28)மன்சுக் மாண்டவியா
29)கிஷன் ரெட்டி
30)சிராக் பஸ்வான் (கூட்டணி)
31)சி,ஆர்.பாட்டீல்
32)இந்திரஜித் சிங்
33)ஜிதேந்திர சிங்
34)அர்ஜூன் ராம் மேக்வால்
35)பிரதாப் ராவ் ஜாதவ் (ஏக்நாத் ஷிண்டே)
36)ஜெயந் செளவுத்ரி (கூட்டணி)
37)ஜிதின் பிரசாத்
38)ஸ்ரீபாத் யசோ நாயக்
39)பங்கஜ் செளத்ரி
40)கிருஷ்ணன் பால்
41)ராம்தாஸ் அத்தவாலே (கூட்டணி)
42)ராம்நாத் தாஹூர் (நிதிஷ்குமார் கூட்டணி)
43)நித்தியானந்த ராய்
44)அனுப்பிரியா பட்டேல் (கூட்டணி)
45)வீரன்னா சோமன்னா
46)சந்திர சேகர் பெம்மாசானி (தெலுங்குதேசம்)
47)எஸ்.பி.சிங் பாஹேல்
48)ஷோபா கரந்த்லாஜே
49)கீர்த்தி வர்தன் சிங்
50)பி.எல்.வர்மா
51)சாந்தனு தாக்கூர்
52)சுரேஷ் கோபி (கேரள நடிகர்)
53)எல்.முருகன்
54)அஜய் டம்டா
55)பண்டி சஞ்சய்குமார்
56)கமலேஷ் பஸ்வான்
57பஹிரத் செளத்ரி
58)சதீஷ் சந்திர துபே
59)சஞ்சய் சேட்
60)ரவ்னீத் சிங்
61)துர்காதாஸ் உய்கே
62)ரக்சா நிகில் கட்சே
63)சுகாந்து மஜூம்தார்
64)சாவித்ரி தாக்கூர்
65)தோஹன் சாஹூ
66)ராஜ்பூசன் செளத்ரி
67)பூபதிராஜூ ஸ்ரீநிவாஸ்
68)ஹர்ஸ் மல்கோத்ரா
69)நிமுபென் பாம்பனியா
70)முரளிதர் மொஹோல்
71)ஜார்ஜ் குரியன்
72)பவித்ர மார்கரீட்டா