தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்
நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை…
3ஆவது முறையாகத் தேர்ந்தெடுத்தமைக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் மோதி அவர்கள்
நண்பர்களே, தேசத்தின் மக்கள் நமக்கு, 3ஆவது முறையாக வாய்ப்பளித்திருக்கிறார்கள். அந்த வகையிலே, நம்முடைய பொறுப்புகளும் கூட, மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆகையினாலே, நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கையளிக்க விரும்புகிறேன், நீங்கள் எங்களுக்கு 3ஆவது முறையாக சந்தர்ப்பம் அளித்திருக்கிறீர்கள், இரண்டு முறை அரசாங்கத்தை நடத்திய அனுபவம் எங்களிடம் இருக்கிறது. நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன், இந்த நம்முடைய 3ஆவது ஆட்சிக்காலத்திலே, நாங்கள் முன்பை விட மூன்று மடங்கு அதிகமாக உழைப்போம். மேலும் இந்த உறுதிப்பாட்டோடு கூட, நாங்கள் இந்த புதிய பொறுப்பினை மேற்கொண்டு, எங்கள் கடமைகளை ஆற்றுவோம்.
காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட அவசரநிலை பற்றி நினைவுகூர்கிறார் மோதி அவர்கள்
யாரெல்லாம், பாரதத்தின் மக்களாட்சி முறையின்…… பாரம்பரியங்களின் மீது, அர்ப்பணிப்பு உடையவர்களோ, அவர்களுக்கெல்லாம், ஜூன் 25, மறக்கக்கூடாத தினமாகும். அவசரநிலைக்காலத்தின், இந்த 50 ஆண்டுகள், நமக்களிக்கும் உறுதிப்பாடு, நாம் பெருமையோடு நமது அரசியல்சட்டத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டுமக்கள் உறுதியேற்போம். நம் பாரதத்தில் மீண்டுமொருமுறை, 50 ஆண்டுகள் முன்பு செய்யப்பட்ட, செயலைச் செய்ய யாரும் துணியவே கூடாது. மேலும் மக்களாட்சி முறையின் மீது, களங்கத்தை ஏற்படுத்த விடக்கூடாது.
ஆக்கப்பூர்வமான விவாதங்களே அவையில் மக்களின் எதிர்பார்ப்பு, அமளியல்ல, காங்கிரஸுக்கு அறைகூவல் விடுக்கும் மோதிஜி
தேசத்தின் மக்கள், எதிர்க்கட்சிகளிடம், நல்ல முயற்சிகளையே எதிர்பார்க்கின்றார்கள். இதுவரை அவர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம், இப்போது இந்த, 18ஆவது மக்களவையினிலே, எதிர்க்கட்சிகள், தேசத்தின் சாமான்ய மக்கள் எதிரணியினர் என்ற முறையில் அவர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயகத்தின் கண்ணியத்தைக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதற்கு, இசைவாக நடப்பார்கள், என்று நான் நம்புகிறேன். அவையினிடத்திலே, சாமான்ய மக்களின் எதிர்பார்ப்பு என்றால், விவாதங்களைத் தான், விழிப்புடன் இருத்தலைத் தான். பாசாங்கு செய்தலையோ, பகட்டாக நடத்தலையோ மக்கள் விரும்பவில்லை. இடையூறுகளை விரும்பவில்லை. மக்கள், விரும்புவது ஆக்கப்பூர்வமானதை, வெற்று கோஷங்களை அல்ல.