புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு தயாராகி வருகிறது.
2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதில் மீண்டும் நிதி அமைச்சர் ஆகியுள்ள நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால், கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது புதிதாக அரசு அமைந்துள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
3வது முறையாக மோடி பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதும், தேர்தல்களில் பெற்ற வெற்றி தோல்விகளின் அடிப்படையில், பட்ஜெட் அமையக் கூடும் என்றும் கருத்துகள் தெரிவித்து வருகின்றார்கள். குறிப்பாக, நடுத்தர மக்களின் வருமான வரி தொடர்பில் புதிய கொள்கைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.